Check out the new design

Traduzione dei Significati del Sacro Corano - Traduzione tamil dell'Abbreviata Esegesi del Nobile Corano * - Indice Traduzioni


Traduzione dei significati Sura: At-Tawbah   Versetto:
وَالَّذِیْنَ اتَّخَذُوْا مَسْجِدًا ضِرَارًا وَّكُفْرًا وَّتَفْرِیْقًا بَیْنَ الْمُؤْمِنِیْنَ وَاِرْصَادًا لِّمَنْ حَارَبَ اللّٰهَ وَرَسُوْلَهٗ مِنْ قَبْلُ ؕ— وَلَیَحْلِفُنَّ اِنْ اَرَدْنَاۤ اِلَّا الْحُسْنٰی ؕ— وَاللّٰهُ یَشْهَدُ اِنَّهُمْ لَكٰذِبُوْنَ ۟
9.107. நயவஞ்சகர்களில் சிலர் அல்லாஹ்வை வழிபடுவதற்கின்றி முஸ்லிம்களுக்கு தீங்கிழைக்கவும் அவர்களிடையே பிரிவினை ஏற்படுத்தவும் தங்களை வலுப்படுத்தி நிராகரிப்பை வளர்க்கவும் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்ப்பவர்களை எதிர்பார்த்தும் ஒரு பள்ளிவாயிலை ஏற்படுத்தியுள்ளார்கள். இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் சத்தியமிட்டுக் கூறுவார்கள், நாங்கள் முஸ்லிம்களின் வசதியையே கவனத்தில் கொண்டோம்.” என்று. அவர்களது இக்கூற்றில் அவர்கள் பொய்யர்களே என்பதற்கு அல்லாஹ் சாட்சியாக உள்ளான்.
Esegesi in lingua araba:
لَا تَقُمْ فِیْهِ اَبَدًا ؕ— لَمَسْجِدٌ اُسِّسَ عَلَی التَّقْوٰی مِنْ اَوَّلِ یَوْمٍ اَحَقُّ اَنْ تَقُوْمَ فِیْهِ ؕ— فِیْهِ رِجَالٌ یُّحِبُّوْنَ اَنْ یَّتَطَهَّرُوْا ؕ— وَاللّٰهُ یُحِبُّ الْمُطَّهِّرِیْنَ ۟
9.108. -நபியே!- இப்படிப்பட்ட பள்ளிவாயிலில் தொழுகைக்காக நயவஞ்சகர்கள் உங்களுக்கு விடுத்துள்ள அழைப்பை ஏற்காதீர். முதன் முதலில் இறையச்சத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட ‘குபா’ பள்ளிவாயிலே நிராகரிப்பின் அடிப்படையில் நிறுவப்பட்ட இந்த பள்ளிவாயிலை விட நீர் நின்று தொழுவதற்குத் தகுதியான பள்ளிவாயிலாகும். அங்கு அழுக்குகளிலிருந்து தண்ணீரின் மூலமும் பாவங்களிலிருந்து பாவமன்னிப்புக் கோரிக்கையின் மூலமும் தூய்மையாவதை விரும்பக்கூடிய மனிதர்கள் இருக்கிறார்கள். அழுக்குகளிலிருந்தும் பாவங்களிலிருந்தும் தூய்மையாக இருக்கக்கூடியவர்களை அல்லாஹ் நேசிக்கின்றான்.
Esegesi in lingua araba:
اَفَمَنْ اَسَّسَ بُنْیَانَهٗ عَلٰی تَقْوٰی مِنَ اللّٰهِ وَرِضْوَانٍ خَیْرٌ اَمْ مَّنْ اَسَّسَ بُنْیَانَهٗ عَلٰی شَفَا جُرُفٍ هَارٍ فَانْهَارَ بِهٖ فِیْ نَارِ جَهَنَّمَ ؕ— وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟
9.109. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சியும் அதிகமான நன்மையான செயல்களின் மூலம் அல்லாஹ்வின் திருப்தியுடனும் தம் கட்டடத்தை நிறுவியவர்கள், முஸ்லிம்களுக்குத் தீங்கிழைக்கவும் அவர்களிடையே பிரிவினை ஏற்படுத்தவும் நிராகரிப்பை வலுப்படுத்தவும் ஒரு பள்ளிவாயிலை கட்டியவர்களுக்கு சமமாவார்களா என்ன? இருவரும் ஒருபோதும் சமமாக மாட்டார்கள். முதல் கட்டடம் உறுதியானது. இடிந்து வீழ்ந்து விடும் என அஞ்ச வேண்டியதில்லை. இரண்டாவது கட்டடத்திற்கு உதாரணம் குழியின் ஓரத்தில் ஒரு கட்டடத்தை கட்டியவனுக்கு ஒத்ததாகும். அதனால் அது இடிந்து வீழ்ந்து விட்டது. அவனுடன் சேர்ந்து அவனது கட்டிடமும் நரகப் படுகுழியில் சரிந்து விழுந்து விட்டது. நிராகரிப்பினாலும் நயவஞ்சகத்தினாலும் அநியாயம் செய்யும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழிகாட்டமாட்டான்.
Esegesi in lingua araba:
لَا یَزَالُ بُنْیَانُهُمُ الَّذِیْ بَنَوْا رِیْبَةً فِیْ قُلُوْبِهِمْ اِلَّاۤ اَنْ تَقَطَّعَ قُلُوْبُهُمْ ؕ— وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟۠
9.110. மரணத்தின் மூலமோ கொல்லப்படுவதன் மூலமோ அவர்களின் உள்ளங்கள் சிதையும் வரை தீங்கிழைப்பதற்காக அவர்கள் கட்டிய அப்பள்ளிவாயில் அவர்களின் உள்ளங்களில் சந்தேகமாகவும் நயவஞ்சகமாகவும் இருந்து கொண்டேயிருக்கும். தன் அடியார்களின் செயல்களை அல்லாஹ் நன்கறிந்தவன். அவன் நலவு அல்லது தீமைக்கு அவன் முடிவு செய்யும் கூலியில் ஞானம்மிக்கவன்.
Esegesi in lingua araba:
اِنَّ اللّٰهَ اشْتَرٰی مِنَ الْمُؤْمِنِیْنَ اَنْفُسَهُمْ وَاَمْوَالَهُمْ بِاَنَّ لَهُمُ الْجَنَّةَ ؕ— یُقَاتِلُوْنَ فِیْ سَبِیْلِ اللّٰهِ فَیَقْتُلُوْنَ وَیُقْتَلُوْنَ ۫— وَعْدًا عَلَیْهِ حَقًّا فِی التَّوْرٰىةِ وَالْاِنْجِیْلِ وَالْقُرْاٰنِ ؕ— وَمَنْ اَوْفٰی بِعَهْدِهٖ مِنَ اللّٰهِ فَاسْتَبْشِرُوْا بِبَیْعِكُمُ الَّذِیْ بَایَعْتُمْ بِهٖ ؕ— وَذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟
9.111. நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கை கொண்ட அடியார்களின் உயிர்களை -அவன்தான் அவற்றிற்கு உரிமையாளன் என்ற போதிலும்- மிக உயர்ந்த விலையான சுவனத்துக்குப் பகரமாக அவர்களிடமிருந்து வாங்கிக் கொண்டான். அவர்கள் அவனுடைய வாக்கை மேலோங்கச் செய்வதற்காக நிராகரிப்பாளர்களுடன் போரிடுகிறார்கள். அதில் நிராகரிப்பாளர்களைக் கொல்கிறார்கள்; நிராகரிப்பாளர்களால் கொல்லப்படுகிறார்கள். அல்லாஹ் மூஸாவுக்கு அளித்த தவ்ராத்திலும் ஈஸாவுக்கு அளித்த இன்ஜீலிலும் முஹம்மதுக்கு அளித்த குர்ஆனிலும் இவ்வாறு உண்மையான வாக்குறுதியை வழங்கியுள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவர் யாருமில்லை. -நம்பிக்கையாளர்களே!- நீங்கள் அல்லாஹ்விடம் செய்து கொண்ட வியாபாரத்தைக் குறித்து மகிழ்ச்சியடையுங்கள். நீங்கள் மிகப் பெரும் இலாபத்தை சம்பாதித்துவிட்டீர்கள். இந்த வியாபாரம்தான் மகத்தான வெற்றியாகும்.
Esegesi in lingua araba:
Alcuni insegnamenti da trarre da questi versi sono:
• محبة الله ثابتة للمتطهرين من الأنجاس البدنية والروحية.
1. உடல் மற்றும் ஆன்மீக அழுக்குகளிலிருந்து தூய்மையாக இருப்பவர்களை அல்லாஹ் நேசிக்கிறான்.

• لا يستوي من عمل عملًا قصد به وجه الله؛ فهذا العمل هو الذي سيبقى ويسعد به صاحبه، مع من قصد بعمله نصرة الكفر ومحاربة المسلمين؛ وهذا العمل هو الذي سيفنى ويشقى به صاحبه.
2. அல்லாஹ்வின் திருப்தியை நாடி ஒரு செயலைச் செய்தவர்களும் தனது செயல் மூலம் நிராகரிப்புக்கு உதவுவதையும் முஸ்லிம்களை எதிர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டவர்களும் சமமாக மாட்டார்கள். அல்லாஹ்வின் திருப்திக்காக செய்யப்பட்ட செயல் நிலைத்திருக்கும். அதனைச் செய்தவர் ஈடேற்றம் பெறுவார். நிராகரிப்பாளர்களுக்கு உதவி செய்வதற்காக செய்யப்பட்ட செயல் அழிந்து விடும். அவ்வாறு செய்பவர்கள் துர்பாக்கியத்திற்கு ஆளாவார்கள்.

• مشروعية الجهاد والحض عليه كانت في الأديان التي قبل الإسلام أيضًا.
3. இஸ்லாத்துக்கு முன்னிருந்த மார்க்கங்களிலும் ஜிஹாத் விதியாக்கப்பட்டிருந்ததுடன் அது ஊக்குவிக்கப்பட்டும் இருந்தது.

• كل حالة يحصل بها التفريق بين المؤمنين فإنها من المعاصي التي يتعين تركها وإزالتها، كما أن كل حالة يحصل بها جمع المؤمنين وائتلافهم يتعين اتباعها والأمر بها والحث عليها.
4. இறைவிசுவாசிகளுக்கு மத்தியில் பிரிவினையைத் தோற்றுவிக்கும் அனைத்து செயல்களும் விடவேண்டிய ஒழிக்கப்பட வேண்டிய பாவங்களாகும். அது போன்றே இறை விசுவாசிகளுக்கு மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்தும் ஒவ்வொரு செயலும் பின்பற்றப்பட வேண்டியதும் ஏவப்பட்டு ஊக்குவிக்கப்பட வேண்டியதுமாகும்.

 
Traduzione dei significati Sura: At-Tawbah
Indice delle Sure Numero di pagina
 
Traduzione dei Significati del Sacro Corano - Traduzione tamil dell'Abbreviata Esegesi del Nobile Corano - Indice Traduzioni

Emesso dal Tafseer Center per gli Studi Coranici.

Chiudi