ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អាប់ឌុលហាមុីទ ពេីក៏វី

external-link copy
113 : 2

وَقَالَتِ الْیَهُوْدُ لَیْسَتِ النَّصٰرٰی عَلٰی شَیْءٍ ۪— وَّقَالَتِ النَّصٰرٰی لَیْسَتِ الْیَهُوْدُ عَلٰی شَیْءٍ ۙ— وَّهُمْ یَتْلُوْنَ الْكِتٰبَ ؕ— كَذٰلِكَ قَالَ الَّذِیْنَ لَا یَعْلَمُوْنَ مِثْلَ قَوْلِهِمْ ۚ— فَاللّٰهُ یَحْكُمُ بَیْنَهُمْ یَوْمَ الْقِیٰمَةِ فِیْمَا كَانُوْا فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟

113. இன்னும், ‘‘கிறிஸ்தவர்கள் எ(ந்த மார்க்கத்)திலுமில்லை'' என யூதர்கள் கூறுகின்றனர். (அவ்வான்ற) ‘‘யூதர்கள் எ(ந்த மார்க்கத்)திலுமில்லை'' எனக் கிறிஸ்தவர்களும் கூறுகின்றனர். ஆனால், இவ்விருவருமே (தங்களின் கூற்றுக்கு ஆதாரமாக பைபிளின் ‘பழைய ஏற்பாடாகிய' தவ்றாத் என்னும் ஒரே) வேதத்தை(த்தான்) ஓதுகிறார்கள். இவர்கள் கூறிக்கொள்வது போலவே (வேதத்தை) அறியாத (இணைவைத்து வணங்குப)வர்கள் (‘‘யூதர்களும் கிறிஸ்தவர்களும் எம்மார்க்கத்தையும் சேர்ந்தவர்கள் அல்ல'' எனக்) கூறுகிறார்கள். ஆனால், இவர்கள் செய்து கொண்டிருக்கும் இந்த தர்க்கத்தைப் பற்றி மறுமையில் அல்லாஹ் இவர்களுக்குத் தீர்ப்பளிப்பான். info
التفاسير: