ការបកប្រែអត្ថន័យគួរអាន - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - សន្ទស្សន៍នៃការបកប្រែ


ការបកប្រែអត្ថន័យ អាយ៉ាត់: (167) ជំពូក​: សូរ៉ោះអាល់ហ្ពាក៏រ៉ោះ
وَقَالَ الَّذِیْنَ اتَّبَعُوْا لَوْ اَنَّ لَنَا كَرَّةً فَنَتَبَرَّاَ مِنْهُمْ كَمَا تَبَرَّءُوْا مِنَّا ؕ— كَذٰلِكَ یُرِیْهِمُ اللّٰهُ اَعْمَالَهُمْ حَسَرٰتٍ عَلَیْهِمْ ؕ— وَمَا هُمْ بِخٰرِجِیْنَ مِنَ النَّارِ ۟۠
2.167. பின்பற்றியவர்கள், பலவீனமானவர்கள் கூறுவார்கள்: எங்களை விட்டும் எமது தலைவர்கள் விலகிக்கொண்டதைப்போல் நாங்களும் அவா்களை விட்டு விலகுவதற்கு உலகத்திற்கு மீண்டும் திரும்பிச் செல்லும் சந்தர்ப்பம் கிடைக்கக்கூடாதா? மறுமையில் அல்லாஹ் அவர்களுக்கு கடுமையான வேதனையைக் காட்டியதுபோல், அசத்தியத்தில் இருந்த தலைவர்களைப் பின்பற்றியதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் கவலைகளாக, கைசேதங்களாக அனுபவிக்கச்செய்வான். அவர்கள் நரகத்திலிருந்து ஒருபோதும் வெளியேற முடியாது.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
ក្នុង​ចំណោម​អត្ថប្រយោជន៍​នៃអាយ៉ាត់ទាំងនេះក្នុងទំព័រនេះ:
• المؤمنون بالله حقًّا هم أعظم الخلق محبة لله؛ لأنهم يطيعونه على كل حال في السراء والضراء، ولا يشركون معه أحدًا.
1. அல்லாஹ்வின்மீது உண்மையாகவே நம்பிக்கைகொண்டவர்களே அல்லாஹ்வை அதிகம் நேசிக்கும் மக்கள். ஏனெனில் அவர்கள் இன்பத்திலும் துன்பத்திலும் அவனுக்கே கட்டுப்படுவார்கள். அவனுக்கு இணையாக யாரையும் ஆக்க மாட்டார்கள்.

• في يوم القيامة تنقطع كل الروابط، ويَبْرَأُ كل خليل من خليله، ولا يبقى إلا ما كان خالصًا لله تعالى.
2. மறுமைநாளில் தொடர்புகள் அனைத்தும் அறுந்துவிடும். நெருங்கிய நண்பன் தன் நெருங்கிய நண்பனை விட்டும் விலகிவிடுவான். அல்லாஹ்வுக்காக செய்யப்பட்ட செயல்கள் மட்டுமே நிலைத்திருக்கும்.

• التحذير من كيد الشيطان لتنوع أساليبه وخفائها وقربها من مشتهيات النفس.
3. சைதானின் சூழ்ச்சிகள் பலதரப்பட்டவை, மறைவானவை, மனோஇச்சைகளுக்கு நெருக்கமானவை என்பதனால் அதிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

 
ការបកប្រែអត្ថន័យ អាយ៉ាត់: (167) ជំពូក​: សូរ៉ោះអាល់ហ្ពាក៏រ៉ោះ
សន្ទស្សន៍នៃជំពូក លេខ​ទំព័រ
 
ការបកប្រែអត្ថន័យគួរអាន - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - សន្ទស្សន៍នៃការបកប្រែ

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

បិទ