Check out the new design

Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil * - Daftar isi terjemahan


Terjemahan makna Ayah: (41) Surah: Al-A'rāf
لَهُمْ مِّنْ جَهَنَّمَ مِهَادٌ وَّمِنْ فَوْقِهِمْ غَوَاشٍ ؕ— وَكَذٰلِكَ نَجْزِی الظّٰلِمِیْنَ ۟
7.41. கர்வம் கொண்ட இந்த நிராகரிப்பாளர்களுக்கு நரகத்தில் படுக்கை விரிப்புகள் உண்டு. அவர்களுக்கு மேலே நெருப்பிலான போர்வைகள் போர்த்தப்பட்டிருக்கும். அல்லாஹ்வை நிராகரித்து புறக்கணித்து அவனது வரம்புகளை மீறியவர்களுக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குகிறோம்.
Tafsir berbahasa Arab:
Beberapa Faedah Ayat-ayat di Halaman Ini:
• المودة التي كانت بين المكذبين في الدنيا تنقلب يوم القيامة عداوة وملاعنة.
1. இவ்வுலகில் நிராகரிப்பாளர்களிடையே காணப்படும் நட்பு மறுமை நாளில் பகைமையாகவும் சாபமாகவும் ஆகிவிடும்.

• أرواح المؤمنين تفتح لها أبواب السماء حتى تَعْرُج إلى الله، وتبتهج بالقرب من ربها والحظوة برضوانه.
2. நம்பிக்கையாளர்களின் ஆன்மாக்கள் அல்லாஹ்விடம் செல்வதற்காக அவைகளுக்கு வானத்தின் கதவுகள் திறக்கப்படும். இறை நெருக்கத்தையும் திருப்தியையும் பெற்று அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

• أرواح المكذبين المعرضين لا تفتح لها أبواب السماء، وإذا ماتوا وصعدت فهي تستأذن فلا يؤذن لها، فهي كما لم تصعد في الدنيا بالإيمان بالله ومعرفته ومحبته، فكذلك لا تصعد بعد الموت، فإن الجزاء من جنس العمل.
3. அல்லாஹ்வை நிராகரித்த ஆன்மாக்களுக்காக வானத்தின் கதவுகள் திறக்கப்படாது. அவை இறந்தபிறகு வானத்தின்பால் சென்று அனுமதி கேட்டாலும் அவற்றிற்கு அனுமதியளிக்கப்படாது. இவ்வுலகில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை அறிந்து அவனை நேசம் கொண்டு மேலே செல்லாதது போல் இறந்த பிறகும் அவ்வாறு மேலே செல்லாது. ஏனெனில் கூலி செயல்களுக்கேற்பவே கிடைக்கும்.

• أهل الجنة نجوا من النار بعفو الله، وأدخلوا الجنة برحمة الله، واقتسموا المنازل وورثوها بالأعمال الصالحة وهي من رحمته، بل من أعلى أنواع رحمته.
4. சுவனவாசிகள் அல்லாஹ்வின் மன்னிப்பினால் நரகத்திலிருந்து பாதுகாக்கப்பட்டு அவன் அருளால் சுவனத்தில் நுழைக்கப்படுவார்கள். அவன் அருளால் அவர்கள் செய்த நற்செயல்களால் உயர்ந்த அந்தஸ்தையும் சுவனத்தையும் அவர்கள் பெறுவார்கள். அதுவே அவனது மிகப் பெரும் அருள்களில் ஒன்றாகும்.

 
Terjemahan makna Ayah: (41) Surah: Al-A'rāf
Daftar surah Nomor Halaman
 
Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil - Daftar isi terjemahan

Diterbitkan oleh Markaz Tafsīr Li Ad-Dirasāt Al-Qur`āniyyah.

Tutup