Traduzione dei Significati del Sacro Corano - Traduzione tamil dell'Abbreviata Esegesi del Nobile Corano

external-link copy
43 : 9

عَفَا اللّٰهُ عَنْكَ ۚ— لِمَ اَذِنْتَ لَهُمْ حَتّٰی یَتَبَیَّنَ لَكَ الَّذِیْنَ صَدَقُوْا وَتَعْلَمَ الْكٰذِبِیْنَ ۟

9.43. -தூதரே!- போருக்குப் புறப்படாமல் இருக்க அவர்களுக்கு அனுமதியளிப்பதற்கு நீர் எடுத்த முடிவுக்காக அல்லாஹ் உம்மை மன்னித்துவிட்டான். உண்மையாகவே காரணம் உடையவர்கள் யார், பொய்யர்கள் யார் என்பது தெளிவாகும் முன்னரே அவர்களுக்கு நீர் ஏன் அனுமதியளித்தீர்? அவ்வாறு தெளிவாகும் வரை காத்திருந்திருந்தால் பொய்யர்களின்றி உண்மையாளர்களுக்கு மாத்திரம் நீர் அனுமதி வழங்கியிருக்கலாம். info
التفاسير:
Alcuni insegnamenti da trarre da questi versi sono:
• وجوب الجهاد بالنفس والمال كلما دعت الحاجة.
1. தேவை ஏற்படும் பொழுதெல்லாம் உடலாலும் பொருளாலும் ஜிஹாது செய்வது கட்டாயமாகும். info

• الأيمان الكاذبة توجب الهلاك.
2. பொய்ச் சத்தியம் அழிவுக்கு காரணமாக அமைகிறது. info

• وجوب الاحتراز من العجلة، ووجوب التثبت والتأني، وترك الاغترار بظواهر الأمور، والمبالغة في التفحص والتريث.
3. அவசரத்தை விட்டும் தவிர்ந்து கொள்வதும் உறுதிப்படுத்திக் கொள்வதும் நிதானமாகச் செயற்படுவதும் அவசியமாகும். வெளிரங்கத்தை வைத்து ஏமாறாது மென்மேலும் சோதித்து நிதானமாகச் செயலாற்றுவது கடமையாகும். info

• من عناية الله بالمؤمنين تثبيطه المنافقين ومنعهم من الخروج مع عباده المؤمنين، رحمة بالمؤمنين ولطفًا من أن يداخلهم من لا ينفعهم بل يضرهم.
4. நயவஞ்சகர்கள் நம்பிக்கையாளர்களான தனது அடியார்களுடன் போருக்காக புறப்படுவதைத் தடுப்பதற்காக அவர்களை அல்லாஹ் விரக்தியூட்டியமை நம்பிக்கையாளர்களின் மீதான அல்லாஹ்வின் அக்கறையின் வெளிப்பாடாகும். அவர்களுக்கு நன்மை பயக்காத மாறாக தீங்கு விளைவிப்போர் அவர்களுக்குள் நுழையாமல் இருக்கு முகமாக நம்பிக்கையாளர்களின் மீது கொண்ட அன்பினால் செய்த ஏற்பாடே இதுவாகும். info