Check out the new design

Traduzione dei Significati del Sacro Corano - Traduzione in tamil - Omar Sharif * - Indice Traduzioni

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

Traduzione dei significati Sura: Al-Mu’minûn   Versetto:
بَلْ اَتَیْنٰهُمْ بِالْحَقِّ وَاِنَّهُمْ لَكٰذِبُوْنَ ۟
(வானவர்கள் அல்லாஹ்வின் பெண் பிள்ளைகள், சிலைகளை வணங்குவது இறைவனை வணங்குவதுதான் என்று இவர்கள் எண்ணுவது போல் அல்ல உண்மை.) மாறாக, நாம் அவர்களுக்கு விரிவாக உண்மையைக் கூறிவிட்டோம். இன்னும் நிச்சயமாக இவர்கள் பொய்யர்கள்தான்.
Esegesi in lingua araba:
مَا اتَّخَذَ اللّٰهُ مِنْ وَّلَدٍ وَّمَا كَانَ مَعَهٗ مِنْ اِلٰهٍ اِذًا لَّذَهَبَ كُلُّ اِلٰهٍ بِمَا خَلَقَ وَلَعَلَا بَعْضُهُمْ عَلٰی بَعْضٍ ؕ— سُبْحٰنَ اللّٰهِ عَمَّا یَصِفُوْنَ ۟ۙ
அல்லாஹ் (தனக்கு) குழந்தையை எடுத்துக் கொள்ளவில்லை. இன்னும், (படைப்புகளை அவன் முதலாவதாக படைத்தபோது) அவனுடன் வேறு கடவுள்கள் யாரும் இருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் ஒவ்வொரு கடவுளும், தான் படைத்ததை (தனியாக) கொண்டு சென்று விடுவார்கள். இன்னும் (தங்களுக்குள் சண்டையிட்டு) சிலர், சிலரை வென்று இருப்பார்கள். (இறைவனைப் பற்றி) அவர்கள் எதை வர்ணிக்கிறார்களோ அதை விட்டு அல்லாஹ் மகா பரிசுத்தமானவன் ஆவான். (ஆக, அவனுக்கு குழந்தையும் இல்லை, பங்காளியும் இல்லை, அவனுடன் வேறு கடவுளும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் இல்லை.)
Esegesi in lingua araba:
عٰلِمِ الْغَیْبِ وَالشَّهَادَةِ فَتَعٰلٰی عَمَّا یُشْرِكُوْنَ ۟۠
(அவன்) மறைவையும் வெளிப்படையையும் நன்கறிந்தவன். ஆக, அவர்கள் (அவனுக்கு) எதை இணைவைத்து வணங்குகிறார்களோ அதை விட்டும் அவன் மிக உயர்ந்தவன்.
Esegesi in lingua araba:
قُلْ رَّبِّ اِمَّا تُرِیَنِّیْ مَا یُوْعَدُوْنَ ۟ۙ
(நபியே!) கூறுவீராக: “என் இறைவா! அவர்கள் (தண்டனையில்) எதை எச்சரிக்கப்படுகிறார்களோ அதை நீ எனக்கு காண்பித்தால் (அவர்களுடன் என்னையும் அழித்துவிடாதே)!
Esegesi in lingua araba:
رَبِّ فَلَا تَجْعَلْنِیْ فِی الْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟
ஆக, என் இறைவா! அநியாயக்கார மக்களில் என்னையும் நீ ஆக்கிவிடாதே!
Esegesi in lingua araba:
وَاِنَّا عَلٰۤی اَنْ نُّرِیَكَ مَا نَعِدُهُمْ لَقٰدِرُوْنَ ۟
நிச்சயமாக நாம் அவர்களுக்கு எதை எச்சரிக்கிறோமோ அதை நாம் உமக்கு காண்பிப்பதற்கு ஆற்றல் உள்ளவர்கள்தான்.
Esegesi in lingua araba:
اِدْفَعْ بِالَّتِیْ هِیَ اَحْسَنُ السَّیِّئَةَ ؕ— نَحْنُ اَعْلَمُ بِمَا یَصِفُوْنَ ۟
(சகிப்புத் தன்மை என்ற) மிக அழகிய (குணத்)தின் மூலம் (அவர்களின் பகைமை என்ற) கெட்டதை தடுப்பீராக! (அல்லாஹ்வின் விஷயத்திலும் உமது விஷயத்திலும்) அவர்கள் வர்ணிப்பவற்றை நாம் மிக அறிந்தவர்கள் ஆவோம்.
Esegesi in lingua araba:
وَقُلْ رَّبِّ اَعُوْذُ بِكَ مِنْ هَمَزٰتِ الشَّیٰطِیْنِ ۟ۙ
(நபியே!) கூறுவீராக! என் இறைவா! ஷைத்தான்கள் (என்னை) நெறிப்பதை விட்டும் (அவர்களின் குழப்பங்களை விட்டும்) உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
Esegesi in lingua araba:
وَاَعُوْذُ بِكَ رَبِّ اَنْ یَّحْضُرُوْنِ ۟
இன்னும், என் இறைவா! அவர்கள் என்னிடம் (என் காரியங்களுக்குள்) வந்து கலந்துவிடுவதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
Esegesi in lingua araba:
حَتّٰۤی اِذَا جَآءَ اَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُوْنِ ۟ۙ
இறுதியாக, மரணம் அவர்களில் ஒருவருக்கு வந்தால் அவன் கூறுகிறான்: என் இறைவா! என்னை (உலகத்திற்கு) திருப்பி அனுப்புவாயாக!
Esegesi in lingua araba:
لَعَلِّیْۤ اَعْمَلُ صَالِحًا فِیْمَا تَرَكْتُ كَلَّا ؕ— اِنَّهَا كَلِمَةٌ هُوَ قَآىِٕلُهَا ؕ— وَمِنْ وَّرَآىِٕهِمْ بَرْزَخٌ اِلٰی یَوْمِ یُبْعَثُوْنَ ۟
(அமல்களில்) நான் விட்டவற்றிலிருந்து (சில) நல்ல அமல்களை(யாவது) நான் செய்வதற்காக (என்னை மீண்டும் உலகத்திற்கு அனுப்புவாயாக! என்று அவன் கூறுவான்). ஒரு போதும் அவ்வாறு அல்ல. (உலகத்திற்கு அவன் அனுப்பப்படவே மாட்டான். என்னை உலகிற்கு அனுப்புவாயாக என்ற பேச்சு) நிச்சயமாக இது ஒரு வீண் பேச்சாகும். அவன் அதைக் கூறிக்கொண்டே இருப்பான். இன்னும், அவர்கள் எழுப்பப்படுகின்ற நாள் வரை அவர்களுக்கு முன் ஒரு தடை இருக்கிறது. (ஆகையால் அவர்கள் உலகிற்கு திரும்ப முடியாது.)
Esegesi in lingua araba:
فَاِذَا نُفِخَ فِی الصُّوْرِ فَلَاۤ اَنْسَابَ بَیْنَهُمْ یَوْمَىِٕذٍ وَّلَا یَتَسَآءَلُوْنَ ۟
எக்காளத்தில் (முதல் முறை அல்லது இரண்டாவது முறை) ஊதப்பட்டால் அவர்களுக்கு மத்தியில் அந்நாளில் உறவுகள் அறவே (பலன் தரக்கூடியதாக) இருக்காது. இன்னும், அவர்கள் தங்களுக்குள் (ஒருவர் மற்றவரை) விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள்.
Esegesi in lingua araba:
فَمَنْ ثَقُلَتْ مَوَازِیْنُهٗ فَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟
ஆக, எவரின் (நன்மைகளின்) எடைகள் கனத்தனவோ அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்.
Esegesi in lingua araba:
وَمَنْ خَفَّتْ مَوَازِیْنُهٗ فَاُولٰٓىِٕكَ الَّذِیْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ فِیْ جَهَنَّمَ خٰلِدُوْنَ ۟ۚ
இன்னும், எவர்களுடைய (நன்மைகளின்) எடைகள் (கனமற்று) இலகுவாகிவிட்டனவோ அவர்கள்தான் தங்களுக்குத் தாமே நஷ்டம் விளைவித்தவர்கள் ஆவார்கள். அவர்கள் நரகத்தில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
Esegesi in lingua araba:
تَلْفَحُ وُجُوْهَهُمُ النَّارُ وَهُمْ فِیْهَا كٰلِحُوْنَ ۟
நரக நெருப்பு அவர்களது முகத்தை பொசுக்கிவிடும். இன்னும், அவர்கள் அதில் உதடுகள் பொசுங்கி பற்கள் வெளியே தெரிந்தவர்களாக இருப்பார்கள்.
Esegesi in lingua araba:
 
Traduzione dei significati Sura: Al-Mu’minûn
Indice delle Sure Numero di pagina
 
Traduzione dei Significati del Sacro Corano - Traduzione in tamil - Omar Sharif - Indice Traduzioni

La sua traduzione - Shaikh Omar Sharif bin Abdul Salam.

Chiudi