Check out the new design

Traduzione dei Significati del Sacro Corano - Traduzione tamil dell'Abbreviata Esegesi del Nobile Corano * - Indice Traduzioni


Traduzione dei significati Sura: Tâ-Hâ   Versetto:
فَتَعٰلَی اللّٰهُ الْمَلِكُ الْحَقُّ ۚ— وَلَا تَعْجَلْ بِالْقُرْاٰنِ مِنْ قَبْلِ اَنْ یُّقْضٰۤی اِلَیْكَ وَحْیُهٗ ؗ— وَقُلْ رَّبِّ زِدْنِیْ عِلْمًا ۟
20.114. அல்லாஹ் மிக உயர்ந்தவன். புனிதமானவன், மகத்துவமானவன். அனைத்துக்கும் உரிமையாளனான ஆட்சியாளன். அவன் உண்மையானவன். அவனுடைய வார்த்தையே உண்மையானது. இணைவைப்பாளர்கள் வர்ணிக்கும் பண்புகளைவிட்டும் அவன் மிக உயர்ந்தவன். -தூதரே!- ஜிப்ரீல் உமக்குக் குர்ஆனை எடுத்துரைத்து முடிப்பதற்கு முன்னரே அவருடன் சேர்ந்து விரைவாக ஓதுவதற்கு முயற்சி செய்யாதீர். “இறைவா! நீ எனக்குக் கற்றுக் கொடுத்த கல்வியுடன் இன்னும் கல்வியை அதிகப்படுத்துவாயாக” என்று கூறுவீராக.
Esegesi in lingua araba:
وَلَقَدْ عَهِدْنَاۤ اِلٰۤی اٰدَمَ مِنْ قَبْلُ فَنَسِیَ وَلَمْ نَجِدْ لَهٗ عَزْمًا ۟۠
20.115. நாம் ஏற்கனவே, குறிப்பிட்ட அந்த மரத்திலிருந்து உண்ணக்கூடாது என்று ஆதமுக்கு வஸிய்யத் செய்து இருந்தோம். அதனைவிட்டும் தடுத்து அதன் விளைவையும் தெளிவுபடுத்தினோம். ஆதம் பொறுமையை மேற்கொள்ளாமல் வஸிய்யத்தை மறந்து அந்த மரத்திலிருந்து உண்டுவிட்டார். அவரிடம் நாம் நம் வஸிய்யத்தை பேணி நடக்கும் பலமான உறுதியைக் காணவில்லை.
Esegesi in lingua araba:
وَاِذْ قُلْنَا لِلْمَلٰٓىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِیْسَ ؕ— اَبٰی ۟
20.116. -தூதரே!- ஆதமுக்கு முகமன் கூறும்பொருட்டு அவருக்குச் சிரம்பணியுங்கள் என்று நாம் வானவர்களிடம் கூறியதை நினைவு கூர்வீராக. அவர்கள் அனைவரும் சிரம்பணிந்தார்கள். ஆனால் -அவர்களுடன் இருந்த அவர்கள் இனத்தைச் சாராத- இப்லீஸ் சிரம்பணியவில்லை. அவன் கர்வத்தினால் சிரம்பணிவதிலிருந்து தவிர்ந்துகொண்டான்.
Esegesi in lingua araba:
فَقُلْنَا یٰۤاٰدَمُ اِنَّ هٰذَا عَدُوٌّ لَّكَ وَلِزَوْجِكَ فَلَا یُخْرِجَنَّكُمَا مِنَ الْجَنَّةِ فَتَشْقٰی ۟
20.117. நாம் கூறினோம்: “ஆதமே! நிச்சயமாக ஷைத்தான் உமக்கும் உம் மனைவிக்கும் எதிரியாக இருக்கின்றான். எனவே அவன் ஏற்படுத்தும் ஊசலாட்டத்தில் அவனுக்கு வழிப்படுவதன் மூலம் உம்மையும் உமது மனைவியையும் சுவனத்தில் இருந்து வெளியேற்றிவிட வேண்டாம். அப்போது நீர்தான் கஷ்டங்களையும் சிரமங்களையும் சுமக்க நேரிடும்.
Esegesi in lingua araba:
اِنَّ لَكَ اَلَّا تَجُوْعَ فِیْهَا وَلَا تَعْرٰی ۟ۙ
20.118. நிச்சயமாக சுவனத்தில் உங்களுக்கு பசி ஏற்படாது உணவளிக்க வேண்டியதும் நிர்வாணமாகாமல் இருக்க ஆடையணிவிப்பதும் அல்லாஹ்வின் மீதுள்ள விடயமாகும்.
Esegesi in lingua araba:
وَاَنَّكَ لَا تَظْمَؤُا فِیْهَا وَلَا تَضْحٰی ۟
20.119. தாகம் ஏற்படாமலிருக்க அவன் உங்களுக்கு நீர் புகட்டுவதும், உங்களை சூரிய வெப்பம் தாக்காது உங்களுக்கு நிழலளிப்பதும் அவனது பொறுப்பே.
Esegesi in lingua araba:
فَوَسْوَسَ اِلَیْهِ الشَّیْطٰنُ قَالَ یٰۤاٰدَمُ هَلْ اَدُلُّكَ عَلٰی شَجَرَةِ الْخُلْدِ وَمُلْكٍ لَّا یَبْلٰی ۟
20.120. ஷைத்தான் ஆதமுக்கு ஊசலாட்டத்தை ஏற்படுத்தினான். அவரிடம் கூறினான்: “நான் உமக்கு ஒரு மரத்தைக் குறித்துக் கூறட்டுமா? அதிலிருந்து உண்பவர் மரணிக்கவே மாட்டார். என்றென்றும் உயிருடன் நிரந்தரமாக நிலைத்திருப்பார். என்றும் முடிவடையாத, துண்டிக்கப்படாத நிலையான உரிமையைப் பெறுவார்”
Esegesi in lingua araba:
فَاَكَلَا مِنْهَا فَبَدَتْ لَهُمَا سَوْاٰتُهُمَا وَطَفِقَا یَخْصِفٰنِ عَلَیْهِمَا مِنْ وَّرَقِ الْجَنَّةِ ؗ— وَعَصٰۤی اٰدَمُ رَبَّهٗ فَغَوٰی ۪۟ۖ
20.121. ஆதமும் ஹவ்வாவும் உண்பதற்குத் தடுக்கப்பட்ட அந்த மரத்திலிருந்து உண்டுவிட்டார்கள். எனவே மறைக்கப்பட்டிருந்த அவர்களின் மறைவிடங்கள் அவர்களுக்கு வெளிப்பட்டன. அவர்கள் சுவனத்தின் இலைகளைப் பறித்து அவற்றால் தனது மறைவிடங்களை மறைக்க ஆரம்பித்தார்கள். ஆதம் தம் இறைவனின் கட்டளைக்கு மாறுசெய்தார். ஏனெனில் அந்த மரத்திலிருந்து உண்பதைத் தவிர்க்குமாறு அவன் இட்ட கட்டளையை அவர் எடுத்து நடக்காமல் அவர் தனக்கு ஆகுமாகாததை செய்துவிட்டார்.
Esegesi in lingua araba:
ثُمَّ اجْتَبٰهُ رَبُّهٗ فَتَابَ عَلَیْهِ وَهَدٰی ۟
20.122. பின்னர் அல்லாஹ் அவரைத் தேர்ந்தெடுத்து அவரது பாவமன்னிப்பை ஏற்றுக் கொண்டான். அவருக்கு நேரான வழியைக் காட்டினான்.
Esegesi in lingua araba:
قَالَ اهْبِطَا مِنْهَا جَمِیْعًا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ ۚ— فَاِمَّا یَاْتِیَنَّكُمْ مِّنِّیْ هُدًی ۙ۬— فَمَنِ اتَّبَعَ هُدَایَ فَلَا یَضِلُّ وَلَا یَشْقٰی ۟
20.123. அல்லாஹ் ஆதமுக்கும் ஹவ்வாவுக்கும் கூறினான்: “நீங்கள் இருவரும் இப்லீசும் சுவனத்திலிருந்து இறங்கிவிடுங்கள். அவன் உங்களுக்கும் நீங்கள் அவனுக்கும் எதிரியாவீர்கள். என் புறத்திலிருந்து என் பாதையை தெளிவுபடுத்தக்கூடிய வழிகாட்டல் உங்களிடம் வந்தால் உங்களில் யார் அதனைப் பின்பற்றி அதன்படி செயல்பட்டு, அதனை விட்டும் நெறிபிறழமாட்டாரோ அவர் சத்தியத்தைவிட்டு வழிதவறவும் மாட்டார்; மறுமை நாளில் வேதனையை அனுபவிக்கும் துர்பாக்கியசாலியாகவும் ஆகமாட்டார். மாறாக அல்லாஹ் அவரை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வான்.
Esegesi in lingua araba:
وَمَنْ اَعْرَضَ عَنْ ذِكْرِیْ فَاِنَّ لَهٗ مَعِیْشَةً ضَنْكًا وَّنَحْشُرُهٗ یَوْمَ الْقِیٰمَةِ اَعْمٰی ۟
20.124. யார் என் உபதேசத்தை ஏற்றுக் கொள்ளாமல் அதற்கு விடையளிக்காமல் புறக்கணித்தாரோ நிச்சயமாக அவருக்கு இவ்வுலகிலும் மண்ணறையிலும் நெருக்கடியான வாழ்வுதான் உண்டு. மறுமை நாளில் அவரை பார்வையையும் ஆதாரத்தையும் இழந்தவராக மஹ்ஷர் பெருவெளியை நோக்கி நாம் இழுத்துச் செல்வோம்.
Esegesi in lingua araba:
قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِیْۤ اَعْمٰی وَقَدْ كُنْتُ بَصِیْرًا ۟
20.125. உபதேசத்தை புறக்கணித்தவன் கேட்பான்: “என் இறைவா! இன்று என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்? நான் உலகில் பார்வையுடையவனாகத்தானே இருந்தேன்!
Esegesi in lingua araba:
Alcuni insegnamenti da trarre da questi versi sono:
• الأدب في تلقي العلم، وأن المستمع للعلم ينبغي له أن يتأنى ويصبر حتى يفرغ المُمْلِي والمعلم من كلامه المتصل بعضه ببعض.
1. கல்வி கற்கும்போது பேண வேண்டிய ஒழுங்குமுறை, கல்வியை செவியேற்கக்கூடியவர் (மாணவர்) ஆசிரியர் தனது ஒன்றோடொன்று தொடர்புள்ள பேச்சை சொல்லி முடிக்கும்வரை நிதானமாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும்.

• نسي آدم فنسيت ذريته، ولم يثبت على العزم المؤكد، وهم كذلك، وبادر بالتوبة فغفر الله له، ومن يشابه أباه فما ظلم.
2. ஆதம் மறந்தார். அவருடைய சந்ததியினரும் மறந்தார்கள். அவர் பலமான உறுதியைக் கடைப்பிடிக்கவில்லை. அவ்வாறே அவருடைய சந்ததியினரும் உறுதியைக் கடைப்பிடிக்கவில்லை. அவர் விரைந்து அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரினார். அல்லாஹ்வும் அவரை மன்னித்துவிட்டான். யார் தம் தந்தையைப் போன்று விரைந்து பாவமன்னிப்புக் கோருபவர் அநீதி இழைத்தவராகமாட்டார்.

• فضيلة التوبة؛ لأن آدم عليه السلام كان بعد التوبة أحسن منه قبلها.
3. பாவமன்னிப்புக் கோருவதன் சிறப்பு தெளிவாகிறது. ஏனெனில் ஆதம் பாவமன்னிப்புக் கோரிய பிறகு அதற்கு முன்னர் இருந்ததைவிட சிறந்தவராகி விட்டார்.

• المعيشة الضنك في دار الدنيا، وفي دار البَرْزَخ، وفي الدار الآخرة لأهل الكفر والضلال.
4. நிராகரிப்பாளர்களுக்கும், வழிகேடர்களுக்கும் இவ்வுலகிலும், மண்ணறையிலும், மறுமையிலும் நெருக்கடியான வாழ்வு உண்டு.

 
Traduzione dei significati Sura: Tâ-Hâ
Indice delle Sure Numero di pagina
 
Traduzione dei Significati del Sacro Corano - Traduzione tamil dell'Abbreviata Esegesi del Nobile Corano - Indice Traduzioni

Emesso dal Tafseer Center per gli Studi Coranici.

Chiudi