Fassarar Ma'anonin Alqura'ni - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Aya: (26) Sura: Suratu Al'bakara
اِنَّ اللّٰهَ لَا یَسْتَحْیٖۤ اَنْ یَّضْرِبَ مَثَلًا مَّا بَعُوْضَةً فَمَا فَوْقَهَا ؕ— فَاَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا فَیَعْلَمُوْنَ اَنَّهُ الْحَقُّ مِنْ رَّبِّهِمْ ۚ— وَاَمَّا الَّذِیْنَ كَفَرُوْا فَیَقُوْلُوْنَ مَاذَاۤ اَرَادَ اللّٰهُ بِهٰذَا مَثَلًا ۘ— یُضِلُّ بِهٖ كَثِیْرًا وَّیَهْدِیْ بِهٖ كَثِیْرًا ؕ— وَمَا یُضِلُّ بِهٖۤ اِلَّا الْفٰسِقِیْنَ ۟ۙ
2.26. தான் விரும்பும் உதாரணங்களைக் கூறுவதற்கு அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். அவன் கொசுவையோ அல்லது அதைவிடச் சிறியதையோ, பெரியதையோ உதாரணங்களாகக் கூறுகிறான். இவ்விஷயத்தில் மக்கள் இரண்டு பிரிவினராக உள்ளனர். ஒரு பிரிவினர், அவன்மீது நம்பிக்கை கொண்டவர்கள். மற்றவர்கள், அவனை நிராகரிப்பவர்கள். இந்த இருவரில் அவன்மீது நம்பிக்கை கொண்ட மக்கள் அவன் கூறியதை உண்மைப்படுத்தி, இதற்குப் பின்னால் ஒரு நோக்கம் இருக்கின்றது என்பதை அறிந்துகொள்கிறார்கள். ஆனால், அவனை நிராகரிப்பவர்களோ, கொசு, ஈ, சிலந்தி போன்ற அற்பமான படைப்பினங்களையா உதாரணம் கூறுவது? என்று பரிகாசமாகக் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கான பதிலை அல்லாஹ்வே கூறுகிறான்: இந்த உதாரணங்களில் வழிகாட்டல்களும் அறிவுரைகளும் மக்களுக்குச் சோதனையும் இருக்கின்றன. இவற்றைச் சிந்திக்காத காரணத்தால் அவர்களில் அதிகமானவர்களை அவன் வழிதவறச் செய்கிறான். அவர்களில் இவற்றின் மூலம் படிப்பினை பெற்ற அதிகமானோருக்கு அவன் வழிகாட்டவும் செய்கிறான். வழிகேட்டிற்குத் தகுதியானவர்களைத்தான் வழிகேட்டில் ஆழ்த்துகிறான். நயவஞ்சகர்களைப் போல அவனுக்குக் கீழ்ப்படிய மறுப்பவர்களே அவர்கள்.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• من كمال النعيم في الجنة أن ملذاتها لا يكدرها أي نوع من التنغيص، ولا يخالطها أي أذى.
1. சுவன இன்பத்தின் பரிபூரணத் தன்மையில் ஒன்று, அதன் இன்பங்களில் எவ்விதக் கலங்கமும் இருக்காது. அதனுடன் எவ்விதத் தொல்லையும் கலந்திடவும் செய்யாது என்பதாகும்.

• الأمثال التي يضربها الله تعالى لا ينتفع بها إلا المؤمنون؛ لأنهم هم الذين يريدون الهداية بصدق، ويطلبونها بحق.
2. அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே அவன் கூறும் உதாரணங்களிலிருந்து பலனடைவார்கள். ஏனெனில், உண்மையாகவே நேர்வழியை விரும்புவதோடு அதைத் தேடுபவர்களாகவும் உள்ளவர்கள் அவர்களே.

• من أبرز صفات الفاسقين نقضُ عهودهم مع الله ومع الخلق، وقطعُهُم لما أمر الله بوصله، وسعيُهُم بالفساد في الأرض.
3. அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை முறிப்பது, மனிதர்களுடன் செய்த வாக்குறுதியை முறிப்பது, அல்லாஹ் சேர்த்து வாழுமாறு கட்டளையிட்ட இரத்த உறவுகளைத் துண்டிப்பது, பூமியில் குழப்பம் விளைவிக்க முயற்சி செய்வது இவை அனைத்தும் பாவிகளின் பிரதான பண்புகளாகும்.

• الأصل في الأشياء الإباحة والطهارة؛ لأن الله تعالى امتنَّ على عباده بأن خلق لهم كل ما في الأرض.
4. அனைத்துப் பொருட்களும் அனுமதிக்கப்பட்டது, தூய்மையானது என்பதே அடிப்படை விதியாகும். ஏனெனில், அல்லாஹ் பூமியிலுள்ள அனைத்தையும் தனது அடியார்களுக்காகவே படைத்துள்ளதாக கூறிக்காட்டியுள்ளான்.

 
Fassarar Ma'anoni Aya: (26) Sura: Suratu Al'bakara
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Teburin Bayani kan wasu Fassarori

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Rufewa