Check out the new design

Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil * - Daftar isi terjemahan


Terjemahan makna Surah: Yūsuf   Ayah:
وَرَاوَدَتْهُ الَّتِیْ هُوَ فِیْ بَیْتِهَا عَنْ نَّفْسِهٖ وَغَلَّقَتِ الْاَبْوَابَ وَقَالَتْ هَیْتَ لَكَ ؕ— قَالَ مَعَاذَ اللّٰهِ اِنَّهٗ رَبِّیْۤ اَحْسَنَ مَثْوَایَ ؕ— اِنَّهٗ لَا یُفْلِحُ الظّٰلِمُوْنَ ۟
12.23. அரசனின் மனைவி இதமாகவும் தந்திரமாகவும் யூஸுஃபை தவறான நடத்தைக்காக அழைத்தாள். தனிமையை உறுதிப்படுத்த கதவுகள் அனைத்தையும் தாழிட்டுக்கொண்டு, “என் பக்கம் நெருங்கி வா” என்றாள். யூஸுஃப் கூறினார்: “நீ அழைக்கும் விஷயத்திலிருந்து நான் அல்லாஹ்வின் மூலம் பாதுகாவல் தேடுகிறேன். என் எஜமான் என்னை நல்ல முறையில் அவரிடம் தங்க வைத்துள்ளார். நான் அவருக்கு ஒருபோதும் துரோகமிழைக்க மாட்டேன். நான் அவருக்கு துரோகமிழைத்தால் அநியாயக்காரனாக ஆகிவிடுவேன். நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.”
Tafsir berbahasa Arab:
وَلَقَدْ هَمَّتْ بِهٖ وَهَمَّ بِهَا لَوْلَاۤ اَنْ رَّاٰ بُرْهَانَ رَبِّهٖ ؕ— كَذٰلِكَ لِنَصْرِفَ عَنْهُ السُّوْٓءَ وَالْفَحْشَآءَ ؕ— اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُخْلَصِیْنَ ۟
12.24. அவள் மானக்கேடான காரியம் செய்வதற்கு ஆசைகொண்டாள். அவரை அதைவிட்டுத் தடுக்கக்கூடிய, தூரப்படுத்தக்கூடிய அல்லாஹ்வின் அத்தாட்சிகளை அவர் கண்டிருக்காவிட்டால் அவரது உள்ளத்திலும் அது ஏற்பட்டிருக்கும். அவரை விட்டும் தீங்கை அகற்றி விபச்சாரம் மோசடி என்பவற்றை விட்டு அவரை அப்புறப்படுத்தவே நாம் அவருக்கு அவற்றைக் காட்டினோம். நிச்சயமாக யூஸுஃப் நபித்துவம், தூதுப்பணிக்காக நாம் தேர்ந்தெடுத்த அடியார்களில் உள்ளவராவார்.
Tafsir berbahasa Arab:
وَاسْتَبَقَا الْبَابَ وَقَدَّتْ قَمِیْصَهٗ مِنْ دُبُرٍ وَّاَلْفَیَا سَیِّدَهَا لَدَا الْبَابِ ؕ— قَالَتْ مَا جَزَآءُ مَنْ اَرَادَ بِاَهْلِكَ سُوْٓءًا اِلَّاۤ اَنْ یُّسْجَنَ اَوْ عَذَابٌ اَلِیْمٌ ۟
12.25. இருவரும் கதவின்பால் விரைந்தனர். யூஸுஃப் தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஓடினார். அவள் அவரை வெளியேற விடாமல் தடுப்பதற்காக ஓடினாள். வெளியேறுவதைத் தடுக்க அவரது சட்டையைப் பிடித்து அவருடைய ஆடையின் பின் பகுதியை அவள் கிழித்து விட்டாள். கதவுக்கு அருகில் அவளுடைய கணவனை இருவரும் கண்டார்கள். அரசனின் மனைவி தந்திரமாக அரசனிடம் கூறினாள்: “மன்னரே! உங்களின் மனைவியுடன் மானக்கேடான காரியம் செய்ய நாடியவருக்கான தண்டனை, சிறையிலடைத்தல் அல்லது நோவினை தரும் வேதனையைத் தவிர வேறெதுவும் இல்லை.”
Tafsir berbahasa Arab:
قَالَ هِیَ رَاوَدَتْنِیْ عَنْ نَّفْسِیْ وَشَهِدَ شَاهِدٌ مِّنْ اَهْلِهَا ۚ— اِنْ كَانَ قَمِیْصُهٗ قُدَّ مِنْ قُبُلٍ فَصَدَقَتْ وَهُوَ مِنَ الْكٰذِبِیْنَ ۟
12.26. யூஸுஃப் கூறினார்: “அவள்தான் என்னை மானக்கேடான காரியம் செய்ய அழைத்தாள். நான் அவ்வாறு செய்ய நாடவில்லை. அவளுடைய வீட்டில் இருந்த ஒரு குழந்தையை தொட்டிலில் இருந்தவாறு அல்லாஹ் பேசச் செய்தான். அது சாட்சி கூறியது: “யூஸுஃபின் சட்டை முன்புறமாக கிழிக்கப்பட்டிருந்தால் அவள் உண்மை கூறுகிறாள் என்பதற்கான ஆதாரமாகும். அவர் பொய்யராவார். ஏனெனில் அவள் தன்னை விட்டும் அவரைத் தடுத்திருப்பாள்.
Tafsir berbahasa Arab:
وَاِنْ كَانَ قَمِیْصُهٗ قُدَّ مِنْ دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
12.27. அவருடைய சட்டை பின்புறமாகக் கிழிக்கப்பட்டிருந்தால் அது அவர் உண்மை கூறுகிறார் என்பதற்கு ஆதாரமாகும். அவள் பொய் கூறுபவளாவாள். ஏனெனில் அவர் அவளை விட்டும் தப்பி ஓடும் போது அவள் அவரை நாடியிருக்கலாம்.
Tafsir berbahasa Arab:
فَلَمَّا رَاٰ قَمِیْصَهٗ قُدَّ مِنْ دُبُرٍ قَالَ اِنَّهٗ مِنْ كَیْدِكُنَّ ؕ— اِنَّ كَیْدَكُنَّ عَظِیْمٌ ۟
12.28. யூஸுஃபின் சட்டை பின் புறமாக கிழிக்கப்பட்டிருப்பதைக் கண்ட மன்னர் யூஸுஃப் உண்மையாளர் என்பதை அறிந்துகொண்டார். அவர் கூறினார்: “இது -பெண்களாகிய நீங்கள்- செய்த சூழ்ச்சிதான். நிச்சயமாக உங்களின் சூழ்ச்சி கடுமையானதாகும்.”
Tafsir berbahasa Arab:
یُوْسُفُ اَعْرِضْ عَنْ هٰذَا ٚ— وَاسْتَغْفِرِیْ لِذَنْۢبِكِ ۖۚ— اِنَّكِ كُنْتِ مِنَ الْخٰطِـِٕیْنَ ۟۠
12.29. அவர் யூஸுஃபிடம் கூறினார்: “யூஸுஃபே இந்த விடயத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டு விடும். இதனை யாரிடம் கூறிவிடாதீர். பெண்ணே! நீ உன் பாவத்திற்கு மன்னிப்பு தேடிக்கொள். யூஸுஃபை அவரது விருப்பமின்றி கவர்ந்திழுக்க முயற்சி செய்து நீதான் பாவியாகி விட்டாய்.
Tafsir berbahasa Arab:
وَقَالَ نِسْوَةٌ فِی الْمَدِیْنَةِ امْرَاَتُ الْعَزِیْزِ تُرَاوِدُ فَتٰىهَا عَنْ نَّفْسِهٖ ۚ— قَدْ شَغَفَهَا حُبًّا ؕ— اِنَّا لَنَرٰىهَا فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
12.30. அந்தச் செய்தி நகரெங்கும் பரவியது. இதைக் கண்டிக்கும்விதமாக பெண்களில் சிலர் கூறினார்கள்: “அரசனின் மனைவி தன் அடிமையை தன்பக்கம் கவர்ந்திழுக்க முயற்சி செய்தாள். அவள் தன்அடிமையின் மீது காதலில் விழுந்து விட்டாள். -தனது அடிமையில்- அவள் மதிமயங்கி அவர் மீது கொண்ட அன்பினால் அவள் தெளிவான தவறில் உள்ளதாகவே நாம் கருதுகிறோம்.
Tafsir berbahasa Arab:
Beberapa Faedah Ayat-ayat di Halaman Ini:
• قبح خيانة المحسن في أهله وماله، الأمر الذي ذكره يوسف من جملة أسباب رفض الفاحشة.
1. மனிதன் தனக்கு நன்மை செய்வோரின் குடும்பத்திலும் சொத்திலும் துரோகமிழைப்பது மிகவும் மோசமான ஒன்றாகும். யூஸுஃப் (அலை) மானக்கேடான செயலை நிராகரித்ததற்கு குறிப்பிட்ட காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.

• بيان عصمة الأنبياء وحفظ الله لهم من الوقوع في السوء والفحشاء.
2. இறைத்தூதர்களை அல்லாஹ் தீய காரியம் மற்றும் மானக்கேடான காரியங்களிலிருந்து பாதுகாத்துள்ளான்.

• وجوب دفع الفاحشة والهرب والتخلص منها.
3. மானக்கேடான காரியத்தை தடுத்து விடுவதும் அதிலிருந்து வெருண்டோடி தப்பிப்பதும் கட்டாயமாகும்.

• مشروعية العمل بالقرائن في الأحكام.
4. தீர்ப்புக்களில் அடையாளங்களை வைத்து செயற்பட அனுமதியுண்டு.

 
Terjemahan makna Surah: Yūsuf
Daftar surah Nomor Halaman
 
Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil - Daftar isi terjemahan

Diterbitkan oleh Markaz Tafsīr Li Ad-Dirasāt Al-Qur`āniyyah.

Tutup