Fassarar Ma'anonin Alqura'ni - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Aya: (224) Sura: Suratu Al'bakara
وَلَا تَجْعَلُوا اللّٰهَ عُرْضَةً لِّاَیْمَانِكُمْ اَنْ تَبَرُّوْا وَتَتَّقُوْا وَتُصْلِحُوْا بَیْنَ النَّاسِ ؕ— وَاللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
2.224. அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்து; நன்மையான, இறையச்சமுள்ள செயல், மக்களிடையே சமாதானம் ஏற்படுத்துதல் ஆகிய செயல்களுக்குத் தடையை எற்படுத்திக்கொள்ளவேண்டாம். நீங்கள் நன்மையான ஒரு செயலை விட்டுவிடுவதற்கு சத்தியம் செய்தால் அதனை விட்டுவிடாமல் செய்துவிடுங்கள். சத்தியத்திற்காக பரிகாரம் செய்துவிடுங்கள். நீங்கள் பேசக்கூடியவற்றை அல்லாஹ் செவியேற்கக்கூடியவன்; உங்களின் செயல்களை அவன் நன்கறிந்தவன். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• تحريم النكاح بين المسلمين والمشركين، وذلك لبُعد ما بين الشرك والإيمان.
1. இணைவைப்பாளர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே திருமண உறவு தடைசெய்யப்பட்டுள்ளது. இது ஈமானுக்கும் ஷிர்க்கிற்கும் இடையேயுள்ள தூரத்தினாலாகும்.

• دلت الآية على اشتراط الولي عند عقد النكاح؛ لأن الله تعالى خاطب الأولياء لمّا نهى عن تزويج المشركين.
2. திருமண ஒப்பந்தத்திற்கு பெண்ணின் பொறுப்பாளர் (வலீ) அவசியமாகும். ஏனெனில் அல்லாஹ் "இணைவைப்பாளர்களுக்கு மணமுடித்துக் கொடுக்காதீர்கள்" என்று பெண்ணின் பொறுப்பாளர்களை நோக்கியே உரையாடுகின்றான்.

• حث الشريعة على الطهارة الحسية من النجاسات والأقذار، والطهارة المعنوية من الشرك والمعاصي.
3. அசுத்தம் போன்ற வெளிரங்கமான அழுக்குகளிலிருந்தும் ஷிர்க், பாவங்கள் போன்ற ஆன்மரீதியான அழுக்குகளிலிருந்தும் தூய்மையாக இருக்கும்படி மார்க்கம் வலியுறுத்துகிறது.

• ترغيب المؤمن في أن يكون نظره في أعماله - حتى ما يتعلق بالملذات - إلى الدار الآخرة، فيقدم لنفسه ما ينفعه فيها.
4. இறைவிசுவாசியின் உடல்ரீதியான இன்பம் உட்பட அவனது அனைத்து காரியங்களிலும் அவனது பார்வை மறுமையை நோக்கியதாக இருக்கவேண்டும். அங்கு பயன்தருபவற்றையை முற்படுத்தி அனுப்பிவைக்க வேண்டும்.

 
Fassarar Ma'anoni Aya: (224) Sura: Suratu Al'bakara
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Teburin Bayani kan wasu Fassarori

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Rufewa