Traduzione dei Significati del Sacro Corano - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Indice Traduzioni


Traduzione dei significati Versetto: (250) Sura: Al-Baqarah
وَلَمَّا بَرَزُوْا لِجَالُوْتَ وَجُنُوْدِهٖ قَالُوْا رَبَّنَاۤ اَفْرِغْ عَلَیْنَا صَبْرًا وَّثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَی الْقَوْمِ الْكٰفِرِیْنَ ۟ؕ
2.250. ஜாலூத்திற்கும் அவனுடைய படைகளுக்கும் முன்னால் இவர்கள் வெளிப்பட்டபோது பின்வருமாறு பிரார்த்தனை செய்தார்கள்: எங்கள் இறைவா! எங்கள் உள்ளத்தில் பொறுமையைப் பொழிவாயாக. எதிரியிடம் தோற்று புறங்காட்டி ஓடிவிடாத அளவுக்கு எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக. உன் ஆற்றலையும் ஆதரவையும் கொண்டு உன்னை நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவிபுரிவாயாக.
Esegesi in lingua araba:
Alcuni insegnamenti da trarre da questi versi sono:
• من حكمة القائد أن يُعرِّض جيشه لأنواع الاختبارات التي يتميز بها جنوده ويعرف الثابت من غيره.
1. படைத்தளபதி தன் படையினரை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும். அப்போதுதான் நிலைகுலையாமல் உறுதியாக இருப்பவர்களை அவரால் வேறுபடுத்தி அறியமுடியும்.

• العبرة في النصر ليست بمجرد كثرة العدد والعدة فقط، وإنما معونة الله وتوفيقه أعظم الأسباب للنصر والظَّفَر.
2. வெற்றி ஆள்பலத்தைக் கொண்டோ ஆயுதபலத்தைக்கொண்டோ கிடைக்காது. அவன் உடன் இருத்தலும், அல்லாஹ்வின் உதவியும் அருளுமே வெற்றிக்கான மிகப்பிரதான காரணிகளாகும்.

• لا يثبت عند الفتن والشدائد إلا من عَمَرَ اليقينُ بالله قلوبَهم، فمثل أولئك يصبرون عند كل محنة، ويثبتون عند كل بلاء.
3. கஷ்டங்களிலும் சோதனைகளிலும் அல்லாஹ்வின்மீது உறுதியான நம்பிக்கைகொண்டவர்கள்தாம் நிலைகுலையாமல் உறுதியாக இருக்கிறார்கள். இவர்கள்தாம் ஒவ்வொரு கஷ்டத்திலும் பொறுமையை மேற்கொள்கிறார்கள். ஒவ்வொரு சோதனையிலும் உறுதியாக இருக்கிறார்கள்.

• الضراعة إلى الله تعالى بقلب صادق متعلق به من أعظم أسباب إجابة الدعاء، ولا سيما في مواطن القتال.
4. உண்மையான உள்ளத்தோடு அல்லாஹ்விடம் மன்றாடுதல் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான முக்கியமான காரணியாகும், குறிப்பாக போர்ச் சமயங்களில்.

• من سُنَّة الله تعالى وحكمته أن يدفع شر بعض الخلق وفسادهم في الأرض ببعضهم.
5. பூமியில் சிலர் செய்யும் தீங்குகளையும் குழப்பங்களையும் அல்லாஹ் வேறு சிலரால் தடுக்கிறான். இது அல்லாஹ்வின் வழிமுறையாகும்.

 
Traduzione dei significati Versetto: (250) Sura: Al-Baqarah
Indice delle Sure Numero di pagina
 
Traduzione dei Significati del Sacro Corano - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Indice Traduzioni

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Chiudi