Check out the new design

クルアーンの対訳 - クルアーン簡潔注釈(タミル語対訳) * - 対訳の目次


対訳 章: 夜の旅章   節:
قُلْ كُوْنُوْا حِجَارَةً اَوْ حَدِیْدًا ۟ۙ
17.50. -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: -“இணைவைப்பாளர்களே!- உங்களால் இயன்றால் கடினமான கல்லாக அல்லது பலமான இரும்பாக ஆகிவிடுங்கள். உங்களால் ஒருபோதும் அவ்வாறு ஆகமுடியாது.
アラビア語 クルアーン注釈:
اَوْ خَلْقًا مِّمَّا یَكْبُرُ فِیْ صُدُوْرِكُمْ ۚ— فَسَیَقُوْلُوْنَ مَنْ یُّعِیْدُنَا ؕ— قُلِ الَّذِیْ فَطَرَكُمْ اَوَّلَ مَرَّةٍ ۚ— فَسَیُنْغِضُوْنَ اِلَیْكَ رُءُوْسَهُمْ وَیَقُوْلُوْنَ مَتٰی هُوَ ؕ— قُلْ عَسٰۤی اَنْ یَّكُوْنَ قَرِیْبًا ۟
17.51. அல்லது அவையிரண்டையும்விட நீங்கள் உங்கள் உள்ளங்களில் பெரிதாகக் கருதும் வேறொரு படைப்பாக ஆகிவிடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களை ஆரம்பத்தில் படைத்தவாறே, நீங்கள் இருந்தவாறே மீண்டும் உங்களை உயிர்கொடுத்து எழுப்புவான். பிடிவாதம் கொண்ட இந்த இணைவைப்பாளர்கள் கூறுவார்கள்: “நாம் இறந்த பின் எங்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புபவன் யார்?” நீர் அவர்களிடம் கூறுவீராக: “உங்களை முன்மாதிரியின்றி முதன் முறையாகப் படைத்தானே அவன்தான் உங்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவான். உன்னுடைய பதிலில் இருந்து அவர்கள் தூரமானவர்களாக பரிகாசமாக தம் தலையை அசைத்தவாறு கூறுவார்கள்: “எப்போது இந்த மீண்டும் எழுப்பும் நிகழ்வு நடைபெறும் என்று.” நீர் அவர்களுக்கு கூறுவீராக: “அது அண்மையில் இருக்கலாம் என்று.” ஏனெனில் வர இருப்பவை அனைத்தும் அண்மையிலே உள்ளன.
アラビア語 クルアーン注釈:
یَوْمَ یَدْعُوْكُمْ فَتَسْتَجِیْبُوْنَ بِحَمْدِهٖ وَتَظُنُّوْنَ اِنْ لَّبِثْتُمْ اِلَّا قَلِیْلًا ۟۠
17.52. மஹ்ஷர் பெருவெளியில் அவன் உங்களை அழைக்கும் நாளில் அவன் உங்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவான். நீங்கள் அவனுடைய கட்டளைக்குக் கட்டுப்பட்டு அவனைப் புகழ்ந்தவாறே அவனுக்குப் பதிலளிப்பீர்கள். நிச்சயமாக நீங்கள் பூமியில் குறைந்த காலமே தங்கியிருந்ததாக உங்களுக்குத் தோன்றும்.
アラビア語 クルアーン注釈:
وَقُلْ لِّعِبَادِیْ یَقُوْلُوا الَّتِیْ هِیَ اَحْسَنُ ؕ— اِنَّ الشَّیْطٰنَ یَنْزَغُ بَیْنَهُمْ ؕ— اِنَّ الشَّیْطٰنَ كَانَ لِلْاِنْسَانِ عَدُوًّا مُّبِیْنًا ۟
17.53. -தூதரே!- என்மீது நம்பிக்கைகொண்ட என் அடியார்களிடம் கூறுவீராக: “அவர்கள் உரையாடும் போது நல்ல வார்த்தையையே பேசட்டும். வெறுப்பூட்டும் தீய வார்த்தையை விட்டும் தவிர்ந்து கொள்ளட்டும். ஏனெனில் நிச்சயமாக ஷைத்தான் அதனைப் பயன்படுத்தி அவர்களின் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்க்கையை நாசப்படுத்தி விடுவான். நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்கு பகிரங்க விரோதியாக இருக்கின்றான். எனவே அவன் விஷயத்தில் மனிதன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.”
アラビア語 クルアーン注釈:
رَبُّكُمْ اَعْلَمُ بِكُمْ ؕ— اِنْ یَّشَاْ یَرْحَمْكُمْ اَوْ اِنْ یَّشَاْ یُعَذِّبْكُمْ ؕ— وَمَاۤ اَرْسَلْنٰكَ عَلَیْهِمْ وَكِیْلًا ۟
17.54. -மனிதர்களே!- உங்களின் இறைவன் உங்களைக்குறித்து நன்கறிந்தவன். உங்களில் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவன் நாடினால் உங்கள் மீது அருள் புரிந்து நம்பிக்கையின் பக்கமும் நற்செயல்களின் பக்கமும் உங்களுக்கு வழிகாட்டுவான். அவன் நாடினால் உங்களைக் கைவிட்டு, நிராகரித்த நிலையிலேயே உங்களை மரணிக்கச் செய்து உங்களை தண்டிப்பான். -தூதரே!- அவர்களை நம்பிக்கைகொள்ளும்படி நிர்ப்பந்திக்கக்கூடியவராக, நிராகரிப்பை விட்டும் தடுக்கக்கூடியவராக, அவர்களின் செயல்களைக் கணக்கிடக்கூடியவராக நாம் உம்மை அனுப்பவில்லை. நிச்சயமாக நீர் அல்லாஹ்விடமிருந்து எத்திவைக்குமாறு இட்ட கட்டளைகளை எடுத்துரைக்கக்கூடியவர் மட்டுமே ஆவீர்.
アラビア語 クルアーン注釈:
وَرَبُّكَ اَعْلَمُ بِمَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— وَلَقَدْ فَضَّلْنَا بَعْضَ النَّبِیّٖنَ عَلٰی بَعْضٍ وَّاٰتَیْنَا دَاوٗدَ زَبُوْرًا ۟
17.55. -தூதரே!- வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் அனைவரையும் அவர்களின் நிலைகளையும் அவர்களுக்குத் தகுந்தவைகளையும் அவன் நன்கறிந்தவன். அதிகமாக பின்பற்றுபவர்களை ஏற்படுத்துவதன் மூலமும் வேதங்களை இறக்குவதன் மூலமும் நாம் தூதர்களில் சிலரை சிலரைவிட சிறப்பித்துள்ளோம். நாம் தாவூதுக்கு சபூர் என்னும் வேதத்தை வழங்கினோம்.
アラビア語 クルアーン注釈:
قُلِ ادْعُوا الَّذِیْنَ زَعَمْتُمْ مِّنْ دُوْنِهٖ فَلَا یَمْلِكُوْنَ كَشْفَ الضُّرِّ عَنْكُمْ وَلَا تَحْوِیْلًا ۟
17.56. -தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: -“இணைவைப்பாளர்களே!- உங்கள் மீது தீங்கு இறங்கினால் அல்லாஹ்வை விடுத்து நீங்கள் கடவுள்களாக எண்ணுகின்ற தெய்வங்களை அழையுங்கள். அவை தமது இயலாமையினால் உங்களை விட்டும் தீங்கை அகற்றவோ அதனை மற்றவர்களுக்கு இடம்பெயரச் செய்யவோ சக்திபெற மாட்டா. இயலாதவர்கள் இறைவனாக இருக்க முடியாது.
アラビア語 クルアーン注釈:
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ یَدْعُوْنَ یَبْتَغُوْنَ اِلٰی رَبِّهِمُ الْوَسِیْلَةَ اَیُّهُمْ اَقْرَبُ وَیَرْجُوْنَ رَحْمَتَهٗ وَیَخَافُوْنَ عَذَابَهٗ ؕ— اِنَّ عَذَابَ رَبِّكَ كَانَ مَحْذُوْرًا ۟
17.57. இவர்கள் அழைக்கும் வானவர்கள் மற்றும் அவர்களைப் போன்றவர்களும் கூட தம்மை அல்லாஹ்விடம் நெருங்கச் செய்யும் நற்செயல்களைத் தேடுகிறார்கள். அவனுக்குக் கட்டுப்படுவதில் யார் நெருக்கமானவர் என ஒருவருக்கொருவர் போட்டியிடுகிறார்கள். அவனது அருளை எதிர்பார்த்து அவனுடைய தண்டனையைக் குறித்து அஞ்சுகிறார்கள். -தூதரே!- நிச்சயமாக உம் இறைவனின் தண்டனை எச்சரிக்கையாக இருக்கவேண்டியவற்றில் உள்ளதாகும்.
アラビア語 クルアーン注釈:
وَاِنْ مِّنْ قَرْیَةٍ اِلَّا نَحْنُ مُهْلِكُوْهَا قَبْلَ یَوْمِ الْقِیٰمَةِ اَوْ مُعَذِّبُوْهَا عَذَابًا شَدِیْدًا ؕ— كَانَ ذٰلِكَ فِی الْكِتٰبِ مَسْطُوْرًا ۟
17.58. நிராகரிப்பில் ஈடுபடும் மக்களைக்கொண்ட எந்த ஒரு ஊராக நகராக இருந்தாலும் நிராகரிப்பின் காரணமாக அவ்வூருக்கு இவ்வுலகில் தண்டனையை இறக்கியே தீருவோம் அல்லது கொலை அல்லது வேறு விதமான கடுமையான தண்டனையினால் சோதிப்போம். இவ்வாறு அவர்களை தண்டித்து அவர்களை அழிப்பது லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் ஏட்டில் எழுதப்பட்டுள்ள இறை நியதியாகும்.
アラビア語 クルアーン注釈:
本諸節の功徳:
• القول الحسن داع لكل خلق جميل وعمل صالح، فإنَّ من ملك لسانه ملك جميع أمره.
1. நல்ல வார்த்தை அனைத்து நற்பண்புகளையும் நற்செயல்களையும் வரவழைக்கக்கூடியதாகும். எவர் தம் நாவைக் கட்டுப்படுத்திக் கொண்டாரோ அவர் தம் அனைத்து விஷயங்களையும் கட்டுப்படுத்திக் கொண்டார்.

• فاضل الله بين الأنبياء بعضهم على بعض عن علم منه وحكمة.
2. அல்லாஹ் தன் அறிவு மற்றும் ஞானத்தின் அடிப்படையில் தூதர்களில் சிலரைவிட சிலரை சிறப்பித்துள்ளான்.

• الله لا يريد بعباده إلا ما هو الخير، ولا يأمرهم إلا بما فيه مصلحتهم.
3. அல்லாஹ் தன் அடியார்களுக்கு நன்மையைத் தவிர வேறொன்றும் நாட மாட்டான். அவர்களுக்கு நன்மை அடங்கியுள்ள விஷயத்தைத் தவிர வேறெதையும் அவர்களுக்குக் கட்டளையிட மாட்டான்.

• علامة محبة الله أن يجتهد العبد في كل عمل يقربه إلى الله، وينافس في قربه بإخلاص الأعمال كلها لله والنصح فيها.
4. அடியான் அல்லாஹ்விடம் நெருங்கச் செய்யும் அனைத்துவிதமான செயல்களிலும் கூடுதலாக ஈடுபடுவதும் அனைத்து செயற்பாடுகளையும் அல்லாஹ்வுக்காகவே செய்து, அவற்றில் விசுவாசமா இருந்து அவனது நெருக்கத்துக்கு போட்டியிடுவதும் அல்லாஹ்வை விரும்புவதின் அடையாளமாகும்.

 
対訳 章: 夜の旅章
章名の目次 ページ番号
 
クルアーンの対訳 - クルアーン簡潔注釈(タミル語対訳) - 対訳の目次

- Tafsir Center for Quranic Studies - 発行

閉じる