Check out the new design

Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil * - Daftar isi terjemahan


Terjemahan makna Surah: Fuṣṣilat   Ayah:
فَقَضٰىهُنَّ سَبْعَ سَمٰوَاتٍ فِیْ یَوْمَیْنِ وَاَوْحٰی فِیْ كُلِّ سَمَآءٍ اَمْرَهَا وَزَیَّنَّا السَّمَآءَ الدُّنْیَا بِمَصَابِیْحَ ۖۗ— وَحِفْظًا ؕ— ذٰلِكَ تَقْدِیْرُ الْعَزِیْزِ الْعَلِیْمِ ۟
41.12. வானங்களை இருநாட்களில் (வியாழன், வெள்ளி) படைத்தான். அத்தோடு வானங்களையும் பூமியையும் ஆறுநாட்களின் உருவாக்கம் நிறைவுபெற்றது. ஒவ்வொரு வானத்திற்கும் அதற்கு நிர்ணயிக்கப்பட்டதையும் அதற்கு வணக்கம், வழிப்படுதல் போன்ற கட்டளையையும் அவன் அறிவித்தான். கீழ் வானத்தை நாம் நட்சத்திரங்களால் அலங்கரித்துள்ளோம். அவற்றின் மூலம் திருட்டுத்தனமாக ஷைத்தான்கள் ஒட்டுக் கேட்பதைவிட்டும் அதனைப் பாதுகாத்துள்ளோம். மேற்கூறப்பட்ட இவையனைத்தும் யாவற்றையும் மிகைத்த, யாராலும் மிகைக்க முடியாத தன் படைப்புகளைக் குறித்து நன்கறிந்தவனின் நிர்ணயமாகும்.
Tafsir berbahasa Arab:
فَاِنْ اَعْرَضُوْا فَقُلْ اَنْذَرْتُكُمْ صٰعِقَةً مِّثْلَ صٰعِقَةِ عَادٍ وَّثَمُوْدَ ۟ؕ
41.13. -தூதரே!- நீர் கொண்டுவந்ததை ஏற்றுக் கொள்ளாமல் அவர்கள் புறக்கணித்தால் அவர்களிடம் கூறுவீராக: “ஆத், ஹூதின் சமூகம் ஸ்மூத், ஸாலிஹின் சமூகம் அவ்விருவரையும் பொய்ப்பித்த போது அவர்களுக்கு ஏற்பட்ட வேதனையைப் போன்று உங்களுக்கும் வேதனை ஏற்பட்டுவிடும் என்று நான் உங்களை எச்சரிக்கிறேன்.”
Tafsir berbahasa Arab:
اِذْ جَآءَتْهُمُ الرُّسُلُ مِنْ بَیْنِ اَیْدِیْهِمْ وَمِنْ خَلْفِهِمْ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ ؕ— قَالُوْا لَوْ شَآءَ رَبُّنَا لَاَنْزَلَ مَلٰٓىِٕكَةً فَاِنَّا بِمَاۤ اُرْسِلْتُمْ بِهٖ كٰفِرُوْنَ ۟
41.14. ஒரே அழைப்போடு ஒருவர் பின் ஒருவராக தூதர்கள் அவர்களிடம் வந்து “அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்” என்று கட்டளையிட்டபோது நிராகரிப்பாளர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் எங்களுக்கு வானவர்களை தூதர்களாக இறக்க நாடியிருந்தால் அவ்வாறு இறக்கி இருப்பான். உங்களின் தூதுச் செய்தியை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம். ஏனெனில் திட்டமாக நீங்களும் எங்களைப் போன்ற மனிதர்கள்தாம்.”
Tafsir berbahasa Arab:
فَاَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوْا فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ وَقَالُوْا مَنْ اَشَدُّ مِنَّا قُوَّةً ؕ— اَوَلَمْ یَرَوْا اَنَّ اللّٰهَ الَّذِیْ خَلَقَهُمْ هُوَ اَشَدُّ مِنْهُمْ قُوَّةً ؕ— وَكَانُوْا بِاٰیٰتِنَا یَجْحَدُوْنَ ۟
41.15. ஹூதின் கூட்டமான ஆத் சமூகத்தினர் அல்லாஹ்வை நிராகரித்ததோடு பூமியில் அநியாயமாக ஆணவம் கொண்டார்கள். தங்களைச் சுற்றிள்ளவர்கள் மீது அநியாயம் செய்தார்கள். தங்களின் பலத்தால் மெய்மறதியில் ஆழ்த்தப்பட்ட அவர்கள் கூறினார்கள்: “எங்களைவிட பலமானவர் யார்?” அவர்களின் எண்ணப்படி அவர்களைவிட பலமானவர்கள் யாரும் இருக்கவில்லை. அல்லாஹ் அவர்களுக்குப் பதிலளித்தான்: “நிச்சயமாக அவர்களைப் படைத்து அவர்களைத் திமிரில் ஆழ்த்திய பலத்தை அவர்களுக்கு அளித்த அல்லாஹ் அவர்களை விட வல்லமை மிக்கவன் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளவில்லையா, பார்க்கவில்லையா? அவர்கள் ஹூத் கொண்டுவந்த அல்லாஹ்வின் சான்றுகளை நிராகரித்துக் கொண்டிருந்தார்கள்.
Tafsir berbahasa Arab:
فَاَرْسَلْنَا عَلَیْهِمْ رِیْحًا صَرْصَرًا فِیْۤ اَیَّامٍ نَّحِسَاتٍ لِّنُذِیْقَهُمْ عَذَابَ الْخِزْیِ فِی الْحَیٰوةِ الدُّنْیَا ؕ— وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَخْزٰی وَهُمْ لَا یُنْصَرُوْنَ ۟
41.16. ஆகவே நாம் அவர்களை உலக வாழ்க்கையில் இழிவுமிக்க வேதனையை அனுபவிக்கச் செய்வதற்காக அவர்களின் மீது துர்பாக்கியமான நாட்களில் இன்னல்களுக்கு உள்ளாக்கக்கூடிய பயங்கரமான சப்தத்தை உள்ளடக்கிய காற்றை அனுப்பினோம். அவர்களுக்காக காத்திருக்கும் மறுமை வேதனையோ அதைவிட இழிவானது. வேதனையிலிருந்து தங்களைக் காப்பாற்றக்கூடிய உதவியாளர்களை அவர்கள் பெற மாட்டார்கள்.
Tafsir berbahasa Arab:
وَاَمَّا ثَمُوْدُ فَهَدَیْنٰهُمْ فَاسْتَحَبُّوا الْعَمٰی عَلَی الْهُدٰی فَاَخَذَتْهُمْ صٰعِقَةُ الْعَذَابِ الْهُوْنِ بِمَا كَانُوْا یَكْسِبُوْنَ ۟ۚ
41.17. ஸாலிஹின் கூட்டமான ஸமூத் சமூகத்திற்கு சத்தியப் பாதையை தெளிவுபடுத்தி நேர்வழி காட்டினோம். அவர்கள் சத்தியத்தின் நேர்வழியை விட்டுவிட்டு வழிகேட்டை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். எனவே அவர்கள் செய்துகொண்டிருந்த நிராகரிப்பான செயல்கள் மற்றும் பாவங்களினால் இழிவுமிக்க வேதனைமிக்க பேரிடி அவர்களைத் தாக்கியது.
Tafsir berbahasa Arab:
وَنَجَّیْنَا الَّذِیْنَ اٰمَنُوْا وَكَانُوْا یَتَّقُوْنَ ۟۠
41.18. அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதர்களின்மீதும் நம்பிக்கைகொண்டு அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம். அவர்களின் சமூகத்தைத் தாக்கிய வேதனையிலிருந்து அவர்களைக் காப்பாற்றினோம்.
Tafsir berbahasa Arab:
وَیَوْمَ یُحْشَرُ اَعْدَآءُ اللّٰهِ اِلَی النَّارِ فَهُمْ یُوْزَعُوْنَ ۟
41.19. அல்லாஹ் தன் எதிரிகளை நரகத்தின்பால் ஒன்றுதிரட்டும்போது அவர்களில் முந்தியவர்கள், பிந்தியவர்கள் அனைவரையும் நரகத்தின் காவலர்கள் நரகத்தில் தள்ளுவார்கள். அவர்கள் நரகிலிருந்து தப்பிச் செல்ல முடியாது.
Tafsir berbahasa Arab:
حَتّٰۤی اِذَا مَا جَآءُوْهَا شَهِدَ عَلَیْهِمْ سَمْعُهُمْ وَاَبْصَارُهُمْ وَجُلُوْدُهُمْ بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
41.20. அவர்கள் இழுத்துச் செல்லப்பட்ட நரகத்திற்கு வந்தவுடன் உலகில் தாங்கள் செய்துகொண்டிருந்த செயல்களை அவர்கள் மறுப்பார்கள். அவர்களின் செவிகளும் பார்வைகளும் தோல்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் உலகில் செய்துகொண்டிருந்த நிராகரிப்பு, பாவங்களைக் குறித்து சாட்சி கூறும்.
Tafsir berbahasa Arab:
Beberapa Faedah Ayat-ayat di Halaman Ini:
• الإعراض عن الحق سبب المهالك في الدنيا والآخرة.
1. சத்தியத்தைப் புறக்கணிப்பது இவ்வுலகிலும் மறுவுலகிலும் அழிவுக்குக் காரணமாக இருக்கின்றது.

• التكبر والاغترار بالقوة مانعان من الإذعان للحق.
2. கர்வம், ஆற்றலைக் கொண்டு ஏமாறுதல் ஆகிய இரண்டும் சத்தியத்தை ஏற்றுக் கொள்வதற்கு தடையாக இருக்கின்றன.

• الكفار يُجْمَع لهم بين عذاب الدنيا وعذاب الآخرة.
3. நிராகரிப்பாளர்களுக்கு இவ்வுலக, மறுவுலக வேதனைகள் ஒன்று சேர்க்கப்படும்.

• شهادة الجوارح يوم القيامة على أصحابها.
4. ஒவ்வொருவரின் உறுப்புக்களும் அவர்களுக்கு எதிராகவே மறுமையில் சாட்சி கூறுதல்.

 
Terjemahan makna Surah: Fuṣṣilat
Daftar surah Nomor Halaman
 
Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil - Daftar isi terjemahan

Diterbitkan oleh Markaz Tafsīr Li Ad-Dirasāt Al-Qur`āniyyah.

Tutup