Check out the new design

Traduzione dei Significati del Sacro Corano - Traduzione tamil dell'Abbreviata Esegesi del Nobile Corano * - Indice Traduzioni


Traduzione dei significati Sura: Muhammad   Versetto:
وَلَوْ نَشَآءُ لَاَرَیْنٰكَهُمْ فَلَعَرَفْتَهُمْ بِسِیْمٰهُمْ ؕ— وَلَتَعْرِفَنَّهُمْ فِیْ لَحْنِ الْقَوْلِ ؕ— وَاللّٰهُ یَعْلَمُ اَعْمَالَكُمْ ۟
47.30. தூதரே! நாம் உமக்கு நயவஞ்சகர்களை காட்ட நாடியிருந்தால் உமக்குக் காட்டியிருப்போம். நீர் அவர்களின் அடையாளங்களைக் கொண்டு அவர்களை அறிந்துகொள்வீர். விரைவில் அவர்கள் பேசும் முறையினைக் கொண்டும் அவர்களை அறிந்துகொள்வீர். அல்லாஹ் உங்களின் செயல்களை அறிவான். அதில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் அவற்றிற்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான்.
Esegesi in lingua araba:
وَلَنَبْلُوَنَّكُمْ حَتّٰی نَعْلَمَ الْمُجٰهِدِیْنَ مِنْكُمْ وَالصّٰبِرِیْنَ ۙ— وَنَبْلُوَاۡ اَخْبَارَكُمْ ۟
47.31. -நம்பிக்கையாளர்களே!- உங்களில் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து வீரமரணம் அடைபவர்களையும் அவனது எதிரிகளுடனான போராட்டத்தில் பொறுமையாக நிலைத்திருப்பவர்களையும் நாம் அறிந்துகொள்ளும்பொருட்டு நிச்சயம் உங்களை, ஜிஹாத், எதிரிகளுடனான போர் ஆகியவற்றின் மூலம் சோதித்தே தீருவோம். நாம் உங்களை சோதித்து உங்களில் உண்மையாளர்களையும் பொய்யர்களையும் அறிந்துகொள்வோம்.
Esegesi in lingua araba:
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِیْلِ اللّٰهِ وَشَآقُّوا الرَّسُوْلَ مِنْ بَعْدِ مَا تَبَیَّنَ لَهُمُ الْهُدٰی ۙ— لَنْ یَّضُرُّوا اللّٰهَ شَیْـًٔا ؕ— وَسَیُحْبِطُ اَعْمَالَهُمْ ۟
47.32. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்து, தங்களையும் மற்றவர்களையும் அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டுத் தடுத்து, அவனது தூதருக்கு -அவர் உண்மையான நபிதான் என்பது தெளிவானபிறகும்- மாறுசெய்து அவருடன் பகைமை பாராட்டுபவர்கள் அல்லாஹ்வுக்கு எந்தத் தீங்கும் இழைத்துவிட முடியாது. அவர்கள் தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக்கொள்கிறார்கள். அல்லாஹ் அவர்களின் செயல்களை வீணாக்கிவிடுவான்.
Esegesi in lingua araba:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اَطِیْعُوا اللّٰهَ وَاَطِیْعُوا الرَّسُوْلَ وَلَا تُبْطِلُوْۤا اَعْمَالَكُمْ ۟
47.33. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! அல்லாஹ்வுடையவும் தூதருடையவும் ஏவல்களை எடுத்து நடந்தும் அவர்களின் விலக்கலைத் தவிர்ந்தும் அவர்களுக்குக் கட்டுப்படுங்கள். உங்களின் செயல்களை நிராகரிப்பு, முகஸ்துதி போன்ற ஏனையவற்றால் வீணாக்கி விடாதீர்கள்.
Esegesi in lingua araba:
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِیْلِ اللّٰهِ ثُمَّ مَاتُوْا وَهُمْ كُفَّارٌ فَلَنْ یَّغْفِرَ اللّٰهُ لَهُمْ ۟
47.34. நிச்சயமாக யாரெல்லாம் அல்லாஹ்வை நிராகரித்து தங்களையும் மற்றவர்களையும் அவனுடைய மார்க்கத்தைவிட்டுத் திருப்பி நிராகரித்த நிலையிலேயே பாவமன்னிப்புக் கோராமால் மரணித்தும் விடுகிறார்களோ அவர்களின் பாவங்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்க மாட்டான். மாறாக அவற்றிற்காக அவன் அவர்களை குற்றம்பிடிப்பான். அவர்களை நிரந்தரமாக நரகத்தில் பிரவேசிக்கச் செய்வான்.
Esegesi in lingua araba:
فَلَا تَهِنُوْا وَتَدْعُوْۤا اِلَی السَّلْمِ ۖۗ— وَاَنْتُمُ الْاَعْلَوْنَ ۖۗ— وَاللّٰهُ مَعَكُمْ وَلَنْ یَّتِرَكُمْ اَعْمَالَكُمْ ۟
47.35. -நம்பிக்கையாளர்களே!- நீங்கள் ஆதிக்கத்துடனும் வெற்றியுடனும் இருக்கும் நிலையில் உங்களின் எதிரிகளை எதிர்கொள்வதில் தளர்ந்து அவர்கள் உங்களை சமாதானத்திற்கு அழைக்கும் முன்னரே நீங்கள் அதன்பால் அழைப்பு விடுக்காதீர்கள். தன் உதவியின்மூலம் அல்லாஹ் உங்களுடன் இருக்கின்றான். அவன் உங்கள் செயல்களுக்கான கூலியில் எதையும் குறைத்துவிட மாட்டான். மாறாக அவன் உங்களுக்கு தன்னிடமிருந்து மேலதிகமாக வழங்குவான்.
Esegesi in lingua araba:
اِنَّمَا الْحَیٰوةُ الدُّنْیَا لَعِبٌ وَّلَهْوٌ ؕ— وَاِنْ تُؤْمِنُوْا وَتَتَّقُوْا یُؤْتِكُمْ اُجُوْرَكُمْ وَلَا یَسْـَٔلْكُمْ اَمْوَالَكُمْ ۟
47.36. உலக வாழ்க்கை வீணும் விளையாட்டும்தான். எனவே எந்த அறிவாளியும் அதில் கவனம் செலுத்தி மறுமைக்காக செயல்படாமல் இருக்கமாட்டான். நீங்கள் அல்லாஹ்வின்மீதும் அவனது தூதரின்மீதும் நம்பிக்கைகொண்டு, அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சினால் அவன் உங்கள் செயல்களுக்கான கூலியை குறைவின்றி முழுமையாக வழங்கிவிடுவான். உங்கள் செல்வங்கள் அனைத்தையும் அவன் உங்களிடம் கோருவதில்லை. நிச்சயமாக கடமையான ஸகாத்தையே அளிக்கும்படி உங்களிடம் வேண்டுகிறான்.
Esegesi in lingua araba:
اِنْ یَّسْـَٔلْكُمُوْهَا فَیُحْفِكُمْ تَبْخَلُوْا وَیُخْرِجْ اَضْغَانَكُمْ ۟
47.37. அவன் உங்கள் செல்வங்கள் அனைத்தையும் தந்துவிடுமாறு வலியுறுத்திக் கேட்டால் நீங்கள் கஞ்சத்தனம் செய்வீர்கள். அவன் உங்கள் உள்ளங்களிலிருக்கும் அல்லாஹ்வின் பாதையில் செலவளிப்பதிலுள்ள வெறுப்பை வெளிப்படுத்திவிடுவான். எனவேதான் உங்கள்மீது கருணைகாட்டும்பொருட்டு அவன் இவ்வாறு கேட்பதை விட்டுவிட்டான்.
Esegesi in lingua araba:
هٰۤاَنْتُمْ هٰۤؤُلَآءِ تُدْعَوْنَ لِتُنْفِقُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ ۚ— فَمِنْكُمْ مَّنْ یَّبْخَلُ ۚ— وَمَنْ یَّبْخَلْ فَاِنَّمَا یَبْخَلُ عَنْ نَّفْسِهٖ ؕ— وَاللّٰهُ الْغَنِیُّ وَاَنْتُمُ الْفُقَرَآءُ ۚ— وَاِنْ تَتَوَلَّوْا یَسْتَبْدِلْ قَوْمًا غَیْرَكُمْ ۙ— ثُمَّ لَا یَكُوْنُوْۤا اَمْثَالَكُمْ ۟۠
47.38. இதோ நீங்கள் உங்கள் செல்வங்களிலிருந்து அல்லாஹ்வின் பாதையில் சிறிது பகுதியை செலவுசெய்யுமாறு வேண்டப்படுகிறீர்கள். உங்கள் செல்வங்கள் அனைத்தையும் செலவுசெய்யுமாறு அவன் உங்களிடம் வேண்டவில்லை. ஆனாலும் உங்களில் சிலர் கஞ்சத்தனத்தினால் வேண்டப்படும் தர்மத்தைத் தடுத்துக்கொள்கின்றார்கள். அல்லாஹ்வின் பாதையில் தனது செல்வத்தில் சிறிது பகுதியை செலவுசெய்யாமல் கஞ்சத்தனம் செய்பவர் உண்மையில் தனக்கு எதிராக செலவுசெய்ததன் நன்மைகளை இழப்பதன் மூலம் கஞ்சத்தனம் செய்கிறார். அல்லாஹ் தேவையற்றவன். உங்கள் தர்மத்தின்பால் அவனுக்கு தேவைகிடையாது. நீங்களே அவனிடம் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். நீங்கள் இஸ்லாத்தை விட்டுவிட்டு நிராகரிப்பின்பால் திரும்பினால் அவன் உங்களை அழித்துவிட்டு வேறு ஒரு சமுதாயத்தைக் கொண்டுவருவான். பின்னர் அவர்கள் உங்களைப்போன்று இருக்கமாட்டார்கள். மாறாக அவர்கள் அவனுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள்.
Esegesi in lingua araba:
Alcuni insegnamenti da trarre da questi versi sono:
• سرائر المنافقين وخبثهم يظهر على قسمات وجوههم وأسلوب كلامهم.
1. நயவஞ்சகர்களின் உளக்கிடக்கைகளும் தீய குணங்களும் அவர்களின் முகபாவனைகளிலும் பேசும் முறைகளிலும் வெளிப்பட்டுவிடும்.

• الاختبار سُنَّة إلهية لتمييز المؤمنين من المنافقين.
2. நயவஞ்சகர்களிடமிருந்து நம்பிக்கையாளர்களை வேறுபடுத்துவதற்காக சோதிப்பது இறைவனின் நியதியாகும்.

• تأييد الله لعباده المؤمنين بالنصر والتسديد.
3. அல்லாஹ் நம்பிக்கைகொண்ட தன் அடியார்களை தன் உதவியின்மூலம் வலுப்படுத்துகிறான்.

• من رفق الله بعباده أنه لا يطلب منهم إنفاق كل أموالهم في سبيل الله.
4. அல்லாஹ் தன் அடியார்களின்மீது காட்டும் கருணை, அவன் அவர்களின் செல்வங்கள் அனைத்தையும் தன் பாதையில் செலவுசெய்யுமாறு அவர்களிடம் வேண்டவில்லை.

 
Traduzione dei significati Sura: Muhammad
Indice delle Sure Numero di pagina
 
Traduzione dei Significati del Sacro Corano - Traduzione tamil dell'Abbreviata Esegesi del Nobile Corano - Indice Traduzioni

Emesso dal Tafseer Center per gli Studi Coranici.

Chiudi