Check out the new design

クルアーンの対訳 - クルアーン簡潔注釈(タミル語対訳) * - 対訳の目次


対訳 章: 部族連合章   節:
مِنَ الْمُؤْمِنِیْنَ رِجَالٌ صَدَقُوْا مَا عَاهَدُوا اللّٰهَ عَلَیْهِ ۚ— فَمِنْهُمْ مَّنْ قَضٰی نَحْبَهٗ وَمِنْهُمْ مَّنْ یَّنْتَظِرُ ۖؗ— وَمَا بَدَّلُوْا تَبْدِیْلًا ۟ۙ
33.23. நம்பிக்கையாளர்களில், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதில் உறுதியாகவும் பொறுமையாகவும் இருப்பதாக தாம் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றியோரும் உண்டு. அவர்களில் சிலர் அல்லாஹ்வின் பாதையில் இறந்து விட்டார்கள் அல்லது கொல்லப்பட்டு விட்டார்கள். சிலர் அவனுடைய பாதையில் வீரமரணம் அடைவதற்காக காத்திருக்கிறார்கள். இந்த நம்பிக்கையாளர்கள் நயவஞ்சகர்கள் தங்களின் வாக்குறுதிகளில் செய்ததை போல அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதிக்கு மாறுசெய்வதில்லை.
アラビア語 クルアーン注釈:
لِّیَجْزِیَ اللّٰهُ الصّٰدِقِیْنَ بِصِدْقِهِمْ وَیُعَذِّبَ الْمُنٰفِقِیْنَ اِنْ شَآءَ اَوْ یَتُوْبَ عَلَیْهِمْ ؕ— اِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِیْمًا ۟ۚ
33.24. இது தாங்கள் அளித்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றிய உண்மையாளர்களுக்கு அவர்களின் உண்மைக்கும் ஒப்பந்தங்களை நிறைவேற்றியமைக்கும் அல்லாஹ் கூலி வழங்க வேண்டும் என்பதற்காகவும் வாக்குறுதியை முறித்த நயவஞ்சகர்களுக்கு அவன் நாடினால் தவ்பா செய்ய முன் நிராகரிப்பிலே மரணிக்கச் செய்து தண்டனை வழங்க வேண்டும் அல்லது அவர்களுக்கு பாவமன்னிப்புக்கோரும் பாக்கியத்தை அளித்து அவர்களை மன்னித்துவிட வேண்டும் என்பதற்காகவும்தான். தன் பாவங்களிலிருந்து மன்னிப்புக் கோரக்கூடியவர்களை அவன் மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு அவன் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
アラビア語 クルアーン注釈:
وَرَدَّ اللّٰهُ الَّذِیْنَ كَفَرُوْا بِغَیْظِهِمْ لَمْ یَنَالُوْا خَیْرًا ؕ— وَكَفَی اللّٰهُ الْمُؤْمِنِیْنَ الْقِتَالَ ؕ— وَكَانَ اللّٰهُ قَوِیًّا عَزِیْزًا ۟ۚ
33.25. குரைஷிகள், கத்பான், அவர்களுடனிருந்த ஏனையவர்களை துக்கத்துடனும் கவலையுடனும் அல்லாஹ் திருப்பி அனுப்பிவிட்டான். ஏனெனில் அவர்கள் எதிர்பார்த்தது அவர்களுக்குத் தவறிவிட்டது. நம்பிக்கையாளர்களை அடியோடு அழித்துவிட வேண்டும் என்ற தம் நோக்கத்தில் அவர்கள் வெற்றி பெறவில்லை. அல்லாஹ் அனுப்பிய காற்றின் மூலமும் இறக்கிய வானவர்கள் மூலமும் அவர்களுடன் நம்பிக்கையாளர்கள் போரிடுவதை அல்லாஹ் தேவையற்றதாக்கி அவனே அதற்குப் போதுமாகிவிட்டான். அவன் சக்திவாய்ந்தவனாகவும் அவனுடன் யார் மோதினாலும் அவனை மிகைப்பவனாகவும் இருக்கின்றான்.
アラビア語 クルアーン注釈:
وَاَنْزَلَ الَّذِیْنَ ظَاهَرُوْهُمْ مِّنْ اَهْلِ الْكِتٰبِ مِنْ صَیَاصِیْهِمْ وَقَذَفَ فِیْ قُلُوْبِهِمُ الرُّعْبَ فَرِیْقًا تَقْتُلُوْنَ وَتَاْسِرُوْنَ فَرِیْقًا ۟ۚ
33.26. எதிரிகளுக்கு உதவிசெய்த யூதர்களை, எதிரிகளிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொண்டிருந்த அவர்களின் கோட்டைகளிலிருந்து வெளியேறச் செய்தான். அவர்களின் உள்ளங்களில் பயத்தை ஏற்படுத்தினான். -நம்பிக்கையாளர்களே!- அவர்களில் ஒரு பிரிவினரை நீங்கள் கொலை செய்தீர்கள். ஒரு பிரிவினரைக் கைது செய்தீர்கள்.
アラビア語 クルアーン注釈:
وَاَوْرَثَكُمْ اَرْضَهُمْ وَدِیَارَهُمْ وَاَمْوَالَهُمْ وَاَرْضًا لَّمْ تَطَـُٔوْهَا ؕ— وَكَانَ اللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرًا ۟۠
33.27. அல்லாஹ் அவர்களை அழித்த பிறகு அவர்களின் பேரீச்சமரங்கள் பயிர்களுள்ள அவர்களின் நிலத்தையும், வீடுகளையும் இன்னபிற செல்வங்களையும் அவன் உங்களுக்குச் சொந்தமாக்கினான். நீங்கள் இதுவரை கால்வைக்காத கைபர் நிலத்தையும் அவன் உங்களுக்குச் சொந்தமாக்கினான். ஆயினும் நீங்கள் விரைவில் கால்வைப்பீர்கள். இது நம்பிக்கையாளர்களுக்கான வாக்குறுதியும் நற்செய்தியுமாகும். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான். எதுவும் அவனுக்கு இயலாதது அல்ல.
アラビア語 クルアーン注釈:
یٰۤاَیُّهَا النَّبِیُّ قُلْ لِّاَزْوَاجِكَ اِنْ كُنْتُنَّ تُرِدْنَ الْحَیٰوةَ الدُّنْیَا وَزِیْنَتَهَا فَتَعَالَیْنَ اُمَتِّعْكُنَّ وَاُسَرِّحْكُنَّ سَرَاحًا جَمِیْلًا ۟
33.28. தூதரே! உமது மனைவிமாருக்கு தாராளமாகச் செலவளிப்பதற்கு உம்மிடம் வசதியில்லாத போது அதிகமாக செலவீனங்கள் வேண்டும் என அவர்கள் கேட்டால் நீர் கூறுவீராக: “நீங்கள் இவ்வுலகையும் அதன் அலங்காரத்தையும் விரும்பக்கூடியவர்களாக இருந்தால் என்னிடம் வாருங்கள், நான் விவகாரத்து அளிக்கப்பட்ட பெண்களுக்கு அளிக்க வேண்டியதை உங்களுக்கு அளித்து, பாதிப்பு, நோவினை அற்ற விதத்தில் உங்களுக்கு விவகாரத்து அளித்து விடுகிறேன்.
アラビア語 クルアーン注釈:
وَاِنْ كُنْتُنَّ تُرِدْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَالدَّارَ الْاٰخِرَةَ فَاِنَّ اللّٰهَ اَعَدَّ لِلْمُحْسِنٰتِ مِنْكُنَّ اَجْرًا عَظِیْمًا ۟
33.29. நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியையும் தூதரின் திருப்தியையும் மறுமையில் கிடைக்கக்கூடிய சுவனத்தையும் விரும்பக்கூடியவர்களாக இருந்தால் நீங்கள் இருக்கும் நிலையை சகித்துக் கொள்ளுங்கள். உங்களில் பொறுமையாக இருந்து நல்ல முறையில் வாழ்ந்து, சிறந்த முறையில் செயல்படுபவர்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் பெரும் கூலியை தயார்படுத்தி வைத்துள்ளான்.
アラビア語 クルアーン注釈:
یٰنِسَآءَ النَّبِیِّ مَنْ یَّاْتِ مِنْكُنَّ بِفَاحِشَةٍ مُّبَیِّنَةٍ یُّضٰعَفْ لَهَا الْعَذَابُ ضِعْفَیْنِ ؕ— وَكَانَ ذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرًا ۟
33.30. தூதரின் மனைவியரே! உங்களில் யாரேனும் வெளிப்படையான பாவத்தைச் செய்தால் மறுமை நாளில் அவர்களுக்கு இருமடங்கு வேதனை உண்டு. இது அவர்களின் படித்தரம் மற்றும் தூதரின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் பொருட்டாகும். இவ்வாறு இரு மடங்கு வேதனை வழங்குவது அல்லாஹ்வுக்கு மிக எளிதானது.
アラビア語 クルアーン注釈:
本諸節の功徳:
• تزكية الله لأصحاب رسول الله صلى الله عليه وسلم ، وهو شرف عظيم لهم.
1. தூதரின் தோழர்களுக்கு அல்லாஹ் நற்சான்று வழங்கியுள்ளான். இது அவர்களுக்கு மிகப் பெரும் சிறப்பாகும்.

• عون الله ونصره لعباده من حيث لا يحتسبون إذا اتقوا الله.
2. அடியார்கள் அல்லாஹ்வை அஞ்சினால் அவர்கள் நினைத்துப் பார்க்காத புறத்திலிருந்து அல்லாஹ்வின் உதவி அவர்களுக்கு உண்டு.

• سوء عاقبة الغدر على اليهود الذين ساعدوا الأحزاب.
3. எதிரிப் படையினருக்கு உதவிசெய்த யூதர்களின் துரோகச் செயலின் தீய முடிவு தெளிவாகிறது.

• اختيار أزواج النبي صلى الله عليه وسلم رضا الله ورسوله دليل على قوة إيمانهنّ.
4. தூதரின் மனைவியர் அல்லாஹ்வின் திருப்தியையும் தூதரின் திருப்தியையும் தேர்ந்தெடுத்துக் கொண்டது அவர்களின் ஈமானிய வலிமைக்கான சான்றாகும்.

 
対訳 章: 部族連合章
章名の目次 ページ番号
 
クルアーンの対訳 - クルアーン簡潔注釈(タミル語対訳) - 対訳の目次

- Tafsir Center for Quranic Studies - 発行

閉じる