クルアーンの対訳 - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - 対訳の目次


対訳 節: (2) 章: 食卓章
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تُحِلُّوْا شَعَآىِٕرَ اللّٰهِ وَلَا الشَّهْرَ الْحَرَامَ وَلَا الْهَدْیَ وَلَا الْقَلَآىِٕدَ وَلَاۤ آٰمِّیْنَ الْبَیْتَ الْحَرَامَ یَبْتَغُوْنَ فَضْلًا مِّنْ رَّبِّهِمْ وَرِضْوَانًا ؕ— وَاِذَا حَلَلْتُمْ فَاصْطَادُوْا ؕ— وَلَا یَجْرِمَنَّكُمْ شَنَاٰنُ قَوْمٍ اَنْ صَدُّوْكُمْ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ اَنْ تَعْتَدُوْا ۘ— وَتَعَاوَنُوْا عَلَی الْبِرِّ وَالتَّقْوٰی ۪— وَلَا تَعَاوَنُوْا عَلَی الْاِثْمِ وَالْعُدْوَانِ ۪— وَاتَّقُوا اللّٰهَ ؕ— اِنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ ۟
5.2. ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு மதிக்குமாறு கட்டளையிட்ட புனிதங்களை அவமதித்துவிடாதீர்கள். தைத்த ஆடைகளை அணிவது போன்ற இஹ்ராம் அணிந்த நிலையில் தடைசெய்யப்பட்டவற்றை விட்டும் வேட்டையாடுவது போன்ற புனிதப் பிரதேசத்தில் தடைசெய்யப்பட்டவற்றையும் தவிர்ந்துகொள்ளுங்கள். புனிதமான மாதங்களில் போர் புரியாதீர்கள். (துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகியவை புனித மாதங்களாகும்) புனிதப்பிரதேச எல்லையில் அல்லாஹ்வுக்காக பலியிடுவதற்கு வழங்கப்பட்ட கால்நடைகளை அபகரிப்பதன் மூலமோ அது அடையவேண்டிய இடத்தைவிட்டுத் தடுப்பதன் மூலமோ அதனை ஆகுமாக்கிக்கொள்ளாதீர்கள். பலிப்பிராணி என்று உணர்த்தப்படுவதற்காக கழுத்தில் பட்டை கட்டப்பட்ட பிராணியையும், அல்லாஹ்வின் திருப்தியையும் வியாபார நலனையும் கருத்தில்கொண்டு கஃபா என்றும் இறையில்லத்தை நாடி வருவோரையும் ஆகுமாக்கிக்கொள்ளாதீர்கள். இஹ்ராமிலிருந்து நீங்கள் விடுபட்டு, புனிதப் பிரதேச எல்லையிலிருந்து நீங்கள் வெளியேறிவிட்டால் நீங்கள் நாடினால் வேட்டையாடிக் கொள்ளலாம். மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் உங்களைத் தடுத்த ஒரு சமூகத்தின் மீதுள்ள வெறுப்பு அவர்களுடன் நீதமாக நடந்துகொள்ளாது அநியாயம் இழைப்பதற்கு உங்களைத் தூண்டிவிட வேண்டாம். நம்பிக்கையாளர்களே! நீங்கள் ஏவப்பட்ட நல்லவற்றைச் செய்வதற்கும் தடுக்கப்பட்ட தீயவற்றை விட்டுத் தவிர்ந்திருப்பதற்கும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளுங்கள். பாவங்களில் ஈடுபடவும் மக்களின் உயிர் உடமை மானம் ஆகியவற்றில் அத்துமீறுவதற்கும் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்துக்கொள்ளாதீர்கள். அல்லாஹ்வுக்குக் கீழ்படிந்து, அவனுக்கு மாறுசெய்வதிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். தன் கட்டளைக்கு மாறாகச் செயல்படக்கூடியவர்களை அவன் கடுமையாக தண்டிக்கக்கூடியவன். எனவே அவனது தண்டனையிலிருந்து எச்சரிக்கையாக இருங்கள்.
アラビア語 クルアーン注釈:
本諸節の功徳:
• عناية الله بجميع أحوال الورثة في تقسيم الميراث عليهم.
1.அனந்தரச் சொத்துப் பங்கீட்டில் அனந்தரம் பெறுவோரின் அனைத்து நிலைகளையும் அல்லாஹ் கவனித்துள்ளான்.

• الأصل هو حِلُّ الأكل من كل بهيمة الأنعام، سوى ما خصه الدليل بالتحريم، أو ما كان صيدًا يعرض للمحرم في حجه أو عمرته.
2. எவை குறித்து பிரத்யேக தடைஉத்தரவு வந்துள்ளதோ அவற்றைத் தவிர மற்ற கால்நடைகள் அனைத்தும் உண்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஹஜ்ஜுக்காகவோ உம்ராவுக்காகவோ இஹ்ராம் அணிந்த நிலையில் வேட்டையாடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

• النهي عن استحلال المحرَّمات، ومنها: محظورات الإحرام، والصيد في الحرم، والقتال في الأشهر الحُرُم، واستحلال الهدي بغصب ونحوه، أو مَنْع وصوله إلى محله.
3. தடுக்கப்பட்டவற்றை ஆகுமாக்கிக்கொள்வது தடையாகும். அவற்றுள் சில: இஹ்ராம் உடைய நிலையில் தவிர்க்க வேண்டியவை, ஹரமில் வேட்டையாடுதல், புனித மாதங்களில் போர்புரிதல், பலிப் பிராணியை அபகரிப்பது அல்லது உரிய இடத்தை அடையாது தடுத்துவிடுவது ஆகியவற்றின் மூலம் ஆகுமாக்குதல்.

 
対訳 節: (2) 章: 食卓章
章名の目次 ページ番号
 
クルアーンの対訳 - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - 対訳の目次

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

閉じる