Check out the new design

クルアーンの対訳 - クルアーン簡潔注釈(タミル語対訳) * - 対訳の目次


対訳 章: 悔悟章   節:
اِنْفِرُوْا خِفَافًا وَّثِقَالًا وَّجَاهِدُوْا بِاَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْ فِیْ سَبِیْلِ اللّٰهِ ؕ— ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟
9.41. -நம்பிக்கையாளர்களே!- சிரமத்திலும் இலகுவிலும், இளைஞர்களாகவும், முதியவர்களாகவும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காகப் புறப்படுங்கள். உங்களின் செல்வங்களாலும் உயிர்களாலும் ஜிஹாது செய்யுங்கள். ஏனெனில் அவ்வாறு புறப்பட்டு, செல்வங்களாலும் உயிர்களாலும் ஜிஹாது செய்வது, ஜிஹாது செய்யாமல் இருந்து கொண்டு உயிர்களையும் உடமைகளையும் பாதுகாப்பதில் ஈடுபட்டிருப்பதை விட இவ்வுலகிவும் மறுவுலகிலும் அதிகப் பயனைத் தரக்கூடியதாகும். நீங்கள் அதனை அறிந்தவர்களாக இருந்தால் இதற்காக ஆர்வம் கொள்ளுங்கள்.
アラビア語 クルアーン注釈:
لَوْ كَانَ عَرَضًا قَرِیْبًا وَّسَفَرًا قَاصِدًا لَّاتَّبَعُوْكَ وَلٰكِنْ بَعُدَتْ عَلَیْهِمُ الشُّقَّةُ ؕ— وَسَیَحْلِفُوْنَ بِاللّٰهِ لَوِ اسْتَطَعْنَا لَخَرَجْنَا مَعَكُمْ ۚ— یُهْلِكُوْنَ اَنْفُسَهُمْ ۚ— وَاللّٰهُ یَعْلَمُ اِنَّهُمْ لَكٰذِبُوْنَ ۟۠
9.42. -தூதரே!- போருக்குப் புறப்படாமல் இருக்க உம்மிடம் அனுமதி கோரிய நயவஞ்சகர்களை, எளிதாக அடைந்துகொள்ளும் போர்ச் செல்வத்துக்கும் சிரமமற்ற பயணத்துக்கும் நீர் அழைத்திருந்தால் அவர்கள் உம்முடன் வந்திருப்பார்கள். ஆயினும் எதிரியை நோக்கிய பயணத் தூரம் நீண்டதாக அவர்களுக்குத் தென்பட்டதால் அவர்கள் பின்தங்கிவிட்டார்கள். போருக்குப் புறப்படாமல் இருக்க உம்மிடம் அனுமதிகோரும் இந்த நயவஞ்சகர்கள் நீர் திரும்பிவரும் போது அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுவார்கள்: “உங்களுடன் ஜிஹாதிற்காக புறப்பட முடிந்திருந்தால் நாங்களும் உங்களுடன் புறப்பட்டிருப்போம்.” போரை விட்டு பின்தங்கியதனாலும் பொய்ச் சத்தியங்களினாலும் தம்மை அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாக்கி தமக்குத் தாமே அழித்துக் கொண்டார்கள். அவர்கள் தமது கூற்றிலும் சத்தியங்களிலும் பொய்யர்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான்.
アラビア語 クルアーン注釈:
عَفَا اللّٰهُ عَنْكَ ۚ— لِمَ اَذِنْتَ لَهُمْ حَتّٰی یَتَبَیَّنَ لَكَ الَّذِیْنَ صَدَقُوْا وَتَعْلَمَ الْكٰذِبِیْنَ ۟
9.43. -தூதரே!- போருக்குப் புறப்படாமல் இருக்க அவர்களுக்கு அனுமதியளிப்பதற்கு நீர் எடுத்த முடிவுக்காக அல்லாஹ் உம்மை மன்னித்துவிட்டான். உண்மையாகவே காரணம் உடையவர்கள் யார், பொய்யர்கள் யார் என்பது தெளிவாகும் முன்னரே அவர்களுக்கு நீர் ஏன் அனுமதியளித்தீர்? அவ்வாறு தெளிவாகும் வரை காத்திருந்திருந்தால் பொய்யர்களின்றி உண்மையாளர்களுக்கு மாத்திரம் நீர் அனுமதி வழங்கியிருக்கலாம்.
アラビア語 クルアーン注釈:
لَا یَسْتَاْذِنُكَ الَّذِیْنَ یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ اَنْ یُّجَاهِدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ ؕ— وَاللّٰهُ عَلِیْمٌۢ بِالْمُتَّقِیْنَ ۟
9.44. தூதரே! அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வங்களாலும் உயிர்களாலும் போர் புரியாமல் பின்தங்குவதற்கு உம்மிடம் அனுமதி கோருவது அல்லாஹ்வையும் மறுமை நாளையும் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களது பண்பல்ல. மாறாக அவர்களைப் புறப்படுமாறு எப்பொழுது நீர் அழைத்தாலும் புறப்பட்டு தமது பொருட்களாலும் உடலாலும் போர்புரிவதே அவர்களது பண்பாகும். தன் அடியார்களில் தன்னை அஞ்சக்கூடியவர்களை அவன் அறிவான். உம்முடன் புறப்படுவதைத் தடுக்கும் தகுந்த காரணங்களின்றி உம்மிடம் அவர்கள் அனுமதிகோர மாட்டார்கள்.
アラビア語 クルアーン注釈:
اِنَّمَا یَسْتَاْذِنُكَ الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَارْتَابَتْ قُلُوْبُهُمْ فَهُمْ فِیْ رَیْبِهِمْ یَتَرَدَّدُوْنَ ۟
9.45. -தூதரே!- அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாதிற்குப் புறப்படாமல் பின்தங்குவதற்கு உம்மிடம் அனுமதிகோருபவர்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பாத நயவஞ்சகர்களாவர். அல்லாஹ்வின் மார்க்கத்தில் அவர்கள் சந்தேகம் கொண்டுள்ளார்கள். சத்தியத்தை அடைய முடியாமல் தங்கள் சந்தேகங்களில் அவர்கள் தடுமாறித் திரிகிறார்கள்.
アラビア語 クルアーン注釈:
وَلَوْ اَرَادُوا الْخُرُوْجَ لَاَعَدُّوْا لَهٗ عُدَّةً وَّلٰكِنْ كَرِهَ اللّٰهُ انْۢبِعَاثَهُمْ فَثَبَّطَهُمْ وَقِیْلَ اقْعُدُوْا مَعَ الْقٰعِدِیْنَ ۟
9.46. ‘நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக உம்முடன் புறப்பட விரும்புகிறோம்’ என்ற அவர்களது கூற்றில் அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து தயாராகியிருப்பார்கள். ஆனால் அவர்கள் புறப்படுவதை அல்லாஹ் விரும்பவில்லை. எனவேதான் தமது வீடுகளில் அமர்ந்திருப்பதை அவர்கள் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு புறப்படுவது அவர்களுக்குச் சிரமமாகி விட்டது.
アラビア語 クルアーン注釈:
لَوْ خَرَجُوْا فِیْكُمْ مَّا زَادُوْكُمْ اِلَّا خَبَالًا وَّلَاۡاَوْضَعُوْا خِلٰلَكُمْ یَبْغُوْنَكُمُ الْفِتْنَةَ ۚ— وَفِیْكُمْ سَمّٰعُوْنَ لَهُمْ ؕ— وَاللّٰهُ عَلِیْمٌۢ بِالظّٰلِمِیْنَ ۟
9.47. இந்த நயவஞ்சகர்கள் உங்களுடன் புறப்படாமல் இருப்பதே சிறந்ததாகும். அவர்கள் உங்களுடன் புறப்பட்டால், போரிடச் செய்யாமல் இருப்பதற்கான முயற்சி, சந்தேகங்களைத் தோற்றுவித்தல் போன்றவற்றின் ஊடாக குழப்பத்தையே ஏற்படுத்துவார்கள். உங்களிடையே பிரிவினையை ஏற்படுத்த கோல் மூட்டுவதில் விரைவாக ஈடுபடுவார்கள். -நம்பிக்கையாளர்களே!- அவர்கள் பரப்பும் பொய்யைக் கேட்டு அதனை ஏற்றுப் பரப்புவர்களும் உங்களிடையே உள்ளனர். இதனால் உங்களிடையே கருத்து வேறுபாடு தோன்றி விடும். நம்பிக்கையாளர்களிடையே சூழ்ச்சிகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தும் நயவஞ்சகம் கொண்ட அநியாயக்காரர்களை அல்லாஹ் நன்கறிந்தவன்.
アラビア語 クルアーン注釈:
本諸節の功徳:
• وجوب الجهاد بالنفس والمال كلما دعت الحاجة.
1. தேவை ஏற்படும் பொழுதெல்லாம் உடலாலும் பொருளாலும் ஜிஹாது செய்வது கட்டாயமாகும்.

• الأيمان الكاذبة توجب الهلاك.
2. பொய்ச் சத்தியம் அழிவுக்கு காரணமாக அமைகிறது.

• وجوب الاحتراز من العجلة، ووجوب التثبت والتأني، وترك الاغترار بظواهر الأمور، والمبالغة في التفحص والتريث.
3. அவசரத்தை விட்டும் தவிர்ந்து கொள்வதும் உறுதிப்படுத்திக் கொள்வதும் நிதானமாகச் செயற்படுவதும் அவசியமாகும். வெளிரங்கத்தை வைத்து ஏமாறாது மென்மேலும் சோதித்து நிதானமாகச் செயலாற்றுவது கடமையாகும்.

• من عناية الله بالمؤمنين تثبيطه المنافقين ومنعهم من الخروج مع عباده المؤمنين، رحمة بالمؤمنين ولطفًا من أن يداخلهم من لا ينفعهم بل يضرهم.
4. நயவஞ்சகர்கள் நம்பிக்கையாளர்களான தனது அடியார்களுடன் போருக்காக புறப்படுவதைத் தடுப்பதற்காக அவர்களை அல்லாஹ் விரக்தியூட்டியமை நம்பிக்கையாளர்களின் மீதான அல்லாஹ்வின் அக்கறையின் வெளிப்பாடாகும். அவர்களுக்கு நன்மை பயக்காத மாறாக தீங்கு விளைவிப்போர் அவர்களுக்குள் நுழையாமல் இருக்கு முகமாக நம்பிக்கையாளர்களின் மீது கொண்ட அன்பினால் செய்த ஏற்பாடே இதுவாகும்.

 
対訳 章: 悔悟章
章名の目次 ページ番号
 
クルアーンの対訳 - クルアーン簡潔注釈(タミル語対訳) - 対訳の目次

- Tafsir Center for Quranic Studies - 発行

閉じる