Check out the new design

Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Aya: (231) Sura: Al'bakara
وَاِذَا طَلَّقْتُمُ النِّسَآءَ فَبَلَغْنَ اَجَلَهُنَّ فَاَمْسِكُوْهُنَّ بِمَعْرُوْفٍ اَوْ سَرِّحُوْهُنَّ بِمَعْرُوْفٍ ۪— وَلَا تُمْسِكُوْهُنَّ ضِرَارًا لِّتَعْتَدُوْا ۚ— وَمَنْ یَّفْعَلْ ذٰلِكَ فَقَدْ ظَلَمَ نَفْسَهٗ ؕ— وَلَا تَتَّخِذُوْۤا اٰیٰتِ اللّٰهِ هُزُوًا ؗ— وَّاذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَیْكُمْ وَمَاۤ اَنْزَلَ عَلَیْكُمْ مِّنَ الْكِتٰبِ وَالْحِكْمَةِ یَعِظُكُمْ بِهٖ ؕ— وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟۠
2.231. நீங்கள் பெண்களை விவாகரத்து செய்து அவர்களின் இத்தா தவணையை அவர்கள் நெருங்கிவிட்டால் நீங்கள் விரும்பினால் அவர்களை திரும்ப அழைத்துக் கொள்ளலாம் அல்லது அவர்களின் தவணை முடியும்வரை அவர்களை திரும்ப அழைத்துக்கொள்ளாமல் நல்லமுறையில் அவர்களை விட்டுவிடலாம். இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக் காலத்தில் செய்துகொண்டிருந்ததுபோல வரம்புமீறி அவர்களுக்குத் தீங்கிழைப்பதற்காக அவர்களை திரும்ப அழைத்துக் கொள்ளாதீர்கள். யார் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் இவ்வாறு செய்வாரோ அவர் பாவத்திற்கும் தண்டனைக்கும் ஆளாகி தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களை பரிகாசமாகவும் விளையாட்டாகவும் எடுத்துக் கொள்ளாதீர்கள். அல்லாஹ் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளை நினைவுகூருங்கள். அவற்றில் மகத்தானது அவன் உங்கள்மீது இறக்கிய குர்ஆனும் சுன்னாவும்தான். உங்களுக்கு ஆர்வமூட்டுவதற்காகவும் அச்சமூட்டுவதற்காகவும் இவற்றை அவன் உங்களுக்கு நினைவுபடுத்துகின்றான். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். அறிந்துகொள்ளுங்கள், அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவன் உங்களின் செயல்களுக்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான்.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• نهي الرجال عن ظلم النساء سواء كان بِعَضْلِ مَوْلِيَّتِه عن الزواج، أو إجبارها على ما لا تريد.
1. தனது பொறுப்பின் கீழ் உள்ள பெண்ணை திருமணம் செய்யவிடாது தடுப்பதன் மூலமோ அவள் விரும்பாததின் மீது அவளை வற்புறுத்துவதன் மூலமோ பெண்களுக்கு ஆண்கள் அநீதி இழைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

• حَفِظَ الشرع للأم حق الرضاع، وإن كانت مطلقة من زوجها، وعليه أن ينفق عليها ما دامت ترضع ولده.
2. பாலூட்டும் உரிமையை மார்க்கம் தாய்க்கு அளிக்கிறது, அவள் விவாகரத்து அளிக்கப்பட்ட பெண்ணாக இருந்தாலும் சரியே. அவள் பாலூட்டும்வரை அவளுடைய செலவீனங்களைப் பொறுப்பெடுத்துக் கொள்வது குழந்தையின் தந்தை மீதுள்ள கடமையாகும்.

• نهى الله تعالى الزوجين عن اتخاذ الأولاد وسيلة يقصد بها أحدهما الإضرار بالآخر.
3. அல்லாஹ் கணவன் மனைவி இருவரையும் பிள்ளைகளைப் பயன்படுத்தி ஒருவர் மற்றவருக்குத் தீங்கிழைப்பதை விட்டும் தடுத்துள்ளான்.

• الحث على أن تكون كل الشؤون المتعلقة بالحياة الزوجية مبنية على التشاور والتراضي بين الزوجين.
4. திருமண வாழ்க்கை சம்பந்தப்பட்ட அனைத்து விடயங்களும் ஆலோசனை மற்றும் பரஸ்பரம் புரிந்துணர்வின் அடிப்படையிலேயே அமையவேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது.

 
Fassarar Ma'anoni Aya: (231) Sura: Al'bakara
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. - Teburin Bayani kan wasu Fassarori

Wanda aka buga a Cibiyar Tafsiri da karatuttukan AlƘur'ani.

Rufewa