Check out the new design

Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil * - Daftar isi terjemahan


Terjemahan makna Surah: Ṣād   Ayah:
وَمَا خَلَقْنَا السَّمَآءَ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَا بَاطِلًا ؕ— ذٰلِكَ ظَنُّ الَّذِیْنَ كَفَرُوْا ۚ— فَوَیْلٌ لِّلَّذِیْنَ كَفَرُوْا مِنَ النَّارِ ۟ؕ
38.27. நாம் வானத்தையும் பூமியையும் வீணாகப் படைக்கவில்லை. அவையிரண்டும் வீணாகப் படைக்கப்பட்டுள்ளது என்று எண்ணுவது நிராகரிப்பாளர்களின் எண்ணமாகும். இந்த எண்ணத்தில் இருக்கக்கூடிய இந்த நிராகரிப்பாளர்கள் நிராகரித்த நிலையிலும் அல்லாஹ்வைப் பற்றிய தவறான எண்ணத்துடனும் மரணித்துவிட்டால் மறுமை நாளில் அவர்களுக்கு நரக வேதனையின் கேடுதான் உண்டு.
Tafsir berbahasa Arab:
اَمْ نَجْعَلُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ كَالْمُفْسِدِیْنَ فِی الْاَرْضِ ؗ— اَمْ نَجْعَلُ الْمُتَّقِیْنَ كَالْفُجَّارِ ۟
38.28. அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றி நற்செயல்கள் புரியக்கூடியவர்களை, நிராகரித்து பாவங்கள் புரிந்து பூமியில் குழப்பம் விளைவிக்கும் குழப்பவாதிகளைப்போன்று நாம் ஆக்கிவிடவேமாட்டோம். தம் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களை பாவங்களில் மூழ்கிய நயவஞ்சகர்கள் மற்றும் நிராகரிப்பாளர்களைப் போன்று நாம் ஆக்கிவிட மாட்டோம். இந்த இரு பிரிவினரையும் ஒன்றாக்குவது அநீதியாகும். அது அல்லாஹ்வுக்கு தகுமானதன்று. மாறாக அல்லாஹ் நம்பிக்கைகொண்டு தன்னை அஞ்சியவர்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்து கூலி வழங்குவான் . நிராகரிப்பாளர்களையும் துர்பாக்கியசாலிகளையும் நரகத்தில் பிரவேசிக்கச் செய்து தண்டிப்பான். ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்விடத்தில் சமமானவர்கள் அல்ல. எனவே அவர்களிள் கூலியும் அவனிடத்தில் சமமானதல்ல.
Tafsir berbahasa Arab:
كِتٰبٌ اَنْزَلْنٰهُ اِلَیْكَ مُبٰرَكٌ لِّیَدَّبَّرُوْۤا اٰیٰتِهٖ وَلِیَتَذَكَّرَ اُولُوا الْاَلْبَابِ ۟
38.29. நிச்சயமாக நாம் உம்மீது இறக்கியுள்ள இந்தக் குர்ஆன் ஏராளமான நன்மைகளையும் பயன்களையும் உள்ளடக்கிய வேதமாகும். மக்கள் அதன் வசனங்களை சிந்தித்து, அதன் கருத்துக்களில் ஆய்வுசெய்து நன்கு அறிவுடையவர்கள் படிப்பினை பெற வேண்டும் என்பதற்காகவே (நாம் அதனை இறக்கியுள்ளோம்).
Tafsir berbahasa Arab:
وَوَهَبْنَا لِدَاوٗدَ سُلَیْمٰنَ ؕ— نِعْمَ الْعَبْدُ ؕ— اِنَّهٗۤ اَوَّابٌ ۟ؕ
38.30. தாவூதுக்கு நம்மிடமிருந்துள்ள அருளாகவும் கண்குளிர்ச்சியாகவும் அவரது மகன் சுலைமானை வழங்கினோம். சுலைமான மிகச் சிறந்த அடியாராக இருந்தார். நிச்சயமாக அவர் அதிகமாக அல்லாஹ்வின் பக்கம் திரும்பக்கூடியவராக இருந்தார்.
Tafsir berbahasa Arab:
اِذْ عُرِضَ عَلَیْهِ بِالْعَشِیِّ الصّٰفِنٰتُ الْجِیَادُ ۟ۙ
38.31. வேகமாக ஓடக்கூடிய மூன்று கால்களில் நின்றுகொண்டு நான்காவது காலைத் தூக்கிவைத்துக்கொண்டிருக்கும் உயர்தரமான குதிரைகள் அஸர் பொழுதில் அவரிடம் கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பத்தை நினைவு கூர்வீராக. சூரியன் மறையும் வரை அந்த உயர்தரமான குதிரைகள் அவருக்குக் காட்டப்பட்டுக்கொண்டிருந்தது.
Tafsir berbahasa Arab:
فَقَالَ اِنِّیْۤ اَحْبَبْتُ حُبَّ الْخَیْرِ عَنْ ذِكْرِ رَبِّیْ ۚ— حَتّٰی تَوَارَتْ بِالْحِجَابِ ۟۫
38.32. சுலைமான் கூறினார்: “நான் என் இறைவனை நினைவு கூர்வதைவிட சூரியன் மறையும் வரை செல்வங்களை நேசிப்பதற்கு (அதில் உள்ளவைதான் இந்த குதிரைகள்) முன்னுரிமை அளித்துவிட்டேன். அஸ்ர் தொழுகையை விட்டும் தாமதித்துவிட்டேன்.
Tafsir berbahasa Arab:
رُدُّوْهَا عَلَیَّ ؕ— فَطَفِقَ مَسْحًا بِالسُّوْقِ وَالْاَعْنَاقِ ۟
38.33. அந்தக் குதிரைகளை என்னிடம் கொண்டுவாருங்கள். அவற்றை அவரிடம் கொண்டுவந்தனர். வாளால் அவற்றின் கழுத்துகளையும் கெண்டைக் கால்களையும் வெட்டலானார்.
Tafsir berbahasa Arab:
وَلَقَدْ فَتَنَّا سُلَیْمٰنَ وَاَلْقَیْنَا عَلٰی كُرْسِیِّهٖ جَسَدًا ثُمَّ اَنَابَ ۟
38.34. நாம் சுலைமானை சோதித்தோம். அவருடைய ஆட்சி அரியணையில், அவரது ஆட்சியில் சில காலம் அதிகாரம் செலுத்தும் மனித வடிவிலான ஒரு ஷைத்தானை போட்டுவிட்டோம். பின்னர் ஸுலைமானுக்கு அவரது ஆட்சியை அல்லாஹ் மீட்டிக்கொடுத்து ஷைத்தான்களின் மீது அவருக்கு அதிகாரத்தைக் கொடுத்தான்.
Tafsir berbahasa Arab:
قَالَ رَبِّ اغْفِرْ لِیْ وَهَبْ لِیْ مُلْكًا لَّا یَنْۢبَغِیْ لِاَحَدٍ مِّنْ بَعْدِیْ ۚ— اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ ۟
38.35. சுலைமான் கூறினார்: “என் இறைவா! என் பாவங்களை மன்னித்து விடுவாயாக. எனக்குப் பிறகு யாருக்கும் அளிக்காத தனித்த ஆட்சியதிகாரத்தை எனக்கு வழங்குவாயாக. -என் இறைவா!- நிச்சயமாக நீ அதிகம் வழங்கக்கூடியவனாகவும் பெரும் கொடையாளியாகவும் இருக்கின்றாய்.”
Tafsir berbahasa Arab:
فَسَخَّرْنَا لَهُ الرِّیْحَ تَجْرِیْ بِاَمْرِهٖ رُخَآءً حَیْثُ اَصَابَ ۟ۙ
38.36. நாம் அவரது பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டோம். அவருடைய கட்டளைக்கு மென்மையாக கீழ்ப்படியும் விதத்தில் காற்றை அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அது பலத்துடனும் வேகமாகவும் செல்லக்கூடியதாக இருந்த போதும் அதில் எந்த ஆட்டமும் இல்லை. அவர் விரும்பிய இடத்துக்கு அவரைச் சுமந்து சென்றது.
Tafsir berbahasa Arab:
وَالشَّیٰطِیْنَ كُلَّ بَنَّآءٍ وَّغَوَّاصٍ ۟ۙ
38.37. அவருக்கு ஷைத்தான்களை வசப்படுத்தித் கொடுத்தோம். அவைகள் அவருடைய கட்டளையின்படி செயல்படுகின்றன. அவர்களில் கட்டடம் கட்டுவோர், கடலில் மூழ்கி முத்துக்குளிப்போர் இருந்தார்கள். அதிலிருந்து முத்தெடுக்கிறார்கள்.
Tafsir berbahasa Arab:
وَّاٰخَرِیْنَ مُقَرَّنِیْنَ فِی الْاَصْفَادِ ۟
38.38. மூர்க்கமான ஷைத்தான்களையும் அவருக்கு வசப்படுத்தித் கொடுத்தோம். அவர்கள் அசைய முடியாதவாறு சங்கிலிகளால் விலங்கிடப்பட்டிருந்தார்கள்.
Tafsir berbahasa Arab:
هٰذَا عَطَآؤُنَا فَامْنُنْ اَوْ اَمْسِكْ بِغَیْرِ حِسَابٍ ۟
38.39. சுலைமானே! இது உம் கோரிக்கைக்கு விடையளித்து நாம் உமக்கு வழங்கிய கொடையாகும். நீர் நாடுவோருக்கு கொடுப்பீராக; நாடுவோருக்கு அளிக்காமல் தடுத்துக்கொள்வீராக. அளிப்பதிலும் அளிக்காமல் இருப்பதிலும் நீர் எந்தவித கேள்வி கணக்கும் கேட்கப்படமாட்டீர்.
Tafsir berbahasa Arab:
وَاِنَّ لَهٗ عِنْدَنَا لَزُلْفٰی وَحُسْنَ مَاٰبٍ ۟۠
38.40. நிச்சயமாக சுலைமான் நமக்கு நெருக்கமானவர்களில் ஒருவர். அவருக்கு சுவனம் என்னும் அழகிய திரும்புமிடம் உண்டு.
Tafsir berbahasa Arab:
وَاذْكُرْ عَبْدَنَاۤ اَیُّوْبَ ۘ— اِذْ نَادٰی رَبَّهٗۤ اَنِّیْ مَسَّنِیَ الشَّیْطٰنُ بِنُصْبٍ وَّعَذَابٍ ۟ؕ
38.41. -தூதரே!- நம்முடைய அடியார் அய்யூபை நினைவு கூர்வீராக. அவர் தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்: “நிச்சயமாக ஷைத்தான் சிரமமும் வேதனையும் மிக்க ஒரு விஷயத்தை எனக்கு ஏற்படுத்திவிட்டான்.”
Tafsir berbahasa Arab:
اُرْكُضْ بِرِجْلِكَ ۚ— هٰذَا مُغْتَسَلٌۢ بَارِدٌ وَّشَرَابٌ ۟
38.42. நாம் அவரிடம் கூறினோம்: “உம் காலால் தரையை அடிப்பீராக.” அவர் தம் காலால் தரையில் அடித்தார். அதிலிருந்து குளிப்பதற்கும் குடிப்பதற்கும் ஏற்ற ஒரு நீருற்று பொங்கியது. அது அவரது தீங்கையும் நோவினையையும் போக்கிவிட்டது.
Tafsir berbahasa Arab:
Beberapa Faedah Ayat-ayat di Halaman Ini:
• الحث على تدبر القرآن.
1. குர்ஆனை சிந்திக்குமாறு ஆர்வமூட்டல்.

• في الآيات دليل على أنه بحسب سلامة القلب وفطنة الإنسان يحصل له التذكر والانتفاع بالقرآن الكريم.
2. நிச்சயமாக குர்ஆன் மூலம் அறிவுரை பெற்றுப் பயன்பெறுவது மனிதனின் உளத்தூய்மை மற்றும் விவேகத்திற்கேற்பவே நிகழும் என்பதற்கு இவ்வசனங்களில் ஆதாரம் உண்டு.

• في الآيات دليل على صحة القاعدة المشهورة: «من ترك شيئًا لله عوَّضه الله خيرًا منه».
3.அல்லாஹ்வுக்காக ஒரு விடயத்தை யார் விடுகிறாரோ அவருக்கு அதனை விடச் சிறந்ததை அல்லாஹ் அதற்குப் பகரமாக வழங்குவான் என்ற பிரபல்யமான விதி சரி என்பதற்கு இவ்வசனங்களில் ஆதாரம் உண்டு.

 
Terjemahan makna Surah: Ṣād
Daftar surah Nomor Halaman
 
Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil - Daftar isi terjemahan

Diterbitkan oleh Markaz Tafsīr Li Ad-Dirasāt Al-Qur`āniyyah.

Tutup