Check out the new design

Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil * - Daftar isi terjemahan


Terjemahan makna Surah: Al-Aḥqāf   Ayah:
وَاذْكُرْ اَخَا عَادٍ اِذْ اَنْذَرَ قَوْمَهٗ بِالْاَحْقَافِ وَقَدْ خَلَتِ النُّذُرُ مِنْ بَیْنِ یَدَیْهِ وَمِنْ خَلْفِهٖۤ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ ؕ— اِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ عَذَابَ یَوْمٍ عَظِیْمٍ ۟
46.21. -தூதரே!- ஆதின் வம்சாவளி சகோதரர் ஹூதை நினைவுகூர்வீராக. அவர் தம் சமூகத்தினரை அவர்களின் மீது அல்லாஹ்வின் வேதனை நிகழும் என எச்சரிக்கை செய்தார். அவர்கள் அரேபிய தீப கற்பத்தின் தெற்குப்பகுதியில் மணல்மேடுகளிலுள்ள அவர்களின் வசிப்பிடங்களில் இருந்தார்கள். ஹூதிற்கு முன்னரும் பின்னரும் தமது சமூகத்தை எச்சரிக்கை செய்யும் தூதர்கள் வந்துசென்றார்கள். அவர்கள் தங்கள் சமூக மக்களிடம் கூறினார்கள்: “அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள். அவனைத்தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள். என் சமூகமே! நிச்சயமாக உங்கள் மீது மாபெரும் நாளான மறுமை நாளின் வேதனையை அஞ்சுகிறேன்.”
Tafsir berbahasa Arab:
قَالُوْۤا اَجِئْتَنَا لِتَاْفِكَنَا عَنْ اٰلِهَتِنَا ۚ— فَاْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
46.22. அவரது சமூகத்தார் கூறினார்கள்: “எங்கள் தெய்வங்களை வணங்குவதை விட்டும் எங்களைத் திசைதிருப்பிடவா நீர் எங்களிடம் வந்துள்ளீர்?! இது ஒருபோதும் நிகழாது. நீர் கூறுவதில் உண்மையாளராக இருந்தால் நீர் எச்சரிக்கும் வேதனையை எங்களிடம் கொண்டுவாரும்.
Tafsir berbahasa Arab:
قَالَ اِنَّمَا الْعِلْمُ عِنْدَ اللّٰهِ ؗ— وَاُبَلِّغُكُمْ مَّاۤ اُرْسِلْتُ بِهٖ وَلٰكِنِّیْۤ اَرٰىكُمْ قَوْمًا تَجْهَلُوْنَ ۟
46.23. அவர் கூறினார்: “வேதனைக்குரிய நேரம் என்பது பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. எனக்கு அதுகுறித்து எதுவும் தெரியாது. நான் எந்த தூதுச் செய்தியைக் கொண்டு உங்களிடம் அனுப்பப்பட்டேனோ அதை உங்களுக்கு எடுத்துரைக்கும் தூதர்தான். ஆயினும் நான் உங்களை அறியாத மக்களாகவே காண்கிறேன். அதனால்தான் உங்களுக்குப் பலனளிக்கும் விஷயங்களை விட்டுவிட்டு தீங்கிழைக்கும் விஷயங்களைச் செய்கிறீர்கள்.”
Tafsir berbahasa Arab:
فَلَمَّا رَاَوْهُ عَارِضًا مُّسْتَقْبِلَ اَوْدِیَتِهِمْ ۙ— قَالُوْا هٰذَا عَارِضٌ مُّمْطِرُنَا ؕ— بَلْ هُوَ مَا اسْتَعْجَلْتُمْ بِهٖ ؕ— رِیْحٌ فِیْهَا عَذَابٌ اَلِیْمٌ ۟ۙ
46.24. அவர்கள் அவசரப்பட்ட வேதனை அவர்களிடம் வந்ததும், வானில் ஒரு திசையில் தோன்றிய மேகம் தமது பள்ளத்தாக்குகளை நோக்கி வருவதைக் கண்டபோது அவர்கள் கூறினார்கள்: “இது எங்களுக்கு மழை தரும் மேகமாகும்.” ஹூத் அவர்களிடம் கூறினார்: “நீங்கள் எண்ணுவதுபோல் இது மழை மேகமல்ல. மாறாக இது நீங்கள் அவசரப்பட்டுக் கொண்டிருந்த வேதனையாகும். அது வேதனைமிக்க தண்டனையை உள்ளடக்கிய காற்றாகும்.
Tafsir berbahasa Arab:
تُدَمِّرُ كُلَّ شَیْ بِاَمْرِ رَبِّهَا فَاَصْبَحُوْا لَا یُرٰۤی اِلَّا مَسٰكِنُهُمْ ؕ— كَذٰلِكَ نَجْزِی الْقَوْمَ الْمُجْرِمِیْنَ ۟
46.25. அது அல்லாஹ் அழிக்குமாறு கட்டளையிட்ட தான் கடந்து செல்லும் ஒவ்வொன்றையும் அழித்துவிடக்கூடியது. அவர்கள் செத்து மடிந்தார்கள். அவர்கள் வசித்ததற்கு அடையாளமான அவர்களின் வசிப்பிடங்களைத் தவிர வேறு எதுவும் தென்படவில்லை. இவ்வாறான வேதனை மிக்க கூலியை நிராகரிப்பிலும் பாவங்களிலும் நிலைத்திருக்கும் குற்றவாளிகளுக்கு நாம் வழங்குகின்றோம்.
Tafsir berbahasa Arab:
وَلَقَدْ مَكَّنّٰهُمْ فِیْمَاۤ اِنْ مَّكَّنّٰكُمْ فِیْهِ وَجَعَلْنَا لَهُمْ سَمْعًا وَّاَبْصَارًا وَّاَفْـِٕدَةً ۖؗ— فَمَاۤ اَغْنٰی عَنْهُمْ سَمْعُهُمْ وَلَاۤ اَبْصَارُهُمْ وَلَاۤ اَفْـِٕدَتُهُمْ مِّنْ شَیْءٍ اِذْ كَانُوْا یَجْحَدُوْنَ بِاٰیٰتِ اللّٰهِ وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟۠
46.26. நாம் உங்களுக்கு வழங்காத வசதிகளையெல்லாம் ஹூதின் சமூகத்திற்கு வழங்கியிருந்தோம். அவர்கள் செவியேற்பதற்கு செவிகளையும் பார்ப்பதற்கு கண்களையும் விளங்கிக்கொள்வதற்கு உள்ளங்களையும் நாம் அவர்களுக்கு ஏற்படுத்தியிருந்தோம். அவர்களின் செவிகளோ, பார்வைகளோ, உள்ளங்களோ அவர்களுக்கு எப்பயனையும் அளிக்கவில்லை. அவர்களிடம் வந்த அல்லாஹ்வின் வேதனையிலிருந்து அவர்களைக் காப்பாற்றவில்லை. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பரிகாசம் செய்துகொண்டிருந்த அவர்களின் நபியான ஹூத் எச்சரித்த வேதனையே அவர்களிடம் வந்தது.
Tafsir berbahasa Arab:
وَلَقَدْ اَهْلَكْنَا مَا حَوْلَكُمْ مِّنَ الْقُرٰی وَصَرَّفْنَا الْاٰیٰتِ لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟
46.27. -மக்காவாசிகளே!- உங்களைச் சுற்றியுள்ள ஊர்களையும் நாம் அழித்துள்ளோம். ஆத், ஸமூத், லூத்தின் சமூகம், மத்யன்வாசிகள் ஆகியோரை நாம் அழித்துள்ளோம். அவர்கள் நிராகரிப்பிலிருந்து திரும்பிவிடும்பொருட்டு பலவகையான ஆதாரங்களையும் சான்றுகளையும் நாம் அவர்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தோம்.
Tafsir berbahasa Arab:
فَلَوْلَا نَصَرَهُمُ الَّذِیْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ قُرْبَانًا اٰلِهَةً ؕ— بَلْ ضَلُّوْا عَنْهُمْ ۚ— وَذٰلِكَ اِفْكُهُمْ وَمَا كَانُوْا یَفْتَرُوْنَ ۟
46.28. அவர்கள் அல்லாஹ்வை விடுத்து தெய்வங்களாக ஏற்படுத்திக்கொண்டு வணக்கம் மற்றும் பலியிடுதல் மூலம் அவற்றை நெருங்கிக்கொண்டிருந்த சிலைகள் அவர்களுக்கு உதவி புரிந்திருக்கக்கூடாதா? அவை அவர்களுக்கு நிச்சயமாக உதவிபுரியவில்லை. மாறாக அவர்கள் அவைகளின் பக்கம் மிகத் தேவையுடையோராக இருந்த சமயத்தில் அவர்களைவிட்டும் மறைந்துவிட்டன. சிலைகள் தங்களுக்குப் பயனளிக்கும், அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்யும் என்று அவர்கள் மேலெண்ணம் கொண்டமை யாவும் பொய்யும் இட்டுக்கட்டுமாகும்.
Tafsir berbahasa Arab:
Beberapa Faedah Ayat-ayat di Halaman Ini:
• لا علم للرسل بالغيب إلا ما أطلعهم ربهم عليه منه.
1. அல்லாஹ் தன் தூதர்களுக்கு தான் அறிவித்ததைத் தவிர மறைவான எதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்.

• اغترار قوم هود حين ظنوا العذاب النازل بهم مطرًا، فلم يتوبوا قبل مباغتته لهم.
2. ஹூதின் கூட்டத்தினர் தமக்கு இறங்கிய வேதனையை மழை என்று எண்ணி ஏமாந்தார்கள். எனவேதான் அது அவர்களைத் திடீரெனத் தாக்குவதற்கு முன் அவர்கள் பாவமன்னிப்புக் கோரவில்லை.

• قوة قوم عاد فوق قوة قريش، ومع ذلك أهلكهم الله.
3. ஆத் சமூகம் குறைஷிகளை விட பலம்மிக்கவர்களாக இருந்தும் அல்லாஹ் அவர்களை அழித்துவிட்டான்.

• العاقل من يتعظ بغيره، والجاهل من يتعظ بنفسه.
4. மற்றவர்களைக்கொண்டு படிப்பினை பெற்றுக்கொள்பவனே அறிவாளியாவான். தன்னைக் கொண்டு படிப்பினை பெறுபவன் முட்டாளாவான்.

 
Terjemahan makna Surah: Al-Aḥqāf
Daftar surah Nomor Halaman
 
Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil - Daftar isi terjemahan

Diterbitkan oleh Markaz Tafsīr Li Ad-Dirasāt Al-Qur`āniyyah.

Tutup