Check out the new design

Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil * - Daftar isi terjemahan


Terjemahan makna Surah: Al-Furqān   Ayah:
اَمْ تَحْسَبُ اَنَّ اَكْثَرَهُمْ یَسْمَعُوْنَ اَوْ یَعْقِلُوْنَ ؕ— اِنْ هُمْ اِلَّا كَالْاَنْعَامِ بَلْ هُمْ اَضَلُّ سَبِیْلًا ۟۠
25.44. மாறாக -தூதரே!- ஏகத்துவத்தை ஏற்குமாறும், அல்லாஹ்வுக்கு கட்டுப்படுமாறும் நீர் அழைப்பவர்களில் பெரும்பாலோர் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் நோக்கில் செவியேற்கிறார்கள் அல்லது ஆதாரங்களை விளங்கிக் கொள்கிறார்கள் என்று நீர் எண்ணுகிறீரா? அவர்கள் செவியேற்பதிலும் விளங்கிக் கொள்வதிலும் கால்நடைகளைப் போன்றவர்கள். மாறாக அவற்றை விடவும் வழிகெட்டவர்கள்.
Tafsir berbahasa Arab:
اَلَمْ تَرَ اِلٰی رَبِّكَ كَیْفَ مَدَّ الظِّلَّ ۚ— وَلَوْ شَآءَ لَجَعَلَهٗ سَاكِنًا ۚ— ثُمَّ جَعَلْنَا الشَّمْسَ عَلَیْهِ دَلِیْلًا ۟ۙ
25.45. -தூதரே!- அல்லாஹ் பூமியின் மீது நிழலை பரப்பும்போது அவனுடைய படைப்பின் அடையாளங்களை நீர் பார்க்கவில்லையா? அவன் நாடியிருந்தால் அதனை அசைவற்றதாக ஒரே நிலையில் அவ்வாறே ஆக்கி வைத்திருப்பான். பின்னர் நாம் சூரியனை அதற்கு ஆதாரமாக ஆக்கியுள்ளோம். நிழலை அதிகரிக்கவும் குறைக்கவும் செய்கிறது.
Tafsir berbahasa Arab:
ثُمَّ قَبَضْنٰهُ اِلَیْنَا قَبْضًا یَّسِیْرًا ۟
25.46. பின்னர் சூரியன் உயர்வதற்கேற்ப நாம் நிழலை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கைப்பற்றிக் கொள்கின்றோம்.
Tafsir berbahasa Arab:
وَهُوَ الَّذِیْ جَعَلَ لَكُمُ الَّیْلَ لِبَاسًا وَّالنَّوْمَ سُبَاتًا وَّجَعَلَ النَّهَارَ نُشُوْرًا ۟
25.47. அல்லாஹ் உங்களுக்கு இரவை ஆடையைப் போன்று ஆக்கியுள்ளான். அது உங்களையும் பொருள்களையும் மறைக்கிறது. அவன் தூக்கத்தை உங்களது வேலைகளிலிருந்து உங்களுக்கு ஓய்வாகவும் பகலை உங்களது தொழில்களுக்குப் புறப்படும் நேரமாகவும் ஆக்கியுள்ளான்.
Tafsir berbahasa Arab:
وَهُوَ الَّذِیْۤ اَرْسَلَ الرِّیٰحَ بُشْرًاۢ بَیْنَ یَدَیْ رَحْمَتِهٖ ۚ— وَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً طَهُوْرًا ۟ۙ
25.48. அவனே தன் அடியார்களின் மீது தனது அருளான மழையைக் கொண்டு நற்செய்தி கூறக்கூடியதாக காற்றுகளை அனுப்பி வைக்கிறான். நாம் வானத்திலிருந்து தூய்மையான மழை நீரை இறக்கினோம். அதனால் அவர்கள் சுத்தம் செய்கிறார்கள்.
Tafsir berbahasa Arab:
لِّنُحْیِ بِهٖ بَلْدَةً مَّیْتًا وَّنُسْقِیَهٗ مِمَّا خَلَقْنَاۤ اَنْعَامًا وَّاَنَاسِیَّ كَثِیْرًا ۟
25.49. இறக்கப்பட்ட அந்த மழை நீரைக் கொண்டு பயிரற்ற வறண்ட பூமியில் பலவகையான தாவரங்களை முளைக்கச் செய்கிறோம். மேலும் பச்சை பசேலென செழிக்கவும் செய்கிறோம். அந்த நீரைக் கொண்டு நாம் படைத்த கால்நடைகளுக்கும் ஏராளமான மனிதர்களுக்கும் நீர் புகட்டுகிறோம்.
Tafsir berbahasa Arab:
وَلَقَدْ صَرَّفْنٰهُ بَیْنَهُمْ لِیَذَّكَّرُوْا ۖؗ— فَاَبٰۤی اَكْثَرُ النَّاسِ اِلَّا كُفُوْرًا ۟
25.50. நாம் குர்ஆனில் அவர்கள் படிப்பினை பெறும்பொருட்டு பலவகையான ஆதாரங்களைத் தெளிவுபடுத்தி விட்டோம். ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் சத்தியத்தை நிராகரித்தும், வெறுத்தும் மறுக்கிறார்கள்.
Tafsir berbahasa Arab:
وَلَوْ شِئْنَا لَبَعَثْنَا فِیْ كُلِّ قَرْیَةٍ نَّذِیْرًا ۟ؗۖ
25.51. நாம் நாடியிருந்தால் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தூதரை அல்லாஹ்வின் வேதனையிலிருந்து எச்சரிக்கை செய்யக்கூடியவராக அனுப்பியிருப்போம். ஆயினும் நாம் அதனை நாடவில்லை. நிச்சயமாக நாம் முஹம்மதை மனிதர்கள் அனைவருக்குமே தூதராக அனுப்பியுள்ளோம்.
Tafsir berbahasa Arab:
فَلَا تُطِعِ الْكٰفِرِیْنَ وَجَاهِدْهُمْ بِهٖ جِهَادًا كَبِیْرًا ۟
25.52. நிராகரிப்பாளர்கள் உம்மிடம் வேண்டும் மார்க்கத்தை விட்டுக் கொடுத்தலுக்கும் அவர்கள் முன்வைக்கும் ஆலோசனைகளுக்கும் கீழ்ப்படியாதீர். இந்த இறக்கப்பட்ட குர்ஆனைக் கொண்டு அவர்களுடன் கடுமையாகப் போராடுவீராக. அல்லாஹ்வின்பால் அழைப்பதில் அவர்களால் ஏற்படும் தொல்லைகளையும் துன்பங்களையும் பொறுமையுடன் சகித்துக் கொள்வீராக.
Tafsir berbahasa Arab:
وَهُوَ الَّذِیْ مَرَجَ الْبَحْرَیْنِ هٰذَا عَذْبٌ فُرَاتٌ وَّهٰذَا مِلْحٌ اُجَاجٌ ۚ— وَجَعَلَ بَیْنَهُمَا بَرْزَخًا وَّحِجْرًا مَّحْجُوْرًا ۟
25.53. அல்லாஹ்வே இரண்டு கடல் நீரையும் ஒன்றிணைத்தான். சுவையானதை உப்பு நீரோடு கலந்தான். அவையிரண்டும் கலக்காமல் இருப்பதற்காக இரண்டிற்குமிடையே ஒரு திரையையும் தடுப்பையும் ஏற்படுத்தியுள்ளான்.
Tafsir berbahasa Arab:
وَهُوَ الَّذِیْ خَلَقَ مِنَ الْمَآءِ بَشَرًا فَجَعَلَهٗ نَسَبًا وَّصِهْرًا ؕ— وَكَانَ رَبُّكَ قَدِیْرًا ۟
25.54. அவனே ஆண் மற்றும் பெண்ணின் விந்திலிருந்து மனிதனைப் படைத்தான். மனிதப் படைப்பில் இரத்த உறவுகளையும் திருமண உறவுகளையும் ஏற்படுத்தினான். -தூதரே!- உம் இறைவன் பேராற்றல் உடையவன். எதுவும் அவனுக்கு முடியாதது அல்ல. ஆண் மற்றும் பெண்ணின் விந்திலிருந்து அவன் மனிதனைப் படைத்ததும் அவனுடைய ஆற்றலில் உள்ளடங்கியவைதான்.
Tafsir berbahasa Arab:
وَیَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا یَنْفَعُهُمْ وَلَا یَضُرُّهُمْ ؕ— وَكَانَ الْكَافِرُ عَلٰی رَبِّهٖ ظَهِیْرًا ۟
25.55. வழிப்பட்டால் பலனளிக்கவோ, மாறு செய்தால் தீங்களிக்கவோ சக்தியற்ற அல்லாஹ் அல்லாத சிலைகளை நிராகரிப்பாளர்கள் வணங்குகிறார்கள். அல்லாஹ்வுக்கு கோபம் ஏற்படுத்துவதில் நிராகரிப்பாளன் ஷைத்தானைப் பின்பற்றக்கூடியவனாக இருக்கின்றான்.
Tafsir berbahasa Arab:
Beberapa Faedah Ayat-ayat di Halaman Ini:
• انحطاط الكافر إلى مستوى دون مستوى الحيوان بسبب كفره بالله.
1. நிராகரிப்பாளன் அல்லாஹ்வை நிராகரித்ததனால் கால்நடைகளின் அந்தஸ்த்தை விடவும் தாழ்ந்துவிடுகிறான்.

• ظاهرة الظل آية من آيات الله الدالة على قدرته.
2. நிழல் அல்லாஹ்வின் வல்லமையை அறிவிக்கும் அவனுடைய சான்றுகளின் ஒரு வெளிப்பாடாகும்.

• تنويع الحجج والبراهين أسلوب تربوي ناجح.
3.பல்வேறு விதமான ஆதாரங்களை முன்வைப்பது வெற்றிகரமான பயிற்றுவித்தல் முறையாகும்.

• الدعوة بالقرآن من صور الجهاد في سبيل الله.
4. அல்குர்ஆனின் மூலம் பிரச்சாரம் செய்வது அல்லாஹ்வின் பாதையில் போராடுவதில் ஒரு வகையாகும்.

 
Terjemahan makna Surah: Al-Furqān
Daftar surah Nomor Halaman
 
Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil - Daftar isi terjemahan

Diterbitkan oleh Markaz Tafsīr Li Ad-Dirasāt Al-Qur`āniyyah.

Tutup