Check out the new design

Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil * - Daftar isi terjemahan


Terjemahan makna Ayah: (139) Surah: Al-An'ām
وَقَالُوْا مَا فِیْ بُطُوْنِ هٰذِهِ الْاَنْعَامِ خَالِصَةٌ لِّذُكُوْرِنَا وَمُحَرَّمٌ عَلٰۤی اَزْوَاجِنَا ۚ— وَاِنْ یَّكُنْ مَّیْتَةً فَهُمْ فِیْهِ شُرَكَآءُ ؕ— سَیَجْزِیْهِمْ وَصْفَهُمْ ؕ— اِنَّهٗ حَكِیْمٌ عَلِیْمٌ ۟
6.139. “இந்த சாயீபா, பஹீரா போன்ற கால்நடைகளின் வயிற்றிலுள்ள குட்டிகள் உயிரோடு பிறந்தால் அவை எங்கள் ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகும். பெண்களுக்குத் தடை செய்யப்பட்டதாகும். அவற்றின் வயிற்றிலுள்ள குட்டிகள் செத்துப் பிறந்தால் அவை எங்களின் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அனுமதிக்கப்பட்டதாகும்” என்றும் அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் இவ்வாறு கூறியதனால் தகுந்த தண்டனையை அல்லாஹ் அவர்களுக்கு அளிப்பான். தான் வழங்கும் சட்டங்களிலும், தன் படைப்புகளைப் பராமரிப்பதிலும் அவன் ஞானம் மிக்கவன்; அவர்களைக் குறித்து நன்கறிந்தவன்.
Tafsir berbahasa Arab:
Beberapa Faedah Ayat-ayat di Halaman Ini:
• ذم الله المشركين بسبع صفات هي : الخسران والسفاهة وعدم العلم وتحريم ما رزقهم الله والافتراء على الله والضلال وعدم الاهتداء؛ فهذه أمور سبعة، وكل واحد منها سبب تام في حصول الذم.
2. இணைவைப்பாளர்களை அல்லாஹ் ஏழு பண்புகளைக் கொண்டு இழித்துரைத்துள்ளான். அவை: இழப்பு, மடமைத்தனம், அறிவின்மை, அல்லாஹ் வழங்கியதை தடை செய்துகொள்ளல், அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுதல், வழிகேடு, நேர்வழியடையாமை. இவ்வேழு காரியங்களில் ஒவ்வொன்றும் இழிவுக்கான தனிக் காரணமாகும்.

• الأهواء سبب تحريم ما أحل الله وتحليل ما حرم الله.
1. மனஇச்சையே அல்லாஹ் அனுமதித்ததை தடைசெய்வதற்கும் அவன் தடைசெய்ததை அனுமதிப்பதற்கும் காரணமாக இருக்கின்றது.

• وجوب الزكاة في الزروع والثمار عند حصادها، مع جواز الأكل منها قبل إخراج زكاتها، ولا يُحْسَب من الزكاة.
2. பயிர்களையும் பழங்களையும் அறுவடை செய்யும் போது அவற்றிற்குரிய ஸகாத் வழங்குவது கடமையாகும். ஸகாத் வழங்கப்படும் முன்னரே அவற்றிலிருந்து உண்ணலாம். அது ஸகாத்தில் சேராது.

• التمتع بالطيبات مع عدم الإسراف ومجاوزة الحد في الأكل والإنفاق.
3. உண்பதிலும் செலவு செய்வதிலும் வரம்புமீறாது, வீண்விரயம் செய்யாமல் நல்லவற்றை அனுபவிக்கலாம்.

 
Terjemahan makna Ayah: (139) Surah: Al-An'ām
Daftar surah Nomor Halaman
 
Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil - Daftar isi terjemahan

Diterbitkan oleh Markaz Tafsīr Li Ad-Dirasāt Al-Qur`āniyyah.

Tutup