external-link copy
143 : 2

وَكَذٰلِكَ جَعَلْنٰكُمْ اُمَّةً وَّسَطًا لِّتَكُوْنُوْا شُهَدَآءَ عَلَی النَّاسِ وَیَكُوْنَ الرَّسُوْلُ عَلَیْكُمْ شَهِیْدًا ؕ— وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِیْ كُنْتَ عَلَیْهَاۤ اِلَّا لِنَعْلَمَ مَنْ یَّتَّبِعُ الرَّسُوْلَ مِمَّنْ یَّنْقَلِبُ عَلٰی عَقِبَیْهِ ؕ— وَاِنْ كَانَتْ لَكَبِیْرَةً اِلَّا عَلَی الَّذِیْنَ هَدَی اللّٰهُ ؕ— وَمَا كَانَ اللّٰهُ لِیُضِیْعَ اِیْمَانَكُمْ ؕ— اِنَّ اللّٰهَ بِالنَّاسِ لَرَءُوْفٌ رَّحِیْمٌ ۟

இன்னும், (நம்பிக்கையாளர்களே!) அவ்வாறுதான், நீங்கள் மக்களுக்கு சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், உங்களுக்கு தூதர் சாட்சியாளராக இருப்பதற்காகவும் (சிறந்த, நீதமான) நடுநிலைச் சமுதாயமாக உங்களை ஆக்கினோம். தமது குதிங்கால்கள் மீது திரும்பிவிடுவோரிலிருந்து தூதரைப் பின்பற்றுபவர் யார் என்பதை நாம் அறிவதற்காகவே தவிர நீர் (தொழுகையில் முன்னோக்குபவராக) இருந்த (பைத்துல் முகத்தஸ் ஆகிய முதல்) கிப்லாவை (விட்டு உம்மை திருப்பியதை) நாம் ஆக்கவில்லை. அல்லாஹ் எவர்களை நேர்வழி நடத்தினானோ அவர்கள் மீதே தவிர (மற்றவர்களுக்கு) நிச்சயமாக அது பெரிதாகவே (-பாரமாகவே) இருந்தது. உங்கள் நம்பிக்கையை (-முன்னர் நீங்கள் தொழுத தொழுகைகளை) அல்லாஹ் வீணாக்குபவனாக இல்லை. நிச்சயமாக அல்லாஹ் மக்கள் மீது மிக இரக்கமுடையவன், மகா கருணையாளன். info
التفاسير: |