Fassarar Ma'anonin Alqura'ni - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Aya: (214) Sura: Suratu Al'bakara
اَمْ حَسِبْتُمْ اَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا یَاْتِكُمْ مَّثَلُ الَّذِیْنَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ ؕ— مَسَّتْهُمُ الْبَاْسَآءُ وَالضَّرَّآءُ وَزُلْزِلُوْا حَتّٰی یَقُوْلَ الرَّسُوْلُ وَالَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ مَتٰی نَصْرُ اللّٰهِ ؕ— اَلَاۤ اِنَّ نَصْرَ اللّٰهِ قَرِیْبٌ ۟
2.214. நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்சென்றவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் போன்று உங்களுக்கும் ஏற்படாமலேயே நீங்கள் சுவனம் சென்றுவிடலாம் என்று எண்ணிக்கொண்டீர்களா? வறுமையும் நோயும் அவர்களைப் பீடித்தது. அவர்கள் கடும் அச்சத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். தூதரும் அவருடன் நம்பிக்கைகொண்டவர்களும்: அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்? என்று அவசரப்படும் அளவுக்கு அவர்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்டார்கள். அறிந்துகொள்ளுங்கள்:அல்லாஹ்வையே நம்பியவர்களுக்கும் அவனையே சார்ந்திருப்பவர்களுக்கும் அவனுடைய உதவி சமீபத்தில் இருக்கிறது.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• ترك شكر الله تعالى على نعمه وترك استعمالها في طاعته يعرضها للزوال ويحيلها بلاءً على صاحبها.
1. அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமலும் அவனுக்குக் கட்டுப்பட்ட வழிகளில் அவற்றைப் பயன்படுத்தாமலும் இருப்பது அவற்றின் அழிவுக்கும் அவை துன்பமாக மாறுவதற்கும் காரணமாக அமைந்துவிடுகிறது.

• الأصل أن الله خلق عباده على فطرة التوحيد والإيمان به، وإبليس وأعوانه هم الذين صرفوهم عن هذه الفطرة إلى الشرك به.
2. இயல்பில் தன் அடியார்கள் தன்னையே வணங்கி, தன்மீதே நம்பிக்கைகொள்ளுமாறுதான் அல்லாஹ் அவர்களைப் படைத்துள்ளான். ஷைத்தானும் அவனுடைய சகாக்களுமே அடியார்களின் இந்த இயல்பிருந்து திசைதிருப்பி இணைவைப்பின் பக்கம் அவர்களைக் கொண்டு செல்கிறார்கள்.

• أعظم الخذلان الذي يؤدي للفشل أن تختلف الأمة في كتابها وشريعتها، فيكفّر بعضُها بعضًا، ويلعن بعضُها بعضًا.
3. சமூகத்தை பலவீனத்தின் பக்கம் இட்டுச் செல்லும் மிக மோசமான வீழ்ச்சி, ஒரு சமூகம் தங்களின் வேதத்திலும் மார்க்கத்திலும் கருத்துவேறுபட்டு ஒருவர் மற்றவரை காஃபிர் என்று கூறுவதும் ஒருவர் மற்றவரை சபிப்பதும்தான்.

• الهداية للحق الذي يختلف فيه الناس، ومعرفة وجه الصواب بيد الله، ويُطلب منه تعالى بالإيمان به والانقياد له.
4. மக்கள் முரண்பட்டுள்ளவற்றில் சரியான வழியை அறிந்து அடைவது அல்லாஹ்வின் கையில்தான் உள்ளது. அவன்மீது நம்பிக்கைகொண்டு அவனுக்குக் கட்டுப்படுவதன் மூலமே அவனிடம் அதனைக் கேட்கவேண்டும்.

• الابتلاء سُنَّة الله تعالى في أوليائه، فيبتليهم بقدر ما في قلوبهم من الإيمان به والتوكل عليه.
5. சோதனை, அல்லாஹ் தன் நேசர்களின் விஷயத்தில் ஏற்படுத்திக் கொண்ட நியதியாகும். அவர்களின் உள்ளத்திலிருக்கும் ஈமான் மற்றும் அவனைச் சார்ந்திருக்கும் தன்மைக்கேற்பவே அவன் அவர்களைச் சோதிக்கிறான்.

• من أعظم ما يعين على الصبر عند نزول البلاء، الاقتداء بالصالحين وأخذ الأسوة منهم.
6. துன்பம் வரும்போது பொறுமையாக இருக்க உதவும் மிகச் சிறந்த வழி நல்லவர்களைப் பின்பற்றுவதும் அவர்களிடமிருந்து முன்மாதிரியைப் பெற்றுக்கொள்வதும்தான்.

 
Fassarar Ma'anoni Aya: (214) Sura: Suratu Al'bakara
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Teburin Bayani kan wasu Fassarori

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Rufewa