Check out the new design

Traduzione dei Significati del Sacro Corano - Traduzione tamil dell'Abbreviata Esegesi del Nobile Corano * - Indice Traduzioni


Traduzione dei significati Sura: Al-Baqarah   Versetto:
وَلَمَّا جَآءَهُمْ كِتٰبٌ مِّنْ عِنْدِ اللّٰهِ مُصَدِّقٌ لِّمَا مَعَهُمْ ۙ— وَكَانُوْا مِنْ قَبْلُ یَسْتَفْتِحُوْنَ عَلَی الَّذِیْنَ كَفَرُوْا ۚ— فَلَمَّا جَآءَهُمْ مَّا عَرَفُوْا كَفَرُوْا بِهٖ ؗ— فَلَعْنَةُ اللّٰهِ عَلَی الْكٰفِرِیْنَ ۟
2.89. தவ்ராத்திலும் இன்ஜீலிலும் உள்ள சரியான, அடிப்படையான விஷயங்களை உண்மைப்படுத்தியதாக அல்லாஹ்விடமிருந்து குர்ஆன் அவர்களிடம் வந்தது, அவர்கள் அது இறக்கப்படுவதற்கு முன்னர், ஒரு நபி வரக்கூடிய காலம் நெருங்கிவிட்டது. அவர் வந்தவுடன் அவர்மீது நம்பிக்கைகொண்டு, அவரைப் பின்பற்றி நாங்கள் இணைவைப்பாளர்களை வென்றிடுவோம் என்று கூறிக்கொண்டிருந்தனர். அவர்கள் கூறிக்கொண்டிருந்த முஹம்மது நபியும் குர்ஆனும் அவர்களிடம் வந்தபோது, தாங்கள் எதிர்பார்த்தவர்தான் இவர் என்பதை தெளிவாக அறிந்தபின்னரும் அவரை மறுத்தார்கள். அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரிப்பவர்கள் மீது அல்லாஹ்வுடைய சாபம் உண்டாகட்டும்.
Esegesi in lingua araba:
بِئْسَمَا اشْتَرَوْا بِهٖۤ اَنْفُسَهُمْ اَنْ یَّكْفُرُوْا بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ بَغْیًا اَنْ یُّنَزِّلَ اللّٰهُ مِنْ فَضْلِهٖ عَلٰی مَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ ۚ— فَبَآءُوْ بِغَضَبٍ عَلٰی غَضَبٍ ؕ— وَلِلْكٰفِرِیْنَ عَذَابٌ مُّهِیْنٌ ۟
2.90. அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கைகொள்வதற்குப் பதிலாக அவர்கள் பெற்றுக்கொண்டது மோசமானது!. நபித்துவமும், குர்ஆனும் முஹம்மதுக்கு வழங்கப்பட்டது என்ற பொறாமையினாலும், அநியாயமாகவும் அல்லாஹ் இறக்கியவற்றையும், அவனது தூதர்களையும் நிராகரித்தார்கள். முஹம்மதை அவர்கள் நிராகரித்ததனாலும் அதற்கு முன் தவ்ராத்தை திரித்ததனாலும் அல்லாஹ்வின் இரட்டிப்பான கோபத்திற்கு உரியவர்களாகிவிட்டார்கள். முஹம்மதுடைய தூதுத்துவத்தை நிராகரிப்பவர்களுக்கு மறுமைநாளில் இழிவுதரும் வேதனை உண்டு.
Esegesi in lingua araba:
وَاِذَا قِیْلَ لَهُمْ اٰمِنُوْا بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا نُؤْمِنُ بِمَاۤ اُنْزِلَ عَلَیْنَا وَیَكْفُرُوْنَ بِمَا وَرَآءَهٗ ۗ— وَهُوَ الْحَقُّ مُصَدِّقًا لِّمَا مَعَهُمْ ؕ— قُلْ فَلِمَ تَقْتُلُوْنَ اَنْۢبِیَآءَ اللّٰهِ مِنْ قَبْلُ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
2.91. தன்னுடைய தூதரின்மீது அல்லாஹ் இறக்கிய சத்தியத்தையும் நேர்வழியையும் நம்பிக்கைகொள்ளுங்கள் என்று யூதர்களிடம் கூறப்பட்டால், எங்களுடைய தூதர்களின்மீது இறக்கப்பட்டவற்றைத்தான் நம்பிக்கைகொள்வோம் என்று கூறுகிறார்கள். அவர்களிடமுள்ள தவ்ராத்தை குர்ஆன் உண்மைப்படுத்திய பிறகும் அதனை அவர்கள் நிராகரிக்கிறார்கள். அவர்கள் தம்மீது இறக்கப்பட்ட தவ்ராத்தின்மீது உண்மையாகவே நம்பிக்கை கொண்டிருந்தால் குர்ஆனின்மீதும் நம்பிக்கைகொண்டிருப்பார்கள். தூதரே! அவர்களிடம் நீர் கேளும், உங்களிடம் அல்லாஹ்வின் தூதர்கள் இதற்கு முன் கொண்டுவந்த சத்தியத்தை நீங்கள் உண்மையிலேயே நம்பிக்கைகொண்டிருந்தால் பிறகு ஏன் அவர்களை கொலைசெய்தீர்கள்?.
Esegesi in lingua araba:
وَلَقَدْ جَآءَكُمْ مُّوْسٰی بِالْبَیِّنٰتِ ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهٖ وَاَنْتُمْ ظٰلِمُوْنَ ۟
2.92. உங்களிடம் வந்த தூதர் மூசா தான் உண்மையாளரே என நிரூபிக்கும் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். அவ்வாறிருந்தும் அவர் தனது இறைவனைச் சந்திப்பதற்காக சென்ற சமயத்தில் காளைக்கன்றை வணங்கக்கூடிய தெய்வமாக நீங்கள் ஆக்கிக் கொண்டீர்கள். அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவற்றை ஆக்கி அநியாயக்காரர்களாகி விட்டீர்கள். அந்த அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன்.
Esegesi in lingua araba:
وَاِذْ اَخَذْنَا مِیْثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّوْرَ ؕ— خُذُوْا مَاۤ اٰتَیْنٰكُمْ بِقُوَّةٍ وَّاسْمَعُوْا ؕ— قَالُوْا سَمِعْنَا وَعَصَیْنَا ۗ— وَاُشْرِبُوْا فِیْ قُلُوْبِهِمُ الْعِجْلَ بِكُفْرِهِمْ ؕ— قُلْ بِئْسَمَا یَاْمُرُكُمْ بِهٖۤ اِیْمَانُكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
2.93. மூசாவைப் பின்பற்ற வேண்டும், அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நாம் உங்களிடம் உறுதிமொழி வாங்கிய சந்தர்ப்பத்தை நினைவுகூருங்கள். உங்களை அச்சமூட்டுவதற்காக உங்களுக்கு மேலே மலையை உயர்த்தினோம். நாம் கூறினோம், நாம் உங்களுக்கு வழங்கிய தவ்ராத்தை முழு ஈடுபாட்டோடு பற்றிக் கொள்ளுங்கள். கட்டுப்பட்டவாறு செவிசாயுங்கள். அவ்வாறு இல்லையெனில் நாம் உங்களின் மீது மலையை விழச்செய்துவிடுவோம்.எங்கள் செவிகளால் கேட்டு செயல்களால் மாறுசெய்தோம் என்று கூறினீர்கள். அவர்களின் நிராகரிப்பினால் காளைக்கன்று வழிபாடு அவர்களின் உள்ளங்களில் நிலைகொண்டுவிட்டது. தூதரே! நீர் கூறும், நீங்கள் உண்மையிலேயே அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் இந்த ஈமான் உங்களுக்குக் கட்டளையிடும் நிராகரிப்பு மோசமானது! ஏனெனில் உண்மையான ஈமானுடன் நிராகரிப்பு ஒருபோதும் கலந்திருக்காது.
Esegesi in lingua araba:
Alcuni insegnamenti da trarre da questi versi sono:
• اليهود أعظم الناس حسدًا؛ إذ حملهم حسدهم على الكفر بالله وردِّ ما أنزل، بسبب أن الرسول صلى الله عليه وسلم لم يكن منهم.
1. யூதர்கள் பொறாமைமிகுந்தவர்கள். அதனால்தான் முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது சமூகத்தில் உள்ளவரல்ல என்ற ஒரே காரணத்திற்காக அல்லாஹ்வையும், அவன் இறக்கியவற்றையும் அவர்கள் நிராகரித்தனர்.

• أن الإيمان الحق بالله تعالى يوجب التصديق بكل ما أَنزل من كتب، وبجميع ما أَرسل من رسل.
2. அல்லாஹ்வின் மீது உண்மையான நம்பிக்கைகொள்வது, அவன் அனுப்பிய தூதர்கள் அனைவரையும், இறக்கிய வேதங்கள் அனைத்தையும் உண்மைப்படுத்துவதை கட்டாயமாக்குகிறது.

• من أعظم الظلم الإعراض عن الحق والهدى بعد معرفته وقيام الأدلة عليه.
3.சத்தியத்தையும் நேர்வழியையும் அறிந்து, தகுந்த ஆதாரங்கள் கிடைத்த பின்னர் அவற்றைப் புறக்கணிப்பது பெரும் ஒரு அநியாயமாகும்.

• من عادة اليهود نقض العهود والمواثيق، وهذا ديدنهم إلى اليوم.
4. ஒப்பந்தங்களையும் உடன்படிக்கைகளையும் முறிப்பது யூதர்களின் வழமையாகும். இன்று வரை இது அவர்களிடம் குடிகொண்டுள்ளது.

 
Traduzione dei significati Sura: Al-Baqarah
Indice delle Sure Numero di pagina
 
Traduzione dei Significati del Sacro Corano - Traduzione tamil dell'Abbreviata Esegesi del Nobile Corano - Indice Traduzioni

Emesso dal Tafseer Center per gli Studi Coranici.

Chiudi