Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil

external-link copy
60 : 24

وَالْقَوَاعِدُ مِنَ النِّسَآءِ الّٰتِیْ لَا یَرْجُوْنَ نِكَاحًا فَلَیْسَ عَلَیْهِنَّ جُنَاحٌ اَنْ یَّضَعْنَ ثِیَابَهُنَّ غَیْرَ مُتَبَرِّجٰتٍ بِزِیْنَةٍ ؕ— وَاَنْ یَّسْتَعْفِفْنَ خَیْرٌ لَّهُنَّ ؕ— وَاللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ ۟

24.60. திருமணத்தில் ஆர்வமில்லாத, கர்ப்பிணியாக முடியாத, மாதவிடாய் நின்றுவிட்ட மூதாட்டிகள் தங்களின் மறைக்குமாறு ஏவப்பட்ட மறைவான அலங்காரத்தை வெளிப்படுத்தாமல் மேலாடை முகத்திரை போன்ற சில ஆடைகளைக் களைந்து விடுவதில் எவ்விதக் குற்றமுமில்லை. இவ்வாறு சில ஆடைகளைக் களைவதைக்காட்டிலும் மறைப்பது, பக்குவத்திற்காக அவற்றை அணிந்துகொள்வதே அவர்களுக்குச் சிறந்ததாகும். நீங்கள் பேசுவதை அல்லாஹ் செவியேற்கக்கூடியவன்; உங்களின் செயல்களை அவன் நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான். info
التفاسير:
Beberapa Faedah Ayat-ayat di Halaman Ini:
• جواز وضع العجائز بعض ثيابهنّ لانتفاء الريبة من ذلك.
1. மூதாட்டிகள் தங்களின் சில ஆடைகளைக் களைந்து கொள்ளலாம். ஏனெனில் அதில் சந்தேகத்துக்கு வாய்ப்பில்லை என்பதால். info

• الاحتياط في الدين شأن المتقين.
2. மார்க்கத்தில் பேணுதலைக் கடைப்பிடிப்பதே இறையச்சமுடையோரின் வழக்கமாகும். info

• الأعذار سبب في تخفيف التكليف.
3. நியாயங்கள், கடமை தளர்த்தப்படுவதற்கான ஒரு காரணமாகும். info

• المجتمع المسلم مجتمع التكافل والتآزر والتآخي.
4. முஸ்லிம் சமூகம் தங்களிடையே உதவிக்கொள்ளக்கூடிய, சகோதரத்துவமிக்க சமூகமாகும். info