Check out the new design

Traduzione dei Significati del Sacro Corano - Traduzione tamil dell'Abbreviata Esegesi del Nobile Corano * - Indice Traduzioni


Traduzione dei significati Sura: Al ‘Imrân   Versetto:
لَنْ تَنَالُوا الْبِرَّ حَتّٰی تُنْفِقُوْا مِمَّا تُحِبُّوْنَ ؕ۬— وَمَا تُنْفِقُوْا مِنْ شَیْءٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِیْمٌ ۟
3.92. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் விரும்பும் செல்வத்தைச் செலவுசெய்யாதவரை நல்லோர்களின் கூலியையும் அவர்களது உயர்நிலையையும் உங்களால் அடையமுடியாது. குறைவாகவோ அதிகமாகவோ நீங்கள் செலவுசெய்யும் அனைத்தையும் அல்லாஹ் நன்கறிந்தவன். உங்களின் எண்ணங்களையும் செயல்களையும் அவன் நன்கறிந்தவன். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
Esegesi in lingua araba:
كُلُّ الطَّعَامِ كَانَ حِلًّا لِّبَنِیْۤ اِسْرَآءِیْلَ اِلَّا مَا حَرَّمَ اِسْرَآءِیْلُ عَلٰی نَفْسِهٖ مِنْ قَبْلِ اَنْ تُنَزَّلَ التَّوْرٰىةُ ؕ— قُلْ فَاْتُوْا بِالتَّوْرٰىةِ فَاتْلُوْهَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
3.93. தூய்மையான அனைத்து உணவுகளும் இஸ்ராயீலின் மக்களுக்கு அனுமதிக்கப்பட்டதாக இருந்தது. தவ்ராத் இறக்கப்படுவதற்கு முன்னால் யஃகூபு தமக்குத்தாமே விலக்கிக் கொண்டவற்றைத்தவிர எதுவும் அவர்கள்மீது தடைசெய்யப்பட்டிருக்கவில்லை. அவை தவ்ராத்தில் எங்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளன என்று யூதர்கள் கூறுவது பொய்யாகும். தூதரே! நீர் அவர்களிடம் கூறுவீராக: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் தவ்ராத்தைக் கொண்டுவந்து படித்துக் காட்டுங்கள்.” அவர்கள் வாயடைத்துப்போனார்கள். அவர்களால் அதைக் கொண்டுவர முடியவில்லை. யூதர்கள் தவ்ராத்தின் பெயரால் புனைந்து கூறியதற்கும் அதன் உள்ளடக்கத்தைத் திரித்தனர் என்பதற்கும் இது ஒரு உதாரணமாகும்.
Esegesi in lingua araba:
فَمَنِ افْتَرٰی عَلَی اللّٰهِ الْكَذِبَ مِنْ بَعْدِ ذٰلِكَ فَاُولٰٓىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ۟ؔ
3.94. யஃகூபு தமக்குத்தாமே விலக்கிகொண்டார், அல்லாஹ் தடைசெய்யவில்லை என்பதற்கான ஆதாரம் தெளிவான பின்னரும் அல்லாஹ்வின்மீது பொய்யாக இட்டுக்கட்டுபவர்கள்தாம் அநியாயக்காரர்கள். ஏனெனில் அவர்கள் ஆதாரம் தெளிவானபின்னரும் சத்தியத்தை விட்டுவிட்டார்கள்.
Esegesi in lingua araba:
قُلْ صَدَقَ اللّٰهُ ۫— فَاتَّبِعُوْا مِلَّةَ اِبْرٰهِیْمَ حَنِیْفًا ؕ— وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِیْنَ ۟
3.95. தூதரே! நீர் கூறுவீராக: “அல்லாஹ் யஃகூபைக் குறித்து அறிவித்ததிலும் அவன் இறக்கியவற்றிலும் சட்டமாக்கியவற்றிலும் உண்மையே கூறினான். ஆகவே இப்ராஹீமின் மார்க்கத்தையே நீங்கள் பின்பற்றுங்கள். நிச்சயமாக அவர் எல்லா மார்க்கங்களையும் விட்டுவிலகி இஸ்லாத்தின் பக்கம் முழுமையாக சாய்ந்தவராகவும் அல்லாஹ்வுக்கு எப்பொழுதும் எதனையும் இணைகற்பிக்காதவராகவும் இருந்தார்.
Esegesi in lingua araba:
اِنَّ اَوَّلَ بَیْتٍ وُّضِعَ لِلنَّاسِ لَلَّذِیْ بِبَكَّةَ مُبٰرَكًا وَّهُدًی لِّلْعٰلَمِیْنَ ۟ۚ
3.96. அல்லாஹ்வை வணங்குவதற்காக பூமியில் மக்கள் அனைவருக்குமாக கட்டப்பட்ட முதல் ஆலயம் மக்காவில் அமைந்துள்ள புனித ஆலயமாகும். அது பாக்கியம்மிக்க, ஏராளமான உலக மறுமைப் பயன்களை உள்ளடக்கிய ஆலயமாகும். அது உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக இருக்கின்றது.
Esegesi in lingua araba:
فِیْهِ اٰیٰتٌۢ بَیِّنٰتٌ مَّقَامُ اِبْرٰهِیْمَ ۚ۬— وَمَنْ دَخَلَهٗ كَانَ اٰمِنًا ؕ— وَلِلّٰهِ عَلَی النَّاسِ حِجُّ الْبَیْتِ مَنِ اسْتَطَاعَ اِلَیْهِ سَبِیْلًا ؕ— وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِیٌّ عَنِ الْعٰلَمِیْنَ ۟
3.97. இந்த ஆலயத்தில் அதன் சிறப்பினை எடுத்துரைக்கும் புனிதச் சின்னங்கள் வழிபாட்டுத் தளங்கள் போன்ற வெளிப்படையான அடையாளங்கள் இருக்கின்றன. இப்ராஹீம் கஃபாவின் சுவரை உயர்த்த நாடியபோது நின்ற கல்லும் அந்த அடையாளங்களில் உள்ளவையாகும். அவற்றுள், அங்கு நுழைந்தவர் அச்சம்கொள்ளமாட்டார், அவருக்கு எந்த நோவினையும் கொடுக்கப்படமாட்டாது என்பதும் உள்ளடங்கும். மனிதர்களில் அந்த ஆலயத்திற்குச் சென்றுவர சக்திபெற்றவர்மீது ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்றுவதற்கு அங்கு செல்வது அல்லாஹ்வுக்குச் செய்யவேண்டிய கடமையாகும். ஹஜ் கடமையை மறுத்தவர் அல்லாஹ்வை நிராகரித்துவிட்டார். இத்தகைய நிராகரிப்பாளர்களை விட்டும், உலகத்தார் அனைவரையும் விட்டும் அல்லாஹ் தேவையற்றவன்.
Esegesi in lingua araba:
قُلْ یٰۤاَهْلَ الْكِتٰبِ لِمَ تَكْفُرُوْنَ بِاٰیٰتِ اللّٰهِ ۖۗ— وَاللّٰهُ شَهِیْدٌ عَلٰی مَا تَعْمَلُوْنَ ۟
3.98. தூதரே! நீர் கூறுவீராக: “வேதம் வழங்கப்பட்ட யூதர்கள் மற்றும் கிருஸ்தவர்களே, முஹம்மது நபியின் தூதுத்துவத்தை உண்மைப்படுத்தக்கூடிய தெளிவான ஆதாரங்களை ஏன் மறுக்கிறீர்கள்? அவற்றில் சில ஆதாரங்கள் தவ்ராத்திலும், இன்ஜீலிலும் கூட இடம்பெற்றுள்ளன. உங்களின் இந்த செயல்களை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். அதற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
Esegesi in lingua araba:
قُلْ یٰۤاَهْلَ الْكِتٰبِ لِمَ تَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ مَنْ اٰمَنَ تَبْغُوْنَهَا عِوَجًا وَّاَنْتُمْ شُهَدَآءُ ؕ— وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ۟
3.99. தூதரே! நீர் கூறுவீராக: “வேதம் வழங்கப்பட்ட யூதர்கள் மற்றும் கிருஸ்தவர்களே, உங்கள் வேதங்களில் உள்ளவற்றை உண்மைப்படுத்தக்கூடிய உண்மையான மார்க்கம் இதுதான் என்று நீங்கள் சாட்சி கூறிக்கொண்டே அல்லாஹ்வின் மார்க்கத்தின்மீது நம்பிக்கைகொண்ட மனிதர்களை ஏன் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டும் தடுக்கின்றீர்கள்? அவனுடைய மார்க்கம் சத்தியத்திலிருந்து அசத்தியத்தின் பக்கம் சாய்வதையும் அதனை ஏற்றுக்கொண்டோர் நேர்வழியைவிட்டும் வழிகேட்டின் பக்கம் சாய்வதையுமா நீங்கள் விரும்புகிறீர்கள்? அல்லாஹ்வை நிராகரித்தல், அவனது பாதையை விட்டுத் தடுத்தல் ஆகிய நீங்கள் செய்யும் காரியங்களைஅவன் கவனிக்காமலில்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குத் தண்டனை வழங்குவான்.
Esegesi in lingua araba:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنْ تُطِیْعُوْا فَرِیْقًا مِّنَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ یَرُدُّوْكُمْ بَعْدَ اِیْمَانِكُمْ كٰفِرِیْنَ ۟
3.100. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! வேதம் வழங்கப்பட்ட யூதர்கள் மற்றும் கிருஸ்தவர்களில் ஒரு பிரிவினர் கூறும் விஷயத்திற்குக் கட்டுப்பட்டு அவர்களது கருத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டால், அவர்களின் பொறாமையினாலும் வழிகேட்டினாலும் நம்பிக்கைகொண்ட பிறகு உங்களை நிராகரிப்பின் பக்கம் திருப்பிவிடுவார்கள்.
Esegesi in lingua araba:
Alcuni insegnamenti da trarre da questi versi sono:
• كَذِبُ اليهود على الله تعالى وأنبيائه، ومن كذبهم زعمهم أن تحريم يعقوب عليه السلام لبعض الأطعمة نزلت به التوراة.
1. யூதர்கள் அல்லாஹ்வின் மீதும்அவனுடைய தூதர்களின் மீதும் ஏராளமான பொய்களைப் புனைந்துள்ளார்கள். சில உணவுகளை யஃகூப் (அலை) அவர்கள் தமக்குத்தாமே விலக்கிக்கொண்டதும் தவ்ராத்தில் இறங்கியதே எனக் கூறியதும் அந்தப்பொய்களில் ஒன்றே.

• أعظم أماكن العبادة وأشرفها البيت الحرام، فهو أول بيت وضع لعبادة الله، وفيه من الخصائص ما ليس في سواه.
2. வழிபாட்டுத்தளங்களில் மிக முக்கியமானதும் மிகச் சிறந்ததும் மக்காவில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஹராமாகும். இதுதான் அல்லாஹ்வை வணங்குவதற்காக பூமியில் கட்டப்பட்ட முதல் ஆலயமாகும். இங்கு ஏனைய பள்ளிவாயில்களில் இல்லாத பல சிறப்பம்சங்கள் உள்ளன.

• ذَكَرَ الله وجوب الحج بأوكد ألفاظ الوجوب تأكيدًا لوجوبه.
3. ஹஜ்ஜின் அவசியத்தை வலியுறுத்துவதற்காக அது கடமை என்பதை மிக உறுதியான வார்த்தைகளினால் அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.

 
Traduzione dei significati Sura: Al ‘Imrân
Indice delle Sure Numero di pagina
 
Traduzione dei Significati del Sacro Corano - Traduzione tamil dell'Abbreviata Esegesi del Nobile Corano - Indice Traduzioni

Emesso dal Tafseer Center per gli Studi Coranici.

Chiudi