Check out the new design

Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil * - Daftar isi terjemahan


Terjemahan makna Surah: An-Nisā`   Ayah:
١لَّذِیْنَ یَتَرَبَّصُوْنَ بِكُمْ ۚ— فَاِنْ كَانَ لَكُمْ فَتْحٌ مِّنَ اللّٰهِ قَالُوْۤا اَلَمْ نَكُنْ مَّعَكُمْ ۖؗ— وَاِنْ كَانَ لِلْكٰفِرِیْنَ نَصِیْبٌ ۙ— قَالُوْۤا اَلَمْ نَسْتَحْوِذْ عَلَیْكُمْ وَنَمْنَعْكُمْ مِّنَ الْمُؤْمِنِیْنَ ؕ— فَاللّٰهُ یَحْكُمُ بَیْنَكُمْ یَوْمَ الْقِیٰمَةِ ؕ— وَلَنْ یَّجْعَلَ اللّٰهُ لِلْكٰفِرِیْنَ عَلَی الْمُؤْمِنِیْنَ سَبِیْلًا ۟۠
4.141. (அந்த நயவஞ்சகர்கள்) உங்களுக்கு ஏற்படும் நன்மையையும் தீமையையும் எதிர்பார்ப்பவர்கள்; அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு உதவி கிடைத்து போர்ச் செல்வங்கள் கிடைத்துவிட்டால் அதனைப் பெறுவதற்காக, “நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா? நீங்கள் கலந்துகொண்டதில் நாங்களும் கலந்து கொள்ளவில்லையா?” என்று கூறுகிறார்கள். நிராகரிப்பாளர்களுக்கு ஏதேனும் பங்கு கிடைத்துவிட்டால், “நாங்கள் உங்களது காரியங்களைப் பொறுப்பேற்று பராமரித்து உதவிசெய்துகொண்டு உங்களுடன் இருக்கவில்லையா, உங்களுக்கு உதவி புரிந்து நம்பிக்கையாளர்களை கைவிட்டு உங்களைப் பாதுகாக்கவில்லையா?” என்று கூறுகிறார்கள். அல்லாஹ்வே மறுமைநாளில் உங்களிடையே தீர்ப்பளிப்பான். நம்பிக்கையாளர்களுக்கு கூலியாக அவர்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வான். நயவஞ்சகர்களுக்குத் தண்டனையாக அவர்களை நரகத்தின் அடித்தளத்தில் சேர்த்துவிடுவான். அல்லாஹ் நம்பிக்கையாளர்களின்மீது நிராகரிப்பாளர்களுக்கு ஒருபோதும் ஆதிக்கம் வழங்கிவிட மாட்டான். மாறாக நம்பிக்கையாளர்கள் மார்க்கத்தை நடைமுறைப்படுத்தி நம்பிக்கையில் உண்மையாளர்களாக இருக்கும் வரை இறுதி முடிவை அவர்களுக்கு சாதகமாகவே ஆக்குவான்.
Tafsir berbahasa Arab:
اِنَّ الْمُنٰفِقِیْنَ یُخٰدِعُوْنَ اللّٰهَ وَهُوَ خَادِعُهُمْ ۚ— وَاِذَا قَامُوْۤا اِلَی الصَّلٰوةِ قَامُوْا كُسَالٰی ۙ— یُرَآءُوْنَ النَّاسَ وَلَا یَذْكُرُوْنَ اللّٰهَ اِلَّا قَلِیْلًا ۟ؗۙ
4.142. நயவஞ்சகர்கள் இஸ்லாத்தை வெளிப்படுத்தி நிராகரிப்பை மறைத்து அல்லாஹ்வை ஏமாற்ற முனைகிறார்கள். அவன் அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்துகிறான். ஏனெனில் அவர்களது நிராகரிப்பைப் பற்றி அறிந்திருந்தும் அவன் இவ்வுலகில் அவர்களின் உயிர்களைப் பாதுகாத்துள்ளான். ஆனால் மறுமையில் அவர்களுக்கு கடுமையான வேதனையைத் தயார்செய்து வைத்துள்ளான். அவர்கள் தொழுகைக்காக வந்தால் சோம்பேறிகளாகவும், வெறுப்போடும் மக்கள் காண வேண்டும் மதிக்க வேண்டும் என்பதற்காகவே வருகிறார்கள். நம்பிக்கையார்களைக் காணும்போது மாத்திரம் சிறிது அல்லாஹ்வை நினைவுகூர்கிறார்கள்.
Tafsir berbahasa Arab:
مُّذَبْذَبِیْنَ بَیْنَ ذٰلِكَ ۖۗ— لَاۤ اِلٰی هٰۤؤُلَآءِ وَلَاۤ اِلٰی هٰۤؤُلَآءِ ؕ— وَمَنْ یُّضْلِلِ اللّٰهُ فَلَنْ تَجِدَ لَهٗ سَبِیْلًا ۟
4.143. இந்த நயவஞ்சகர்கள் தடுமாற்றத்தில் இருக்கிறார்கள். இவர்கள் வெளிரங்கத்திலும் உள்ரங்கத்திலும் நம்பிக்கையாளர்களுடனும் இல்லை, நிராகரிப்பாளர்களுடனும் இல்லை. மாறாக வெளித்தோற்றத்தில் நம்பிக்கையாளர்களுடனும் அந்தரங்கத்தில் நிராகரிப்பாளர்களுடனும் இருக்கிறார்கள். தூதரே! அல்லாஹ் யாரை வழிதவறச் செய்துவிடுவானோ, அவர் வழிகேட்டை விட்டும் நேர்வழியை அடைவதற்கான எந்தவொரு வழியையும் உம்மால் பெற்றுக்கொள்ள முடியாது.
Tafsir berbahasa Arab:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الْكٰفِرِیْنَ اَوْلِیَآءَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِیْنَ ؕ— اَتُرِیْدُوْنَ اَنْ تَجْعَلُوْا لِلّٰهِ عَلَیْكُمْ سُلْطٰنًا مُّبِیْنًا ۟
4.144. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! நம்பிக்கையாளர்களை விடுத்து அல்லாஹ்வை நிராகரித்தவர்களை நேசர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். இந்த செயலின்மூலம் நீங்கள் தண்டனைக்குரியோர் தகுந்த ஆதாரம் அல்லாஹ்வுக்குக் கிடைத்துவிட வேண்டும் என்று விரும்புகிறீர்களா?
Tafsir berbahasa Arab:
اِنَّ الْمُنٰفِقِیْنَ فِی الدَّرْكِ الْاَسْفَلِ مِنَ النَّارِ ۚ— وَلَنْ تَجِدَ لَهُمْ نَصِیْرًا ۟ۙ
4.145. மறுமைநாளில் அல்லாஹ் நயவஞ்சகர்களை நரகத்தின் அடித்தளத்தில் போட்டுவிடுவான். வேதனையை விட்டும் அவர்களைக் காக்கக்கூடிய உதவியாளர்கள் யாரையும் நீர் காணமாட்டீர்.
Tafsir berbahasa Arab:
اِلَّا الَّذِیْنَ تَابُوْا وَاَصْلَحُوْا وَاعْتَصَمُوْا بِاللّٰهِ وَاَخْلَصُوْا دِیْنَهُمْ لِلّٰهِ فَاُولٰٓىِٕكَ مَعَ الْمُؤْمِنِیْنَ ؕ— وَسَوْفَ یُؤْتِ اللّٰهُ الْمُؤْمِنِیْنَ اَجْرًا عَظِیْمًا ۟
4.146. ஆயினும் தமது நயவஞ்சகத்திலிருந்து பாவமன்னிப்புக்கோரி அல்லாஹ்வின் பக்கம் திரும்பி, தங்கள் உள்ளத்தை சீர்படுத்தி, அவனிடம் செய்த வாக்குறுதியைப் பேணி தங்களின் செயல்களை முகஸ்துதி இன்றி அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கியவர்களைத் தவிர. இந்த பண்புகளை உடையவர்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நம்பிக்கையாளர்களுடன் இருப்பார்கள். நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் பெரும் கூலியை வழங்கிடுவான்.
Tafsir berbahasa Arab:
مَا یَفْعَلُ اللّٰهُ بِعَذَابِكُمْ اِنْ شَكَرْتُمْ وَاٰمَنْتُمْ ؕ— وَكَانَ اللّٰهُ شَاكِرًا عَلِیْمًا ۟
4.147. நீங்கள் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுக்கு நன்றி செலுத்தினால் அவனுக்கு உங்களை வேதனை செய்ய வேண்டிய அவசியமே இல்லை. அவன் நன்மைகளை வழங்குபவன், மிகுந்த கருணையாளன். உங்களின் பாவங்களின் காரணமாகத்தான் அவன் உங்களைத் தண்டிக்கிறான். நீங்கள் உங்களின் செயல்களை சீர்படுத்திக் கொண்டால், அவன் உங்களுக்கு அளித்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தினால், வெளிப்படையாகவும் அந்தரங்கமாகவும் அவன்மீது நம்பிக்கைகொண்டால் அவன் உங்களை ஒருபோதும் தண்டிக்க மாட்டான். அவனுடைய அருட்கொடைகளை ஒத்துக் கொள்வேருக்கு நன்றியுடையவன். எனவேதான், அதற்காக அவர்களுக்கு நன்மையை அள்ளிவழங்குகிறான். தனது படைப்பினங்களின் ஈமானை நன்கறிந்தவன். ஒவ்வொருவருக்கும் அவர்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்குவான்.
Tafsir berbahasa Arab:
Beberapa Faedah Ayat-ayat di Halaman Ini:
• بيان صفات المنافقين، ومنها: حرصهم على حظ أنفسهم سواء كان مع المؤمنين أو مع الكافرين.
1. நயவஞ்சகர்களின் பண்புகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. நம்பிக்கையாளர்ளுடன் இருந்தாலும் நிராகரிப்பாளர்களுடன் இருந்தாலும் தங்களின் பங்கினைப் பெறுவதில் அவர்களது பேராசை அவற்றில் ஒன்றாகும்.

• أعظم صفات المنافقين تَذَبْذُبُهم وحيرتهم واضطرابهم، فلا هم مع المؤمنين حقًّا ولا مع الكافرين.
2. நயவஞ்சகர்களின் பண்புகளில் மிகப்பிரதானமானது, தடுமாற்றமும் குழப்பமும் உறுதியற்ற தன்மையுமாகும். அவர்கள் நம்பிக்கையாளர்களுக்கும் உண்மையாக இருக்க மாட்டார்கள். நிராகரிப்பாளர்களுக்கும் உண்மையாக இருக்க மாட்டார்கள்.

• النهي الشديد عن اتخاذ الكافرين أولياء من دون المؤمنين.
3. நம்பிக்கையாளர்களை விடுத்து நிராகரிப்பாளர்களை நேசர்களாக ஆக்கிக் கொள்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

• أعظم ما يتقي به المرء عذاب الله تعالى في الآخرة هو الإيمان والعمل الصالح.
4. ஈமானும் நற்செயல்களுமே மறுமையில் அல்லாஹ்வின் வேதனையை விட்டும் மனிதனைக் காக்கும் முக்கிய காரணிகளாகும்.

 
Terjemahan makna Surah: An-Nisā`
Daftar surah Nomor Halaman
 
Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil - Daftar isi terjemahan

Diterbitkan oleh Markaz Tafsīr Li Ad-Dirasāt Al-Qur`āniyyah.

Tutup