Traduzione dei Significati del Sacro Corano - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Indice Traduzioni


Traduzione dei significati Versetto: (124) Sura: At-Tawbah
وَاِذَا مَاۤ اُنْزِلَتْ سُوْرَةٌ فَمِنْهُمْ مَّنْ یَّقُوْلُ اَیُّكُمْ زَادَتْهُ هٰذِهٖۤ اِیْمَانًا ۚ— فَاَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا فَزَادَتْهُمْ اِیْمَانًا وَّهُمْ یَسْتَبْشِرُوْنَ ۟
9.124. அல்லாஹ் தன் தூதர் மீது ஏதேனும் அத்தியாயத்தை இறக்கினால் நயவஞ்சகர்களில் சிலர் சிலரிடம், “உங்களில் இந்த அத்தியாயம் யாருடைய நம்பிக்கையை அதிகப்படுத்தியது” என்று பரிகாசமாகக் கேட்கிறார்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனுடைய தூதரை உண்மைப்படுத்தியவர்களுக்கு இறக்கப்பட்ட அத்தியாயம் அவர்களின் நம்பிக்கையோடு இன்னும் நம்பிக்கையை அதிகப்படுத்தியது. அவர்கள் இறக்கப்பட்ட வஹியால் அதில் அடங்கியுள்ள உலக மற்றும் மறுமை ரீதியான பயன்களால் மகிழ்ச்சியடைகிறார்கள்.
Esegesi in lingua araba:
Alcuni insegnamenti da trarre da questi versi sono:
• وجوب ابتداء القتال بالأقرب من الكفار إذا اتسعت رقعة الإسلام، ودعت إليه حاجة.
1. இஸ்லாமிய நாடு பரந்து விரிந்து விட்டால் தேவை ஏற்படின் அருகிலிருக்கும் நிராகரிப்பாளர்களுடன் போரை ஆரம்பிப்பதே கடமையாகும்.

• بيان حال المنافقين حين نزول القرآن عليهم وهي الترقُّب والاضطراب.
2. குர்ஆன் இறங்கிக் கொண்டிருந்த சமயத்தில் நயவஞ்சகர்களின் நிலை எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அவர்கள் எதிர்பார்ப்புடனும் பதற்றத்துடனும் காணப்படுவார்கள்.

• بيان رحمة النبي صلى الله عليه وسلم بالمؤمنين وحرصه عليهم.
3. நம்பிக்கையாளர்களின் மீது நபியவர்கள் வைத்துள்ள அன்பும் ஆர்வமும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

• في الآيات دليل على أن الإيمان يزيد وينقص، وأنه ينبغي للمؤمن أن يتفقد إيمانه ويتعاهده فيجدده وينميه؛ ليكون دائمًا في صعود.
4. ஈமான் அதிகரிக்கும், குறையும். நம்பிக்கையாளன் எப்போதும் உயர்வை நோக்கி செல்வதற்காக தனது ஈமானில் கவனம் செலுத்தி அதனைப் புதுப்பித்து, அதிகரிக்கும் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கு மேற்கூறிய வசனங்கள் சான்றாக உள்ளன.

 
Traduzione dei significati Versetto: (124) Sura: At-Tawbah
Indice delle Sure Numero di pagina
 
Traduzione dei Significati del Sacro Corano - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Indice Traduzioni

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Chiudi