Check out the new design

Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil * - Daftar isi terjemahan


Terjemahan makna Surah: As-Sajdah   Ayah:

அஸ்ஸஜதா

Tujuan Pokok Surah Ini:
بيان حقيقة الخلق وأحوال الإنسان في الدنيا والآخرة.
படைப்பினங்களின் யதார்த்தத்தையும் ஈருலகிலும் மனிதனின் நிலைகளையும் தெளிவுபடுத்தல்

الٓمّٓ ۟ۚ
32.1. (الٓـمٓ) இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
Tafsir berbahasa Arab:
تَنْزِیْلُ الْكِتٰبِ لَا رَیْبَ فِیْهِ مِنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟ؕ
32.2. முஹம்மது கொண்டுவந்த இந்த குர்ஆன் படைப்புகள் அனைத்தையும் படைத்துப்பராமரிக்கும் இறைவனிடமிருந்து இறக்கப்பட்டதாகும். அதில் எத்தகைய சந்தேகமும் இல்லை.
Tafsir berbahasa Arab:
اَمْ یَقُوْلُوْنَ افْتَرٰىهُ ۚ— بَلْ هُوَ الْحَقُّ مِنْ رَّبِّكَ لِتُنْذِرَ قَوْمًا مَّاۤ اَتٰىهُمْ مِّنْ نَّذِیْرٍ مِّنْ قَبْلِكَ لَعَلَّهُمْ یَهْتَدُوْنَ ۟
32.3. நிச்சயமாக இந்த நிராகரிப்பாளர்கள் கூறுகிறார்கள்: “திட்டமாக முஹம்மது தம் இறைவனின் பெயரால் இதனைப் புனைந்துள்ளார், என்று.” அவர்கள் கூறுவது போலல்ல விடயம். மாறாக அது உம் இறைவனிடமிருந்து உம்மீது இறங்கிய சந்தேகமற்ற உண்மையாகும். -தூதரே!- உமக்கு முன்னால் அல்லாஹ்வின் வேதனையை எச்சரிக்கும் தூதர்கள் வராத சமூகத்திற்கு நீர் எச்சரிப்பதற்கே அது இறக்கப்பட்டுள்ளது. அவர்கள் சத்தியத்தின்பால் நேர்வழிபெற்று அதனைப் பின்பற்றி அதன் படி செயற்படலாம்.”
Tafsir berbahasa Arab:
اَللّٰهُ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَا فِیْ سِتَّةِ اَیَّامٍ ثُمَّ اسْتَوٰی عَلَی الْعَرْشِ ؕ— مَا لَكُمْ مِّنْ دُوْنِهٖ مِنْ وَّلِیٍّ وَّلَا شَفِیْعٍ ؕ— اَفَلَا تَتَذَكَّرُوْنَ ۟
32.4. அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் அவையிரண்டிற்கு இடையிலுள்ளதையும் ஆறு நாட்களில் படைத்தான். அவன் அவற்றைக் கண் சிமிட்டும் நேரத்தைவிட குறைவான நேரத்தில் படைப்பதற்கும் ஆற்றலுடையவன். பின்னர் தன் கண்ணியத்திற்கேற்ப அர்ஷின் மீது உயர்ந்துவிட்டான். -மனிதர்களே!- உங்களுக்கு அவனைத் தவிர உங்களின் காரியங்களை பொறுப்பெடுக்கும் பொறுப்பாளனோ, உங்களுக்கு உங்கள் இறைவனிடத்தில் பரிந்துரை செய்பவனோ யாரும் இல்லை. நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? உங்களைப் படைத்த அல்லாஹ்வுடன் எதனையும் இணையாக்காமல் அவனை மாத்திரம் வணங்க மாட்டீர்களா?
Tafsir berbahasa Arab:
یُدَبِّرُ الْاَمْرَ مِنَ السَّمَآءِ اِلَی الْاَرْضِ ثُمَّ یَعْرُجُ اِلَیْهِ فِیْ یَوْمٍ كَانَ مِقْدَارُهٗۤ اَلْفَ سَنَةٍ مِّمَّا تَعُدُّوْنَ ۟
32.5. வானங்களிலும் பூமியிலும் படைப்பினங்கள் அனைத்தின் விவகாரங்களையும் அவனே நிர்வகிக்கிறான். பின்னர் அவை ஒரு நாள் அவனிடம் சென்றுவிடும். -மனிதர்களே!- அந்த நாளின் அளவு உலகில் நீங்கள் கணக்கிடும் ஆயிரம் வருடங்களாகும்.
Tafsir berbahasa Arab:
ذٰلِكَ عٰلِمُ الْغَیْبِ وَالشَّهَادَةِ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟ۙ
32.6. இவற்றையெல்லாம் நிர்வகிப்பவனே மறைவான, வெளிப்படையான ஒவ்வொன்றையும் அறிந்தவன். அவை இரண்டிலும் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. தன் எதிரிகளைத் தண்டிக்கும் அவன் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. நம்பிக்கைகொண்ட தன் அடியார்களோடு அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.
Tafsir berbahasa Arab:
الَّذِیْۤ اَحْسَنَ كُلَّ شَیْءٍ خَلَقَهٗ وَبَدَاَ خَلْقَ الْاِنْسَانِ مِنْ طِیْنٍ ۟ۚ
32.7. அவன் ஒவ்வொரு பொருளையும் சிறந்த முறையில் படைத்துள்ளான். ஆதமை முன்மாதிரியின்றி மண்ணிலிருந்து படைக்கத் தொடங்கினான்.
Tafsir berbahasa Arab:
ثُمَّ جَعَلَ نَسْلَهٗ مِنْ سُلٰلَةٍ مِّنْ مَّآءٍ مَّهِیْنٍ ۟ۚ
32.8. அதன் பின்னர் அவனுடைய சந்ததியினரை அவனிலிருந்து வெளியான விந்திலிருந்து படைத்தான்.
Tafsir berbahasa Arab:
ثُمَّ سَوّٰىهُ وَنَفَخَ فِیْهِ مِنْ رُّوْحِهٖ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَالْاَفْـِٕدَةَ ؕ— قَلِیْلًا مَّا تَشْكُرُوْنَ ۟
32.9. பின்னர் மனிதனை செம்மையாக்கி, முழுமைப்படுத்தி அவனுள் தன் ஆன்மாவை அதற்காக அவன் நிர்ணயித்த வானவரின்மூலம் ஊதினான். -மனிதர்களே!- நீங்கள் கேட்பதற்காக செவிகளையும் பார்ப்பதற்காக கண்களையும் புரிந்துகொள்வதற்காக உள்ளங்களையும் அவன் உங்களுக்கு ஏற்படுத்தியுள்ளான். ஆயினும் அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த இந்த அருட்கொடைகளுக்கு நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.
Tafsir berbahasa Arab:
وَقَالُوْۤا ءَاِذَا ضَلَلْنَا فِی الْاَرْضِ ءَاِنَّا لَفِیْ خَلْقٍ جَدِیْدٍ ؕ۬— بَلْ هُمْ بِلِقَآءِ رَبِّهِمْ كٰفِرُوْنَ ۟
32.10. மறுமையை மறுக்கும் இணைவைப்பாளர்கள் கூறுகிறார்கள்: “நாம் மரணித்து பூமியில் மறைந்துவிட்டாலும், நம்முடைய உடல்கள் மண்ணோடு மண்ணாகிவிட்டாலும் நாம் மீண்டும் புதிதாக உயிர்கொடுத்து எழுப்பப்படுவோமா? இது புரிந்துகொள்ள முடியாததாக இருக்கின்றதே!” உண்மையான விடயம் யாதெனில் அவர்கள் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை நம்பாத நிராகரிப்பாளர்களாக இருக்கின்றார்கள்.
Tafsir berbahasa Arab:
قُلْ یَتَوَفّٰىكُمْ مَّلَكُ الْمَوْتِ الَّذِیْ وُكِّلَ بِكُمْ ثُمَّ اِلٰی رَبِّكُمْ تُرْجَعُوْنَ ۟۠
32.11. -தூதரே!- மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை பொய்ப்பிக்கும் இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: ”அல்லாஹ் உங்களின் உயிர்களை கைப்பற்றுவதற்காக நியமித்த மரணத்தின் வானவர் உங்களின் உயிர்களைக் கைப்பற்றுவார். பின்னர் மறுமை நாளில் விசாரணைக்காகவும் கூலி வழங்கப்படுவதற்காகவும் நீங்கள் நம் பக்கம் மட்டுமே திரும்ப வேண்டும்.
Tafsir berbahasa Arab:
Beberapa Faedah Ayat-ayat di Halaman Ini:
• الحكمة من بعثة الرسل أن يهدوا أقوامهم إلى الصراط المستقيم.
1. தூதர்கள் அனுப்பப்பட்டதன் நோக்கம், அவர்களின் சமூகங்களுக்கு நேரான வழியைக் காட்ட வேண்டும் என்பதற்காகத்தான்.

• ثبوت صفة الاستواء لله من غير تشبيه ولا تمثيل.
2. உவமை கூறாது உதாரணம் கூறாது அல்லாஹ்வுக்கு உயர்தல் என்ற பண்பு உள்ளது என்பதை உறுதிப்படுத்தல்.

• استبعاد المشركين للبعث مع وضوح الأدلة عليه.
3.மறுமையில் எழுப்பப்படுவதற்கான ஆதாரங்கள் தெளிவாக இருந்தும் இணைவைப்பாளர்கள் அதனை சாத்தியமற்றதாகக் கருதுதல்.

 
Terjemahan makna Surah: As-Sajdah
Daftar surah Nomor Halaman
 
Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil - Daftar isi terjemahan

Diterbitkan oleh Markaz Tafsīr Li Ad-Dirasāt Al-Qur`āniyyah.

Tutup