Traduzione dei Significati del Sacro Corano - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Numero di pagina:close

external-link copy
6 : 5

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا قُمْتُمْ اِلَی الصَّلٰوةِ فَاغْسِلُوْا وُجُوْهَكُمْ وَاَیْدِیَكُمْ اِلَی الْمَرَافِقِ وَامْسَحُوْا بِرُءُوْسِكُمْ وَاَرْجُلَكُمْ اِلَی الْكَعْبَیْنِ ؕ— وَاِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوْا ؕ— وَاِنْ كُنْتُمْ مَّرْضٰۤی اَوْ عَلٰی سَفَرٍ اَوْ جَآءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَآىِٕطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَآءَ فَلَمْ تَجِدُوْا مَآءً فَتَیَمَّمُوْا صَعِیْدًا طَیِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَاَیْدِیْكُمْ مِّنْهُ ؕ— مَا یُرِیْدُ اللّٰهُ لِیَجْعَلَ عَلَیْكُمْ مِّنْ حَرَجٍ وَّلٰكِنْ یُّرِیْدُ لِیُطَهِّرَكُمْ وَلِیُتِمَّ نِعْمَتَهٗ عَلَیْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟

நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகைக்கு நின்றால் உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் கைகளையும் கழுவுங்கள், உங்கள் தலைகளில் (நனைந்த கைகளைக் கொண்டு) தடவுங்கள். இரு கணுக்கால்கள் வரை உங்கள் கால்களையும் (கழுவுங்கள்). நீங்கள் முழுக்காளிகளாக இருந்தால் (குளித்து) நன்கு சுத்தமாகுங்கள். நீங்கள் நோயாளிகளாக இருந்தால் அல்லது பயணத்தில் இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் மலஜல பாதையிலிருந்து வந்தால் அல்லது நீங்கள் பெண்களுடன் உறவுகொண்டால், தண்ணீரை நீங்கள் பெறவில்லையெனில் சுத்தமான மண்ணை நாடுங்கள். அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவுங்கள். உங்கள் மீது சிரமத்தை ஆக்குவதற்கு அல்லாஹ் நாடமாட்டான். எனினும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைப் பரிசுத்தமாக்கவும், தன் அருளை உங்கள் மீது முழுமையாக்கவும் நாடுகிறான். info
التفاسير:

external-link copy
7 : 5

وَاذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَیْكُمْ وَمِیْثَاقَهُ الَّذِیْ وَاثَقَكُمْ بِهٖۤ ۙ— اِذْ قُلْتُمْ سَمِعْنَا وَاَطَعْنَا ؗ— وَاتَّقُوا اللّٰهَ ؕ— اِنَّ اللّٰهَ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟

உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளையும், "செவிமடுத்தோம், கீழ்ப்படிந்தோம்” என்று நீங்கள் கூறியபோது அவன் உங்களிடம் உறுதிமொழி வாங்கிய அவனுடைய உறுதிமொழியையும் நினைவுகூறுங்கள். இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன். info
التفاسير:

external-link copy
8 : 5

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوّٰمِیْنَ لِلّٰهِ شُهَدَآءَ بِالْقِسْطِ ؗ— وَلَا یَجْرِمَنَّكُمْ شَنَاٰنُ قَوْمٍ عَلٰۤی اَلَّا تَعْدِلُوْا ؕ— اِعْدِلُوْا ۫— هُوَ اَقْرَبُ لِلتَّقْوٰی ؗ— وَاتَّقُوا اللّٰهَ ؕ— اِنَّ اللّٰهَ خَبِیْرٌ بِمَا تَعْمَلُوْنَ ۟

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்காக நிலை நின்றவர்களாக, நீதிக்கு சாட்சி கூறுபவர்களாக இருங்கள். ஒரு சமுதாயத்தின் (மீதுள்ள) துவேஷம் நீங்கள் நீதமாக நடக்காதிருக்க உங்களைத் தூண்டவேண்டாம். நீதமாக இருங்கள். அது இறையச்சத்திற்கு மிக நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிந்தவன் ஆவான். info
التفاسير:

external-link copy
9 : 5

وَعَدَ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ۙ— لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ عَظِیْمٌ ۟

நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்தவர்களுக்கு அல்லாஹ் வாக்களித்தான் "அவர்களுக்கு மன்னிப்பும் மகத்தான கூலியும் உண்டு” என்று. info
التفاسير: