external-link copy
165 : 2

وَمِنَ النَّاسِ مَنْ یَّتَّخِذُ مِنْ دُوْنِ اللّٰهِ اَنْدَادًا یُّحِبُّوْنَهُمْ كَحُبِّ اللّٰهِ ؕ— وَالَّذِیْنَ اٰمَنُوْۤا اَشَدُّ حُبًّا لِّلّٰهِ ؕ— وَلَوْ یَرَی الَّذِیْنَ ظَلَمُوْۤا اِذْ یَرَوْنَ الْعَذَابَ ۙ— اَنَّ الْقُوَّةَ لِلّٰهِ جَمِیْعًا ۙ— وَّاَنَّ اللّٰهَ شَدِیْدُ الْعَذَابِ ۟

மக்களில் அல்லாஹ்வை அன்றி (அவனுக்கு) சமமானவர்களை (-கற்பனை தெய்வங்களை) ஏற்படுத்தியவர்களும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் மீது அன்பு வைக்கப்படுவது போல் அவர்கள் அவற்றின் மீது அன்பு வைக்கிறார்கள். நம்பிக்கையாளர்கள் (உண்மையான இறைவனாகிய) அல்லாஹ்வின் மீதுதான் அதிகம் அன்பு வைப்பார்கள். அநியாயக்காரர்கள் (நரக) தண்டனையை (நேருக்கு நேர் கண்ணால்) காணும்போது, (தங்களது இறுதி முடிவு என்ன என்பதை) பார்த்துவிட்டால், “அனைத்து ஆற்றலும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியது; (தாம் வணங்கிய தெய்வங்கள் சக்தி அற்றவை;) தண்டிப்பதில் அல்லாஹ் கடினமானவன்; (நம்மை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து நமது தெய்வங்களால் காப்பாற்ற முடியாது)” என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். info
التفاسير: |