Check out the new design

Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil * - Daftar isi terjemahan


Terjemahan makna Surah: Al-'Ankabūt   Ayah:
فَاَنْجَیْنٰهُ وَاَصْحٰبَ السَّفِیْنَةِ وَجَعَلْنٰهَاۤ اٰیَةً لِّلْعٰلَمِیْنَ ۟
29.15. நாம் நூஹையும் அவருடன் கப்பலில் இருந்த நம்பிக்கைகொண்டவர்களையும் வெள்ளத்தில் மூழ்கி அழிவதிலிருந்து காப்பாற்றினோம். நாம் அந்தக் கப்பலை படிப்பினை பெறுவோருக்குப் படிப்பினையாக ஆக்கினோம்.
Tafsir berbahasa Arab:
وَاِبْرٰهِیْمَ اِذْ قَالَ لِقَوْمِهِ اعْبُدُوا اللّٰهَ وَاتَّقُوْهُ ؕ— ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟
29.16. -தூதரே!- இப்ராஹீமின் சம்பவத்தை, அவர் தம் சமூகத்திடம் கூறிய வேளையை நினைவுகூர்வீராக. : “அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனுடைய வேதனையை அஞ்சிக் கொள்ளுங்கள். நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் மேலே கட்டளையிடப்பட்டதே உங்களுக்குச் சிறந்தாகும்.
Tafsir berbahasa Arab:
اِنَّمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اَوْثَانًا وَّتَخْلُقُوْنَ اِفْكًا ؕ— اِنَّ الَّذِیْنَ تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَا یَمْلِكُوْنَ لَكُمْ رِزْقًا فَابْتَغُوْا عِنْدَ اللّٰهِ الرِّزْقَ وَاعْبُدُوْهُ وَاشْكُرُوْا لَهٗ ؕ— اِلَیْهِ تُرْجَعُوْنَ ۟
29.17. -இணைவைப்பாளர்களே!- உங்களுக்குப் பலனளிக்கவோ தீங்கிழைக்கவோ சக்தியற்ற சிலைகளைத்தான் நீங்கள் வணங்குகிறீர்கள். அவற்றை வணக்கத்திற்குத் தகுதியானவை என்று எண்ணி நீங்கள் இட்டுக்கட்டுகிறீர்கள். நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கும் தெய்வங்கள் உங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்க சக்தி பெறாது. அல்லாஹ்விடமே வாழ்வாதாரம் தேடுங்கள். அவனே வாழ்வாதாரம் அளிக்கக்கூடியவன். அவனை மட்டுமே வணங்குங்கள். அவன் உங்களுக்கு அளித்த அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்துங்கள். நீங்கள் மறுமை நாளில் விசாரணைக்காகவும் கூலி பெறுவதற்காகவும் அவனிடமே திரும்ப வேண்டும். உங்களின் சிலைகளிடம் அல்ல.
Tafsir berbahasa Arab:
وَاِنْ تُكَذِّبُوْا فَقَدْ كَذَّبَ اُمَمٌ مِّنْ قَبْلِكُمْ ؕ— وَمَا عَلَی الرَّسُوْلِ اِلَّا الْبَلٰغُ الْمُبِیْنُ ۟
29.18. -இணைவைப்பாளர்களே!- நீங்கள் முஹம்மது கொண்டுவந்ததை பொய்ப்பித்தால் உங்களுக்கு முன்னர் வாழ்ந்த நூஹின் சமுதாயம், ஆத், சமூத் போன்ற சமூகங்களும் பொய்ப்பித்துள்ளன. தெளிவாக எடுத்துரைப்பதுதான் தூதர் மீதுள்ள கடமையாகும். தம் இறைவன் உங்களுக்கு எடுத்துரைக்குமாறு கட்டளையிட்டதை அவர் உங்களுக்கு எடுத்துரைத்துவிட்டார்.
Tafsir berbahasa Arab:
اَوَلَمْ یَرَوْا كَیْفَ یُبْدِئُ اللّٰهُ الْخَلْقَ ثُمَّ یُعِیْدُهٗ ؕ— اِنَّ ذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرٌ ۟
29.19. அல்லாஹ் எவ்வாறு படைப்பைத் தொடங்குகிறான், பின்னர் அவை அழிந்த பிறகு மீண்டும் உயிர்ப்பிக்கிறான் என்பதை இந்த பொய்ப்பிப்பவர்கள் பாரக்கவில்லையா?! நிச்சயமாக அல்லாஹ்வுக்கு அது இலகுவானதாகும். அவன் ஆற்றலுள்ளவன். அவனுக்கு எதுவும் இயலாததல்ல.
Tafsir berbahasa Arab:
قُلْ سِیْرُوْا فِی الْاَرْضِ فَانْظُرُوْا كَیْفَ بَدَاَ الْخَلْقَ ثُمَّ اللّٰهُ یُنْشِئُ النَّشْاَةَ الْاٰخِرَةَ ؕ— اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟ۚ
29.20. -தூதரே!- மறுமையில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுக்கும் இவர்களிடம் கூறுவீராக: “பூமியில் சுற்றித் திரிந்து அல்லாஹ் எவ்வாறு படைப்பைத் தொடங்கினான் என்பதையும் பின்னர் அவன் மனிதர்கள் மரணித்த பிறகு விசாரணைக்காக எவ்வாறு அவர்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புகிறான் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள். நிச்சயமாக அவன் ஒவ்வொன்றின் மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனை இயலாமையில் ஆழ்த்திவிட முடியாது. முதலில் எப்படி அவனுக்கு மக்களைப் படைக்க முடியாமல் இருக்கவில்லையோ அது போன்றே அவர்களை எழுப்பவும் அவன் முடியாதவனல்ல.
Tafsir berbahasa Arab:
یُعَذِّبُ مَنْ یَّشَآءُ وَیَرْحَمُ مَنْ یَّشَآءُ ۚ— وَاِلَیْهِ تُقْلَبُوْنَ ۟
29.21. அவன் தன் படைப்புகளில் தான் நாடியவர்களை தன் நீதியால் தண்டிக்கிறான். தான் நாடியோர் மீது தன் அருளால் கருணை காட்டுகிறான். உங்களின் அடக்கஸ்த்தலங்களிலிருந்து உயிருடன் உங்களை அவன் எழுப்பும் போது மறுமை நாளில் விசாரணைக்காக அவனிடம் மட்டுமே செல்ல வேண்டும்.
Tafsir berbahasa Arab:
وَمَاۤ اَنْتُمْ بِمُعْجِزِیْنَ فِی الْاَرْضِ وَلَا فِی السَّمَآءِ ؗ— وَمَا لَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِیٍّ وَّلَا نَصِیْرٍ ۟۠
29.22. பூமியிலோ, வானத்திலோ நீங்கள் உங்கள் இறைவனின் தண்டனையிலிருந்து தப்பிவிட முடியாது. அல்லாஹ்வைத் தவிர உங்களின் விவகாரங்களுக்குப் பொறுப்பேற்கும் பொறுப்பாளன் யாரும் இல்லை. அவனைத் தவிர அவனது வேதனையை உங்களை விட்டும் அகற்றும் எந்த உதவியாளரும் இல்லை.
Tafsir berbahasa Arab:
وَالَّذِیْنَ كَفَرُوْا بِاٰیٰتِ اللّٰهِ وَلِقَآىِٕهٖۤ اُولٰٓىِٕكَ یَىِٕسُوْا مِنْ رَّحْمَتِیْ وَاُولٰٓىِٕكَ لَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
29.23. அல்லாஹ்வின் வசனங்களையும் மறுமை நாளில் அவனை சந்திப்பதையும் நிராகரித்தவர்கள் என் அருளை விட்டும் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். அவர்கள் தங்களின் நிராகரிப்பினால் சுவனத்தில் ஒருபோதும் நுழைய மாட்டார்கள். மறுமையில் அவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை காத்திருக்கின்றது.
Tafsir berbahasa Arab:
Beberapa Faedah Ayat-ayat di Halaman Ini:
• الأصنام لا تملك رزقًا، فلا تستحق العبادة.
1. சிலைகள் வாழ்வாதாரம் அளிக்க சக்தியற்றவை. ஆகவே அவை வணக்கத்திற்குத் தகுதியானவையன்று.

• طلب الرزق إنما يكون من الله الذي يملك الرزق.
2. வாழ்வாதாரம் அளிக்க ஆற்றலுடைய அல்லாஹ்விடமே வாழ்வாதாரம் தேட வேண்டும்.

• بدء الخلق دليل على البعث.
3. ஆரம்பமாகப் படைத்தல் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதற்கான ஆதாரமாகும்.

• دخول الجنة محرم على من مات على كفره.
4. நிராகரித்த நிலையிலேயே மரணித்தவர் சுவனம் செல்வது தடைசெய்யப்பட்டதாகும்.

 
Terjemahan makna Surah: Al-'Ankabūt
Daftar surah Nomor Halaman
 
Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil - Daftar isi terjemahan

Diterbitkan oleh Markaz Tafsīr Li Ad-Dirasāt Al-Qur`āniyyah.

Tutup