Check out the new design

Traduzione dei Significati del Sacro Corano - Traduzione in tamil - Omar Sharif * - Indice Traduzioni

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

Traduzione dei significati Sura: Al-A‘râf   Versetto:
قَالَ مَا مَنَعَكَ اَلَّا تَسْجُدَ اِذْ اَمَرْتُكَ ؕ— قَالَ اَنَا خَیْرٌ مِّنْهُ ۚ— خَلَقْتَنِیْ مِنْ نَّارٍ وَّخَلَقْتَهٗ مِنْ طِیْنٍ ۟
(அல்லாஹ்) கூறினான்: “நான் உனக்குக் கட்டளையிட்டபோது, நீ சிரம் பணியாதிருக்க உன்னைத் (தூண்டி, சிரம்பணிவதிலிருந்து உன்னைத்) தடுத்தது எது?” (இப்லீஸ்) கூறினான்: “நான் அவரைவிட மேலானவன். நீ என்னை நெருப்பால் படைத்தாய். அவரை களிமண்ணால் படைத்தாய்.”
Esegesi in lingua araba:
قَالَ فَاهْبِطْ مِنْهَا فَمَا یَكُوْنُ لَكَ اَنْ تَتَكَبَّرَ فِیْهَا فَاخْرُجْ اِنَّكَ مِنَ الصّٰغِرِیْنَ ۟
(அல்லாஹ்) கூறினான்: ஆக, “இதிலிருந்து நீ இறங்கிவிடு! இதில் நீ பெருமை கொள்வதற்கு உனக்கு அனுமதியில்லை. ஆக, நீ வெளியேறிவிடு. நிச்சயமாக நீ இழிவானவர்களில் உள்ளவன்.”
Esegesi in lingua araba:
قَالَ اَنْظِرْنِیْۤ اِلٰی یَوْمِ یُبْعَثُوْنَ ۟
(அதற்கு இப்லீஸ்) கூறினான்: “(இறந்தவர்கள்) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசமளி.”
Esegesi in lingua araba:
قَالَ اِنَّكَ مِنَ الْمُنْظَرِیْنَ ۟
(அல்லாஹ்) கூறினான்: “நிச்சயமாக நீ அவகாசமளிக்கப்பட்டவர்களில் இருக்கிறாய்.”
Esegesi in lingua araba:
قَالَ فَبِمَاۤ اَغْوَیْتَنِیْ لَاَقْعُدَنَّ لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِیْمَ ۟ۙ
(இப்லீஸ்) கூறினான்: “ஆக, நீ என்னை வழிகெடுத்ததின் காரணமாக அவர்களுக்காக உன் நேரான பாதையில் நிச்சயம் உட்காருவேன்.”
Esegesi in lingua araba:
ثُمَّ لَاٰتِیَنَّهُمْ مِّنْ بَیْنِ اَیْدِیْهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ اَیْمَانِهِمْ وَعَنْ شَمَآىِٕلِهِمْ ؕ— وَلَا تَجِدُ اَكْثَرَهُمْ شٰكِرِیْنَ ۟
“பிறகு, அவர்களுக்கு முன் புறத்திலிருந்தும், அவர்களுக்கு பின் புறத்திலிருந்தும் அவர்களின் வலது புறத்திலிருந்தும், அவர்களின் இடது புறத்திலிருந்தும் நிச்சயம் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானவர்களை (உனக்கு) நன்றி செலுத்துபவர்களாக நீ காணமாட்டாய்.”
Esegesi in lingua araba:
قَالَ اخْرُجْ مِنْهَا مَذْءُوْمًا مَّدْحُوْرًا ؕ— لَمَنْ تَبِعَكَ مِنْهُمْ لَاَمْلَـَٔنَّ جَهَنَّمَ مِنْكُمْ اَجْمَعِیْنَ ۟
(அல்லாஹ்) கூறினான்: “நீ இகழப்பட்டவனாக, (கருணையிலிருந்து) விரட்டப்பட்டவனாக இதிலிருந்து வெளியேறு. அவர்களில் உன்னைப் பின்பற்றியவர் (மற்றும் நீ), உங்கள் அனைவராலும் நரகத்தை நிச்சயம் நிரப்புவேன்.”
Esegesi in lingua araba:
وَیٰۤاٰدَمُ اسْكُنْ اَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ فَكُلَا مِنْ حَیْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هٰذِهِ الشَّجَرَةَ فَتَكُوْنَا مِنَ الظّٰلِمِیْنَ ۟
இன்னும், “ஆதமே! நீரும் உம் மனைவியும் சொர்க்கத்தில் வசித்திருங்கள். நீங்கள் இருவரும் நாடிய இடத்தில் புசியுங்கள். இந்த மரத்தை நெருங்காதீர்கள். அப்படி நெருங்கினால் அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர்கள்.”
Esegesi in lingua araba:
فَوَسْوَسَ لَهُمَا الشَّیْطٰنُ لِیُبْدِیَ لَهُمَا مَا وٗرِیَ عَنْهُمَا مِنْ سَوْاٰتِهِمَا وَقَالَ مَا نَهٰىكُمَا رَبُّكُمَا عَنْ هٰذِهِ الشَّجَرَةِ اِلَّاۤ اَنْ تَكُوْنَا مَلَكَیْنِ اَوْ تَكُوْنَا مِنَ الْخٰلِدِیْنَ ۟
ஆக, அவர்கள் இருவருக்கும் மறைக்கப்பட்டிருந்த அவர்கள் இருவரின் வெட்கத்தலங்களை அவர்கள் இருவருக்கும் வெளிப்படுத்தி காட்டுவதற்காக ஷைத்தான் அவ்விருவருக்கும் (மனதில்) ஊசலாட்டத்தை உண்டாக்கினான். “நீங்கள் இருவரும் வானவர்களாக ஆகி விடுவீர்கள் அல்லது (சொர்க்கத்தில்) நிரந்தரமாக இருப்பவர்களில் ஆகிவிடுவீர்கள் என்பதற்காகவே தவிர இம்மரத்தை விட்டு உங்களிருவரின் இறைவன் உங்களிருவரையும் தடுக்கவில்லை” என்று கூறினான்.
Esegesi in lingua araba:
وَقَاسَمَهُمَاۤ اِنِّیْ لَكُمَا لَمِنَ النّٰصِحِیْنَ ۟ۙ
இன்னும், “நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மை நாடுவோரில் உள்ளவன்தான்” என்று அவ்விருவரிடமும் சத்தியமிட்டான்.
Esegesi in lingua araba:
فَدَلّٰىهُمَا بِغُرُوْرٍ ۚ— فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْاٰتُهُمَا وَطَفِقَا یَخْصِفٰنِ عَلَیْهِمَا مِنْ وَّرَقِ الْجَنَّةِ ؕ— وَنَادٰىهُمَا رَبُّهُمَاۤ اَلَمْ اَنْهَكُمَا عَنْ تِلْكُمَا الشَّجَرَةِ وَاَقُلْ لَّكُمَاۤ اِنَّ الشَّیْطٰنَ لَكُمَا عَدُوٌّ مُّبِیْنٌ ۟
ஆக, அவர்கள் இருவரையும் ஏமாற்றி தரம் தாழ்த்தினான் (ஷைத்தான்). ஆக, (அந்த) இருவரும் (அம்)மரத்தைச் சுவைத்தபோது, அவர்கள் இருவரின் வெட்கத்தலங்கள் அவர்கள் இருவருக்கும் தெரிந்தன. சொர்க்கத்தின் இலைகளினால் தம் இருவர் மீதும் மூடிக்கொள்ள அவர்கள் இருவரும் முயன்றனர். அவர்கள் இருவரின் இறைவன், “அம்மரத்தை விட்டு நான் உங்கள் இருவரையும் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்கள் இருவருக்கும் வெளிப்படையான எதிரி என்று நான் உங்கள் இருவருக்கும் கூறவில்லையா?” என்று (கூறி) அவர்கள் இருவரையும் அழைத்தான்.
Esegesi in lingua araba:
 
Traduzione dei significati Sura: Al-A‘râf
Indice delle Sure Numero di pagina
 
Traduzione dei Significati del Sacro Corano - Traduzione in tamil - Omar Sharif - Indice Traduzioni

La sua traduzione - Shaikh Omar Sharif bin Abdul Salam.

Chiudi