Check out the new design

Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil * - Daftar isi terjemahan


Terjemahan makna Surah: Al-Anfāl   Ayah:
وَاعْلَمُوْۤا اَنَّمَا غَنِمْتُمْ مِّنْ شَیْءٍ فَاَنَّ لِلّٰهِ خُمُسَهٗ وَلِلرَّسُوْلِ وَلِذِی الْقُرْبٰی وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنِ وَابْنِ السَّبِیْلِ ۙ— اِنْ كُنْتُمْ اٰمَنْتُمْ بِاللّٰهِ وَمَاۤ اَنْزَلْنَا عَلٰی عَبْدِنَا یَوْمَ الْفُرْقَانِ یَوْمَ الْتَقَی الْجَمْعٰنِ ؕ— وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
8.41. -நம்பிக்கையாளர்களே!- அறிந்துகொள்ளுங்கள், அல்லாஹ்வின் பாதையில் போர்செய்து நிராகரிப்பாளர்களிடமிருந்து நீங்கள் கைப்பற்றிய செல்வங்களை ஐந்து பங்காகப் பிரிக்க வேண்டும். அதில் நான்கு பங்குகள் போரிட்ட வீரர்களிடையே பங்கிடப்பட வேண்டும். ஐந்தாவது பங்கு ஐந்தாகப் பங்கிடப்பட வேண்டும். ஒரு பங்கு அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியது. இது முஸ்லிம்களின் பொதுக் காரியங்களுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். ஒரு பங்கு முஹம்மது நபியின் உறவினர்களான ஹாஷிமின் குடும்பத்தார், முத்தலிபின் குடும்பத்தார் ஆகியோருக்கு அளிக்கப்பட வேண்டும். ஒரு பங்கு அநாதைகளுக்கு வழங்கப்பட வேண்டும். ஒரு பங்கு ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். ஒரு பங்கு வழிப்போக்கர்களுக்காக வழங்கப்பட வேண்டும். நீங்கள் அல்லாஹ்வின் மீதும் சத்தியத்தையும் அசத்தியத்தையும் வேறுபடுத்திக் காட்டிய பத்ருடைய நாளில் நம்முடைய அடியார் முஹம்மதுக்கு இறக்கப்பட்டதன் மீதும் நம்பிக்கைகொண்டவர்களாக இருந்தால் மேற்கூறியவாறே பங்கிடுங்கள். பத்ருடைய தினத்தில் உங்கள் எதிரிகளுக்கு எதிராக அவன் உங்களுக்கு உதவி செய்தான். உங்களுக்கு உதவி செய்த அல்லாஹ் அனைத்தின் மீதும் ஆற்றலுடையவன்.
Tafsir berbahasa Arab:
اِذْ اَنْتُمْ بِالْعُدْوَةِ الدُّنْیَا وَهُمْ بِالْعُدْوَةِ الْقُصْوٰی وَالرَّكْبُ اَسْفَلَ مِنْكُمْ ؕ— وَلَوْ تَوَاعَدْتُّمْ لَاخْتَلَفْتُمْ فِی الْمِیْعٰدِ ۙ— وَلٰكِنْ لِّیَقْضِیَ اللّٰهُ اَمْرًا كَانَ مَفْعُوْلًا ۙ۬— لِّیَهْلِكَ مَنْ هَلَكَ عَنْ بَیِّنَةٍ وَّیَحْیٰی مَنْ حَیَّ عَنْ بَیِّنَةٍ ؕ— وَاِنَّ اللّٰهَ لَسَمِیْعٌ عَلِیْمٌ ۟ۙ
8.42. நீங்கள் மதீனாவிற்கு அருகிலுள்ள பள்ளத்தாக்கிலும், இணைவைப்பாளர்கள் மக்கா பகுதியிலுள்ள மதீனாவை விட்டும் தூரமான பள்ளத்தாக்கிலும், வியாபாரக் குழு செங்கடலுக்கு அருகில் நீங்கள் இருக்கும் இடத்தைவிட தாழ்வான இடத்திலும் இருந்ததை நினைவு கூறுங்கள். நீங்களும் இணைவைப்பாளர்களும் பத்ரில் சந்திப்பதற்கு நேரம் குறித்திருந்தால் ஒருவருக்கொருவர் முரண்பட்டிருப்பீர்கள். ஆனால் அல்லாஹ் நேரம் குறிக்காமலே அங்கு உங்களை ஒன்று சேர்த்தான். இது, அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்து நிராகரிப்பாளர்களைக் கைவிட்டு விடுவதற்காகவும், தன் மார்க்கத்தை மேலோங்கச் செய்து ஷிர்க்கை இழிவுபடுத்தி தான் விரும்பும் விஷயத்தை நிகழ்த்துவதற்காகவேயாகும். இது, நம்பிக்கையாளர்கள் ஆள் மற்றும் ஆயுத பலத்திலும் குறைவாக இருந்தும் தம்மை வென்றுவிட்டதன் மூலம் தெளிவான ஆதாரம் நிரூபனமான பின் நிராகரிப்பாளர்களில் அழிந்தோர் அழிந்துவிட வேண்டும் என்பதற்காகவும் உயிர்வாழ்பவர்கள் அல்லாஹ் அவர்களுக்கு வெளிப்படுத்திய தெளிவான ஆதாரத்துடன் உயிர்வாழ வேண்டும் என்பதற்காகவும்தான். எனவே அல்லாஹ்விடம் வாதிட ஒருவருக்கும் ஆதாரம் எஞ்சியிருக்காது. அனைவரின் பேச்சையும் அல்லாஹ் செவியேற்கிறான். அவர்களின் செயல்களைக் குறித்து அவன் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
Tafsir berbahasa Arab:
اِذْ یُرِیْكَهُمُ اللّٰهُ فِیْ مَنَامِكَ قَلِیْلًا ؕ— وَلَوْ اَرٰىكَهُمْ كَثِیْرًا لَّفَشِلْتُمْ وَلَتَنَازَعْتُمْ فِی الْاَمْرِ وَلٰكِنَّ اللّٰهَ سَلَّمَ ؕ— اِنَّهٗ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟
8.43. -தூதரே!- அல்லாஹ் உம்மீதும் நம்பிக்கையாளர்கள் மீதும் பொழிந்த அருட்கொடைகளை நினைவுகூர்வீராக. உம்முடைய கனவிலே இணைவைப்பாளர்களை குறைந்த எண்ணிக்கையினராகக் காட்டினான். நீர் நம்பிக்கையாளர்களுக்கு இதனை அறிவித்தீர். அவர்கள் இதைக் கொண்டு நற்செய்தி பெற்றுக்கொண்டார்கள். இதனால் எதிரிகளைச் சந்தித்து போரிட வேண்டும் என்ற அவர்களின் எண்ணங்கள் உறுதியாகிவிட்டன. அல்லாஹ் இணைவைப்பாளர்களை உம் கனவிலே அதிக எண்ணிக்கையினராகக் காட்டியிருந்தால் உம்முடைய தோழர்கள் மனந்தளர்ந்திருப்பார்கள்; போர்புரிய அஞ்சியிருப்பார்கள். ஆனாலும் அல்லாஹ் அவர்களை இதிலிருந்து பாதுகாத்து தோல்வியிலிருந்தும் பாதுகாத்தான். தன் தூதரின் கண்களுக்கு அவர்களைக் குறைத்துக் காட்டினான். அவர்களின் உள்ளங்கள் மறைப்பதையும் அவன் நன்கறிந்தவன்.
Tafsir berbahasa Arab:
وَاِذْ یُرِیْكُمُوْهُمْ اِذِ الْتَقَیْتُمْ فِیْۤ اَعْیُنِكُمْ قَلِیْلًا وَّیُقَلِّلُكُمْ فِیْۤ اَعْیُنِهِمْ لِیَقْضِیَ اللّٰهُ اَمْرًا كَانَ مَفْعُوْلًا ؕ— وَاِلَی اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ ۟۠
8.44. -நம்பிக்கையாளர்களே!- நீங்கள் இணைவைப்பாளர்களைச் சந்தித்த போது அல்லாஹ் அவர்களை உங்களுக்குக் குறைத்துக் காட்டியதை நினைவுகூருங்கள். அது அவர்களுடன் போர் புரிய உங்களைத் தூண்டியது. அதேபோன்று இணைவைப்பாளர்களும் பின்வாங்கிச் செல்லாமல் அவர்களும் உங்களுடன் போரிட முன்வருவதற்காக அவர்களின் கண்களுக்கும் உங்களைக் குறைத்துக் காட்டினான். கொலை, கைது ஆகியவற்றின் மூலம் இணைவைப்பாளர்களைப் பழிவாங்கி, எதிரிகளுக்கெதிராக வெற்றியை அளித்து நம்பிக்கையாளர்களுக்கு அருள் புரிந்து முடிவு செய்யப்பட்ட ஒரு காரியத்தை நடாத்துவதற்காகவே இவ்வாறு செய்தான். அல்லாஹ்வின் பக்கமே விவகாரங்கள் அனைத்தும் திரும்புகின்றன. அவன் தீயவர்கள் செய்த தீய செயல்களுக்காக தண்டனை வழங்குகிறான். நல்லவர்கள் செய்த நற்செயல்களுக்காக வெகுமதி வழங்குகிறான்.
Tafsir berbahasa Arab:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا لَقِیْتُمْ فِئَةً فَاثْبُتُوْا وَاذْكُرُوا اللّٰهَ كَثِیْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟ۚ
8.45. அல்லாஹ்வை உண்மைப்படுத்தி, அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! நிராகரிப்பாளர்களின் ஏதேனும் ஒரு கூட்டத்தினரை நீங்கள் சந்தித்தால் உறுதியாக நில்லுங்கள். பயந்துவிடாதீர்கள். அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவுகூருங்கள். அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். அவர்களுக்கு எதிராக உங்களுக்கு உதவிபுரிவதற்கு ஆற்றலுடையவன் அவனே. அவன் நீங்கள் விரும்புவதை உங்களுக்கு வழங்கி நீங்கள் எச்சரிக்கையாக இருப்பதை விட்டும் உங்களை அப்புறப்படுத்தலாம்.
Tafsir berbahasa Arab:
Beberapa Faedah Ayat-ayat di Halaman Ini:
• الغنائم لله يجعلها حيث شاء بالكيفية التي يريد، فليس لأحد شأن في ذلك.
1. போர்ச் செல்வங்கள் அல்லாஹ்வுக்கே உரியன. தான் நாடியவாறு அவன் அதனைப் பங்கிடுகிறான். இதில் வேறு எவருக்கும் உரிமை இல்லை.

• من أسباب النصر تدبير الله للمؤمنين بما يعينهم على النصر، والصبر والثبات والإكثار من ذكر الله.
2. நம்பிக்கையாளர்களுக்கு வெற்றியை வழங்குபவற்றை அவர்களுக்காக அல்லாஹ் திட்டமிடுவதும், பொறுமை, உறுதி, அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறல் ஆகியவை வெற்றிக்கான காரணிகளில் உள்ளவையாகும்.

• قضاء الله نافذ وحكمته بالغة وهي الخير لعباد الله وللأمة كلها.
3. அல்லாஹ்வின் தீர்ப்பே நடந்தேறும். அவனது ஞானம் ஆழமானது. அதுவே அவனது அடியார்களுக்கும் முழு சமூகத்துக்கும் நலவாகும்.

 
Terjemahan makna Surah: Al-Anfāl
Daftar surah Nomor Halaman
 
Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil - Daftar isi terjemahan

Diterbitkan oleh Markaz Tafsīr Li Ad-Dirasāt Al-Qur`āniyyah.

Tutup