Check out the new design

Traduzione dei Significati del Sacro Corano - Traduzione tamil dell'Abbreviata Esegesi del Nobile Corano * - Indice Traduzioni


Traduzione dei significati Versetto: (61) Sura: Yûnus
وَمَا تَكُوْنُ فِیْ شَاْنٍ وَّمَا تَتْلُوْا مِنْهُ مِنْ قُرْاٰنٍ وَّلَا تَعْمَلُوْنَ مِنْ عَمَلٍ اِلَّا كُنَّا عَلَیْكُمْ شُهُوْدًا اِذْ تُفِیْضُوْنَ فِیْهِ ؕ— وَمَا یَعْزُبُ عَنْ رَّبِّكَ مِنْ مِّثْقَالِ ذَرَّةٍ فِی الْاَرْضِ وَلَا فِی السَّمَآءِ وَلَاۤ اَصْغَرَ مِنْ ذٰلِكَ وَلَاۤ اَكْبَرَ اِلَّا فِیْ كِتٰبٍ مُّبِیْنٍ ۟
10.61. -தூதரே!- நீர் ஏதேனும் ஒரு காரியத்தில் இருந்தாலும், குர்ஆனிலிருந்து எதைப் படித்தாலும் -நம்பிக்கையாளர்களே!- நீங்கள் எந்த செயலைச் செய்தாலும் நீங்கள் அதனைச் செய்வதற்கு முன்வந்து அதனை ஆரம்பிக்கும் போதே நாம் உங்களைப் பார்த்துக் கொண்டும், அறிந்து கொண்டும், செவியேற்றுக் கொண்டும் இருக்கிறோம். வானத்திலோ பூமியிலோ அணுவளவும், அதைவிட சிறியதும் பெரியதும் உம் இறைவனின் அறிவை விட்டும் மறையாது. அவைகள் எதுவும் தெளிவான பதிவேட்டில் பதியப்படாமல் இல்லை. சிறியது, பெரியது என எதையும் பாதுகாக்காது அவன் விட்டு விடமாட்டான்.
Esegesi in lingua araba:
Alcuni insegnamenti da trarre da questi versi sono:
• عظم ما ينتظر المشركين بالله من عذاب، حتى إنهم يتمنون دفعه بكل ما في الأرض، ولن يُقْبلَ منهم.
1. இணைவைப்பாளர்களுக்காக காத்திருக்கும் பெரும் வேதனையைக் குறித்து கூறப்பட்டுள்ளது. எந்தளவுக்கெனில் அவர்கள் பூமியிலுள்ள அனைத்தையும் கொடுத்தாவது அதிலிருந்து தப்ப நினைப்பார்கள். அது அவர்களிடமிருந்து ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்படாது.

• القرآن شفاء للمؤمنين من أمراض الشهوات وأمراض الشبهات بما فيه من الهدايات والدلائل العقلية والنقلية.
2. குர்ஆன் தன்னகத்தே பொதிந்திருக்கும் வழிகாட்டல்கள், அறிவுபூர்வமான ஆதாரங்கள் ஆகியவற்றால் இச்சைகள், சந்தேகங்கள் ஆகிய நோய்களிலிருந்து நம்பிக்கையாளர்களுக்கு நிவாரணமாக அமைந்துள்ளது.

• ينبغي للمؤمن أن يفرح بنعمة الإسلام والإيمان دون غيرهما من حطام الدنيا.
3. உலகிலுள்ள அனைத்தைக் காட்டிலும் ஈமான் மற்றும் இஸ்லாம் என்னும் அருட்கொடையைக் கொண்டு நம்பிக்கையாளன் மகிழ்ச்சியடைய வேண்டும்.

• دقة مراقبة الله لعباده وأعمالهم وخواطرهم ونياتهم.
4. அல்லாஹ் தனது அடியார்களின் செயல்கள், ஊசலாட்டங்கள், எண்ணங்கள் என்பவற்றை துல்லியமாக கண்காணிக்கின்றமை குறிப்பிடப்பட்டுள்ளது.

 
Traduzione dei significati Versetto: (61) Sura: Yûnus
Indice delle Sure Numero di pagina
 
Traduzione dei Significati del Sacro Corano - Traduzione tamil dell'Abbreviata Esegesi del Nobile Corano - Indice Traduzioni

Emesso dal Tafseer Center per gli Studi Coranici.

Chiudi