Check out the new design

Traduzione dei Significati del Sacro Corano - Traduzione tamil dell'Abbreviata Esegesi del Nobile Corano * - Indice Traduzioni


Traduzione dei significati Sura: Al-Mâ’idah   Versetto:
قَالَ عِیْسَی ابْنُ مَرْیَمَ اللّٰهُمَّ رَبَّنَاۤ اَنْزِلْ عَلَیْنَا مَآىِٕدَةً مِّنَ السَّمَآءِ تَكُوْنُ لَنَا عِیْدًا لِّاَوَّلِنَا وَاٰخِرِنَا وَاٰیَةً مِّنْكَ ۚ— وَارْزُقْنَا وَاَنْتَ خَیْرُ الرّٰزِقِیْنَ ۟
5.114. ஈஸா(அலை) அவர்களின் வேண்டுதலுக்குப் பதிலளித்தவாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்: “எங்கள் இறைவா, எங்கள் மீது உணவுத்தட்டை இறக்குவாயாக. எங்களில் தற்போது வாழ்வோரும் பின்னர் வருவோரும் உனக்கு நன்றி செலுத்தும் விதமாக அதனைப் பெருநாளாக ஆக்கிக் கொள்வோம். அது நீ ஒருவனே என்பதற்கும், எனது தூதுத்துவத்துவம் உண்மை என்பதற்கும் சான்றாக அமையும். உன்னை வழிபடுவதற்கு உதவி செய்யும் வாழ்வாதாரத்தை எங்களுக்கு வழங்குவாயாக. எங்கள் இறைவா, நிச்சயமாக நீ வாழ்வாதாரம் அளிப்பவர்களில் மிகச் சிறந்தவன்.”
Esegesi in lingua araba:
قَالَ اللّٰهُ اِنِّیْ مُنَزِّلُهَا عَلَیْكُمْ ۚ— فَمَنْ یَّكْفُرْ بَعْدُ مِنْكُمْ فَاِنِّیْۤ اُعَذِّبُهٗ عَذَابًا لَّاۤ اُعَذِّبُهٗۤ اَحَدًا مِّنَ الْعٰلَمِیْنَ ۟۠
5.115. ஈஸாவின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். அவன் கூறினான்: “நீங்கள் வேண்டிய உணவுத்தட்டை நான் உங்கள் மீது இறக்குவேன். நான் இறக்கிய பிறகு யாரேனும் நிராகரித்தால் அவர் தன்னைத்தானே பழித்துக் கொள்ளட்டும். உலகில் யாருக்கும் வழங்காத கடும் தண்டனையை நான் அவருக்கு வழங்குவேன். ஏனெனில் அவன் தெளிவான சான்றினைக் கண்ட பின்னரும் பிடிவாதத்தினால் அதனை நிராகரித்தான். அல்லாஹ் தன் வாக்குறுதியை நிரூபித்து அவர்கள் மீது உணவுத்தட்டை இறக்கினான்.
Esegesi in lingua araba:
وَاِذْ قَالَ اللّٰهُ یٰعِیْسَی ابْنَ مَرْیَمَ ءَاَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُوْنِیْ وَاُمِّیَ اِلٰهَیْنِ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ— قَالَ سُبْحٰنَكَ مَا یَكُوْنُ لِیْۤ اَنْ اَقُوْلَ مَا لَیْسَ لِیْ ۗ— بِحَقٍّ ؔؕ— اِنْ كُنْتُ قُلْتُهٗ فَقَدْ عَلِمْتَهٗ ؕ— تَعْلَمُ مَا فِیْ نَفْسِیْ وَلَاۤ اَعْلَمُ مَا فِیْ نَفْسِكَ ؕ— اِنَّكَ اَنْتَ عَلَّامُ الْغُیُوْبِ ۟
5.116. மறுமை நாளில் மர்யமின் மகன் ஈஸாவிடம், “மர்யமின் மகன் ஈஸாவே, “என்னையையும் என் தாயையும் அல்லாஹ்வை விடுத்து வணக்கத்திற்குரியவர்களாக ஆக்கிக் கொள்ளுங்கள்” என்று நீர் கூறினீரா?” என அல்லாஹ் கூறுவதை நினைத்துப் பார்ப்பீராக: அதற்கு ஈஸா தம் இறைவனின் தூய்மையை உறுதிப்படுத்தியவராகக் கூறுவார், “சத்தியத்தைத் தவிர வேறு எதைக்கூறுவதற்கும் எனக்கு உரிமை இல்லை. நான் அவ்வாறு கூறியிருந்தால் நீ அதனை அறிந்திருப்பாய். ஏனெனில் எதுவும் உன்னை விட்டு மறைவாக இல்லை. நான் என் மனதில் மறைத்துவைப்பதையும் நீ அறிவாய். உன் மனதில் உள்ளவற்றை நான் அறியமாட்டேன். நீ மட்டுமே வெளிப்படையானதையும் மறைவானதையும் நன்கறிந்தவன்.
Esegesi in lingua araba:
مَا قُلْتُ لَهُمْ اِلَّا مَاۤ اَمَرْتَنِیْ بِهٖۤ اَنِ اعْبُدُوا اللّٰهَ رَبِّیْ وَرَبَّكُمْ ۚ— وَكُنْتُ عَلَیْهِمْ شَهِیْدًا مَّا دُمْتُ فِیْهِمْ ۚ— فَلَمَّا تَوَفَّیْتَنِیْ كُنْتَ اَنْتَ الرَّقِیْبَ عَلَیْهِمْ ؕ— وَاَنْتَ عَلٰی كُلِّ شَیْءٍ شَهِیْدٌ ۟
5.117. ஈஸா தம் இறைவனிடம் கூறுவார்: “உன்னை மட்டுமே வணங்க வேண்டும் என்று கட்டளையிடுமாறு நீ எனக்கு கட்டளையிட்டதைத்தான் நான் அவர்களிடம் கூறினேன். நான் அவர்களிடையே இருந்த வரை அவர்கள் கூறுவதை கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என் தவணையை நிறைவுசெய்து என்னை உயிரோடு வானத்தின்பால் உயர்த்திய பின்னர் நீயே அவர்களின் செயல்களை கண்காணிப்பவனாக இருக்கின்றாய். நீ அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறாய். எதுவும் உன்னை விட்டு மறைய முடியாது. நான் அவர்களிடம் கூறியது, எனக்குப் பிறகு அவர்கள் கூறியது எதுவும் உன்னைவிட்டு மறைவாக இல்லை.
Esegesi in lingua araba:
اِنْ تُعَذِّبْهُمْ فَاِنَّهُمْ عِبَادُكَ ۚ— وَاِنْ تَغْفِرْ لَهُمْ فَاِنَّكَ اَنْتَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
5.118. இறைவா, நீ அவர்களை தண்டித்தால் அவர்கள் உன் அடியார்கள்தாம் அவர்களின் விஷயத்தில் நீ நாடியதைச் செய்கின்றாய். நீ அவர்களில் நம்பிக்கைகொண்டவர்கள் மீது அருள்புரிந்தால் யாராலும் அதனைத் தடுக்க முடியாது. நீ யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் உன்னை மிகைக்க முடியாது. உன்னுடைய திட்டங்களில் நீ ஞானம்மிக்கவன்.
Esegesi in lingua araba:
قَالَ اللّٰهُ هٰذَا یَوْمُ یَنْفَعُ الصّٰدِقِیْنَ صِدْقُهُمْ ؕ— لَهُمْ جَنّٰتٌ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ— رَضِیَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ ؕ— ذٰلِكَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟
5.119. அல்லாஹ் ஈஸாவிடம் கூறினான்: “இந்த நாள் எண்ணங்களிலும் செயல்களிலும் வார்த்தைகளிலும் உண்மையானவர்களுக்கு அவர்களது வாய்மை பயனளிக்கக்கூடிய நாளாகும். அவர்களுக்குச் சுவனங்கள் உண்டு. அவற்றின் மரங்களுக்கும் மாளிகைகளுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். மரணம் அவர்களுக்கு ஏற்படாது. அல்லாஹ் அவர்களைப் பொருந்திக்கொண்டான். இனி அவன் ஒருபோதும் அவர்கள் மீது கோபம் கொள்ள மாட்டான். அவர்களும் தங்களுக்குக் கிடைத்த நிலையான அருட்கொடைகளின் காரணமாக அவனைப் பொருந்திக்கொண்டனர். இந்தக் கூலியும் இறை திருப்தியுமே மிகப் பெரிய வெற்றியாகும். இதற்கு இணையான வேறு எதுவும் இல்லை.
Esegesi in lingua araba:
لِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا فِیْهِنَّ ؕ— وَهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟۠
5.120. வானங்களிலும் பூமியிலும் ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. அவன்தான் அவையிரண்டையும் படைத்து நிர்வகித்து வருகிறான். அவையிரண்டிலுமுள்ள படைப்புகள் அனைத்தும் அவனது அதிகாரத்திற்கே உட்பட்டவையாக இருக்கின்றன. அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனிடமிருந்து தப்பிவிட முடியாது.
Esegesi in lingua araba:
Alcuni insegnamenti da trarre da questi versi sono:
• توعد الله تعالى كل من أصرَّ على كفره وعناده بعد قيام الحجة الواضحة عليه.
1. தெளிவான சான்றுகளைக் கண்டபின்னரும் நிராகரிப்பில் நிலைத்திருப்பவர்களுக்கு அல்லாஹ் எச்சரிக்கை விடுத்துள்ளான்.

• تَبْرئة المسيح عليه السلام من ادعاء النصارى بأنه أبلغهم أنه الله أو أنه ابن الله أو أنه ادعى الربوبية أو الألوهية.
2. தன்னை அல்லாஹ் என்று அல்லது அல்லாஹ்வின் மகன் என்று அல்லது இறைமை அல்லது தெய்வீகத் தன்மை தனக்கு இருப்பதாகக் ஈஸா கூறினார் - என்பது போன்ற கிறிஸ்தவர்களின் வாதங்களை விட்டும் ஈஸா நிரபராதியாவார்.

• أن الله تعالى يسأل يوم القيامة عظماء الناس وأشرافهم من الرسل، فكيف بمن دونهم درجة؟!
3. மக்களில் கண்ணியமானவர்களான தூதர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களையே அல்லாஹ் விசாரணை செய்யும்போது மற்றவர்களின் நிலை என்னவாகும்?

• علو منزلة الصدق، وثناء الله تعالى على أهله، وبيان نفع الصدق لأهله يوم القيامة.
4. உண்மை உயர்வானது. உண்மையாளர்களை அல்லாஹ் புகழ்ந்துள்ளான். மறுமை நாளில் உண்மை தன்னைச் சார்ந்தவர்களுக்குப் அது பயனளிக்கும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

 
Traduzione dei significati Sura: Al-Mâ’idah
Indice delle Sure Numero di pagina
 
Traduzione dei Significati del Sacro Corano - Traduzione tamil dell'Abbreviata Esegesi del Nobile Corano - Indice Traduzioni

Emesso dal Tafseer Center per gli Studi Coranici.

Chiudi