Check out the new design

Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil * - Daftar isi terjemahan


Terjemahan makna Ayah: (109) Surah: Al-Māidah
یَوْمَ یَجْمَعُ اللّٰهُ الرُّسُلَ فَیَقُوْلُ مَاذَاۤ اُجِبْتُمْ ؕ— قَالُوْا لَا عِلْمَ لَنَا ؕ— اِنَّكَ اَنْتَ عَلَّامُ الْغُیُوْبِ ۟
5.109. மனிதர்களே! மறுமைநாளை நினைவுகூருங்கள். அந்த நாளில் தூதர்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்று திரட்டி, “நீங்கள் அனுப்பப்பட்ட உங்களின் சமூகங்கள் உங்களுக்கு என்ன பதில் கூறின” என்று கேட்பான். அவர்கள் பதிலை அல்லாஹ்விடம் ஒப்படைத்தவர்களாக, “எங்களுக்கு எதுவும் தெரியாது. எங்கள் இறைவா! அனைத்து அறிவும் உன்னிடமே உள்ளன, மறைவானவை, அனைத்தையும் நீதான் நன்கறிந்தவன்” என்று கூறுவார்கள்.
Tafsir berbahasa Arab:
Beberapa Faedah Ayat-ayat di Halaman Ini:
• إثبات جمع الله للخلق يوم القيامة جليلهم وحقيرهم.
1. மறுமை நாளில் அல்லாஹ் சிறிய பெரிய அனைத்துப் படைப்பினங்களையும் ஒன்றுதிரட்டுவான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

• إثبات بشرية المسيح عليه السلام وإثبات آياته الحسية من إحياء الموتى وإبراء الأكمه والأبرص التي أجراها الله على يديه.
2. ஈஸா(அலை) ஒரு மனிதர்தாம் என்பதையும் இறந்தவர்களை உயிர்ப்பித்தமை, பிறவிக் குருடனையையும் தொழுநோயாளியையும் குணப்படுத்தியமை ஆகிய வெளிரங்கமானஅத்தாட்சிகளை அல்லாஹ் அவர் மூலம் நிகழ்த்திக்காட்டினான் என்பதையும் நிரூபித்தல்

• بيان أن آيات الأنبياء تهدف لتثبيت الأتباع وإفحام المخالفين، وأنها ليست من تلقاء أنفسهم، بل تأتي بإذن الله تعالى.
3. இறைத்தூதர்களின் அற்புதங்கள் அவர்களைப் பின்பற்றுபவர்களை உறுதிப்படுத்தவும் நிராகரிப்பவர்களை வாயடைப்பதற்காக வருபவையே அன்றி அவர்களின் புறத்திலிருந்து வருபவையல்ல. மாறாக அல்லாஹ்வின் அனுமதியின் பிரகாரமே நடைபெறுகின்றன.

 
Terjemahan makna Ayah: (109) Surah: Al-Māidah
Daftar surah Nomor Halaman
 
Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil - Daftar isi terjemahan

Diterbitkan oleh Markaz Tafsīr Li Ad-Dirasāt Al-Qur`āniyyah.

Tutup