Traduzione dei Significati del Sacro Corano - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Numero di pagina:close

external-link copy
63 : 11

قَالَ یٰقَوْمِ اَرَءَیْتُمْ اِنْ كُنْتُ عَلٰی بَیِّنَةٍ مِّنْ رَّبِّیْ وَاٰتٰىنِیْ مِنْهُ رَحْمَةً فَمَنْ یَّنْصُرُنِیْ مِنَ اللّٰهِ اِنْ عَصَیْتُهٗ ۫— فَمَا تَزِیْدُوْنَنِیْ غَیْرَ تَخْسِیْرٍ ۟

“என் மக்களே! அறிவியுங்கள் நான் என் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான அத்தாட்சியில் இருக்க, அவன் தன்னிடமிருந்து (மகத்தான) அருளை எனக்கு தந்திருக்க, நான் அவனுக்கு மாறு செய்தால்... அல்லாஹ்விடத்தில் எனக்கு யார் உதவுவார்? நஷ்டம் ஏற்படுத்துவதை அன்றி (வேறொன்றையும்) எனக்கு நீங்கள் அதிகமாக்க மாட்டீர்கள்” என்று கூறினார். info
التفاسير:

external-link copy
64 : 11

وَیٰقَوْمِ هٰذِهٖ نَاقَةُ اللّٰهِ لَكُمْ اٰیَةً فَذَرُوْهَا تَاْكُلْ فِیْۤ اَرْضِ اللّٰهِ وَلَا تَمَسُّوْهَا بِسُوْٓءٍ فَیَاْخُذَكُمْ عَذَابٌ قَرِیْبٌ ۟

“என் மக்களே! இது உங்களுக்கு அல்லாஹ்வின் அத்தாட்சியான பெண் ஒட்டகமாகும். ஆகவே, அதை விட்டுவிடுங்கள் அது அல்லாஹ்வின் பூமியில் சாப்பிடட்டும்; அதற்கு ஒரு கெடுதியையும் செய்யாதீர்கள். (அவ்வாறு செய்தால்) அதிசீக்கிரமான வேதனை உங்களைப் பிடிக்கும்.” info
التفاسير:

external-link copy
65 : 11

فَعَقَرُوْهَا فَقَالَ تَمَتَّعُوْا فِیْ دَارِكُمْ ثَلٰثَةَ اَیَّامٍ ؕ— ذٰلِكَ وَعْدٌ غَیْرُ مَكْذُوْبٍ ۟

அதை வெட்டினார்கள். ஆகவே, மூன்று நாள்கள் உங்கள் இல்லத்தில் (ஊரில்) சுகமாக இருங்கள். (பிறகு வேதனை வரும்.) இது ஒரு பொய்ப்பிக்கப்படாத வாக்காகும் என்று (ஸாலிஹ்) கூறினார். info
التفاسير:

external-link copy
66 : 11

فَلَمَّا جَآءَ اَمْرُنَا نَجَّیْنَا صٰلِحًا وَّالَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا وَمِنْ خِزْیِ یَوْمِىِٕذٍ ؕ— اِنَّ رَبَّكَ هُوَ الْقَوِیُّ الْعَزِیْزُ ۟

நம் கட்டளை வந்தபோது ஸாலிஹையும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நமது அருளைக் கொண்டு பாதுகாத்தோம். இன்னும் அந்நாளின் இழிவில் இருந்தும் (அவர்களைப் பாதுகாத்தோம்). நிச்சயமாக உம் இறைவன்தான் பலமிக்கவன், மிகைத்தவன். info
التفاسير:

external-link copy
67 : 11

وَاَخَذَ الَّذِیْنَ ظَلَمُوا الصَّیْحَةُ فَاَصْبَحُوْا فِیْ دِیَارِهِمْ جٰثِمِیْنَ ۟ۙ

அநீதியிழைத்தவர்களை இடி முழக்கம் பிடித்தது. அவர்கள் காலையில் தங்கள் இல்லங்களில் இறந்தவர்களாக ஆகிவிட்டனர். info
التفاسير:

external-link copy
68 : 11

كَاَنْ لَّمْ یَغْنَوْا فِیْهَا ؕ— اَلَاۤ اِنَّ ثَمُوْدَاۡ كَفَرُوْا رَبَّهُمْ ؕ— اَلَا بُعْدًا لِّثَمُوْدَ ۟۠

அவற்றில் அவர்கள் வசிக்காததைப் போன்று (எந்த அடையாளமுமின்றி அழிந்தனர்). அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஸமூது (மக்கள்) தங்கள் இறைவனை நிராகரித்தனர். அறிந்து கொள்ளுங்கள்! ஸமூது (மக்களு)க்கு சாபம் உண்டாகட்டும். info
التفاسير:

external-link copy
69 : 11

وَلَقَدْ جَآءَتْ رُسُلُنَاۤ اِبْرٰهِیْمَ بِالْبُشْرٰی قَالُوْا سَلٰمًا ؕ— قَالَ سَلٰمٌ فَمَا لَبِثَ اَنْ جَآءَ بِعِجْلٍ حَنِیْذٍ ۟

திட்டவட்டமாக நம் (வானவ) தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தியைக் கொண்டு வந்து, “(உமக்கு) ஈடேற்றம் உண்டாகுக” என்று கூறினர். (இப்ராஹீம்) (“உங்களுக்கும்) ஈடேற்றம் உண்டாகுக!” என்று கூறி, தாமதிக்காது சுடப்பட்ட ஒரு கன்றுக்குட்டி(யின் கறி)யைக் கொண்டு வந்தார். info
التفاسير:

external-link copy
70 : 11

فَلَمَّا رَاٰۤ اَیْدِیَهُمْ لَا تَصِلُ اِلَیْهِ نَكِرَهُمْ وَاَوْجَسَ مِنْهُمْ خِیْفَةً ؕ— قَالُوْا لَا تَخَفْ اِنَّاۤ اُرْسِلْنَاۤ اِلٰی قَوْمِ لُوْطٍ ۟ؕ

அவர்களுடைய கைகள் அதன் பக்கம் சேராததை அவர் பார்த்தபோது அவர்களைப் பற்றி சந்தேகித்தார்; அவர்களைப் பற்றிய பயத்தை அவர் (மனதில்) மறைத்தார். அவர்கள் (இப்ராஹீமே) “பயப்படாதீர்! நிச்சயமாக நாங்கள் லூத்துடைய மக்களின் பக்கம் (அவர்களை அழிக்க) அனுப்பப்பட்டோம்” என்று கூறினார்கள். info
التفاسير:

external-link copy
71 : 11

وَامْرَاَتُهٗ قَآىِٕمَةٌ فَضَحِكَتْ فَبَشَّرْنٰهَا بِاِسْحٰقَ ۙ— وَمِنْ وَّرَآءِ اِسْحٰقَ یَعْقُوْبَ ۟

அவருடைய மனைவி நின்றுகொண்டிருந்தாள். (அவள்) சிரித்தாள்; அவளுக்கு ‘இஸ்ஹாக்’ (என்னும் மகனைக்) கொண்டும், இஸ்ஹாக்கிற்குப் பின்னால் ‘யஅகூபைக்’ கொண்டும் நற்செய்தி கூறினோம். info
التفاسير: