Traduzione dei Significati del Sacro Corano - TRADUZIONE TAMIL dell’Esegesi Sintetica del Nobile Corano

external-link copy
23 : 10

فَلَمَّاۤ اَنْجٰىهُمْ اِذَا هُمْ یَبْغُوْنَ فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ ؕ— یٰۤاَیُّهَا النَّاسُ اِنَّمَا بَغْیُكُمْ عَلٰۤی اَنْفُسِكُمْ ۙ— مَّتَاعَ الْحَیٰوةِ الدُّنْیَا ؗ— ثُمَّ اِلَیْنَا مَرْجِعُكُمْ فَنُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟

10.23. அல்லாஹ் அவர்களின் பிரார்த்தனையைச் செவியேற்று அவர்களை அச்சோதனையிலிருந்து காப்பாற்றினால் அவர்களோ அல்லாஹ்வை நிராகரித்து, பாவங்கள் செய்து உலகில் குழப்பம் விளைவிக்கிறார்கள். -மனிதர்களே!- விழித்துக்கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் தீய செயல்களின் மோசமான விளைவை நீங்கள்தான் அனுபவிக்க வேண்டும். அதனால் அல்லாஹ்வுக்கு எந்த தீங்கும் ஏற்படாது. அதன் மூலம் அழியக்கூடிய இவ்வுலக வாழ்க்கையில் நீங்கள் சுகத்தை அனுபவிக்கிறீர்கள். பின்னர் மறுமை நாளில் நம் பக்கமே நீங்கள் திரும்ப வேண்டும். நீங்கள் செய்துகொண்டிருந்த பாவங்கள் குறித்து நாம் உங்களுக்கு அறிவிப்போம். அவற்றிற்கேற்ப நாம் உங்களுக்குத் தண்டனையளிப்போம். info
التفاسير:
Insegnamenti tratti dai versetti:
• الله أسرع مكرًا بمن مكر بعباده المؤمنين.
1. நம்பிக்கை கொண்ட தன் அடியார்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்பவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்வதில் அல்லாஹ் விரைவானவன். info

• بغي الإنسان عائد على نفسه ولا يضر إلا نفسه.
2. மனிதன் செய்யக்கூடிய அநியாயம் அவனுக்கே கேடாக அமையும். அவன் அதன் மூலம் தனக்குத்தானே அநீதி இழைத்துக் கொள்கிறான். info

• بيان حقيقة الدنيا في سرعة انقضائها وزوالها، وما فيها من النعيم فهو فانٍ.
3. விரைவாக அழிந்து விடும் என்ற இவ்வுலகத்தைப் பற்றிய உண்மை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதிலுள்ள இன்பங்களும் அழிபவையே. info

• الجنة هي مستقر المؤمن؛ لما فيها من النعيم والسلامة من المصائب والهموم.
4. ஒரு முஃமினுடைய தங்குமிடம் சுவர்க்கமே. ஏனெனில் அங்குதான் இன்பங்களும், சோதனைகள் மற்றும் கவலைகள் ஆகியவற்றிலிருந்து ஈடேற்றமும் உள்ளது. info