Check out the new design

Traduzione dei Significati del Sacro Corano - Traduzione tamil dell'Abbreviata Esegesi del Nobile Corano * - Indice Traduzioni


Traduzione dei significati Versetto: (105) Sura: Al-Mâ’idah
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا عَلَیْكُمْ اَنْفُسَكُمْ ۚ— لَا یَضُرُّكُمْ مَّنْ ضَلَّ اِذَا اهْتَدَیْتُمْ ؕ— اِلَی اللّٰهِ مَرْجِعُكُمْ جَمِیْعًا فَیُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
5.105. அல்லாஹ்வை உண்மைப்படுத்தி, அவனுடைய தூதரைப் பின்பற்றி, அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! உங்களைப் பற்றிக் கவலைப்படுங்கள்; உங்களை நீங்கள் சீர்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் நேர்வழியில் இருந்தால் மக்களின் வழிகேட்டால் உங்களுக்குத் தீங்கு நேராது. நீங்கள் அவர்களுக்குப் பொறுப்பாளிகள் அல்ல. நன்மையை ஏவுவதும் தீமையைத் தடுப்பதும் நீங்களை நேர்வழியில் இருப்பதற்கான அடையாளமேயாகும். மறுமைநாளில் அல்லாஹ்விடமே நீங்கள் திரும்ப வேண்டும். இவ்வுலகில் நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு அறிவிப்பான். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
Esegesi in lingua araba:
Alcuni insegnamenti da trarre da questi versi sono:
• إذا ألزم العبد نفسه بطاعة الله، وأمر بالمعروف ونهى عن المنكر بحسب طاقته، فلا يضره بعد ذلك ضلال أحد، ولن يُسْأل عن غيره من الناس، وخاصة أهل الضلال منهم.
1. அடியான் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு தன்னால் இயன்றவரை நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் செயலில் ஈடுபட்டால் மற்றவர்களின் வழிகேடு அவனுக்கு எந்த தீங்கையும் அளிக்காது. அவனிடம் ஏனைய மனிதர்களைக் குறித்து குறிப்பாக வழிகேடர்களைக் குறித்து விசாரிக்கப்பட மாட்டாது.

• الترغيب في كتابة الوصية، مع صيانتها بإشهاد العدول عليها.
2. உயிலை எழுதுமாறும் அதற்கு நீதிமிக்க சாட்சிகளை ஏற்படுத்தி அதனைப் பாதுகாக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

• بيان الصورة الشرعية لسؤال الشهود عن الوصية.
3. உயிலைக் குறித்து சாட்சிகளிடம் விசாரிக்கும் முறை குறித்து மார்க்க வரையறை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

 
Traduzione dei significati Versetto: (105) Sura: Al-Mâ’idah
Indice delle Sure Numero di pagina
 
Traduzione dei Significati del Sacro Corano - Traduzione tamil dell'Abbreviata Esegesi del Nobile Corano - Indice Traduzioni

Emesso dal Tafseer Center per gli Studi Coranici.

Chiudi