Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil

external-link copy
57 : 11

فَاِنْ تَوَلَّوْا فَقَدْ اَبْلَغْتُكُمْ مَّاۤ اُرْسِلْتُ بِهٖۤ اِلَیْكُمْ ؕ— وَیَسْتَخْلِفُ رَبِّیْ قَوْمًا غَیْرَكُمْ ۚ— وَلَا تَضُرُّوْنَهٗ شَیْـًٔا ؕ— اِنَّ رَبِّیْ عَلٰی كُلِّ شَیْءٍ حَفِیْظٌ ۟

11.57. நான் கொண்டு வந்ததை நீங்கள் புறக்கணித்தால் எடுத்துரைப்பது மட்டுமே என் மீதுள்ள கடமையாகும். அல்லாஹ் எனக்கு எந்த தூதுப் பணியை அளித்து உங்களுக்கு எடுத்துரைக்கும்படி கட்டளையிட்டானோ அதனை நான் உங்களுக்கு முழுமையாக எடுத்துரைத்து விட்டேன். உங்களுக்கு எதிராக ஆதாரம் நிலைபெற்று விட்டது. என் இறைவன் விரைவில் உங்களை அழித்திடுவான். அவன் உங்களின் இடத்தில் வேறொரு சமூகத்தைக் கொண்டு வருவான். நீங்கள் உங்களின் நிராகரிப்பு, புறக்கணிப்பு மூலம் அல்லாஹ்வுக்கு சிறிய, பெரிய எந்த தீங்கையும் அளித்துவிட முடியாது. ஏனெனில் அவன் தன் அடியார்களை விட்டும் தேவையற்றவன். என் இறைவன் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாவான். எனக்கெதிராக நீங்கள் செய்யும் சூழ்ச்சிகளிலிருந்து அவனே என்னைப் பாதுகாப்பான். info
التفاسير:
Beberapa Faedah Ayat-ayat di Halaman Ini:
• من وسائل المشركين في التنفير من الرسل الاتهام بخفة العقل والجنون.
1. நபிமார்களை விட்டும் வெறுப்பூட்டுவதற்கான இணைவைப்பாளர்களின் வழிமுறைகளில் ஒன்றே, புத்திக்கோளாறு, பைத்தியம் என்ற குற்றங்களைச் சுமத்துவதாகும். info

• ضعف المشركين في كيدهم وعدائهم، فهم خاضعون لله مقهورون تحت أمره وسلطانه.
2.தமது சூழ்ச்சியிலும் எதிர்ப்பிலும் இணைவைப்பாளர்களின் பலவீனம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவர்கள், அவனது கட்டளைக்கும் அதிகாரத்திற்கும் கீழ் அடக்கப்பட்டுள்ளனர். info

• أدلة الربوبية من الخلق والإنشاء مقتضية لتوحيد الألوهية وترك ما سوى الله.
3. படைத்தல், உருவாக்குதல் ஆகிய தெய்வீகத் தன்மைக்கான ஆதாரங்கள், வணக்கத்தில் அல்லாஹ்வை மாத்திரமே ஏகத்துவப்படுத்தி அல்லாஹ்வைத் தவிரவுள்ளவர்களை விட்டுவிட வேண்டும் என்பதை வேண்டி நிற்பனவாகும். info