external-link copy
237 : 2

وَاِنْ طَلَّقْتُمُوْهُنَّ مِنْ قَبْلِ اَنْ تَمَسُّوْهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِیْضَةً فَنِصْفُ مَا فَرَضْتُمْ اِلَّاۤ اَنْ یَّعْفُوْنَ اَوْ یَعْفُوَا الَّذِیْ بِیَدِهٖ عُقْدَةُ النِّكَاحِ ؕ— وَاَنْ تَعْفُوْۤا اَقْرَبُ لِلتَّقْوٰی ؕ— وَلَا تَنْسَوُا الْفَضْلَ بَیْنَكُمْ ؕ— اِنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟

இன்னும், அவர்களுக்கு ஒரு மஹ்ரை நீங்கள் நிர்ணயித்து விட்டிருக்க, அவர்களைத் தொடுவதற்கு (-உடலுறவுக்கு) முன்னதாகவே அவர்களை நீங்கள் விவாகரத்து செய்தால் நீங்கள் நிர்ணயித்ததில் பாதி (அப்பெண்களுக்கு) கொடுக்கப்பட வேண்டும். அவர்கள் (-மனைவிகள்) மன்னித்தால் அல்லது எவனுடைய கையில் திருமண ஒப்பந்தம் இருக்கிறதோ அவன் (-கணவன்) மன்னித்தால் தவிர. (மனைவி பாதி மஹ்ரையும் வாங்காமல் விடலாம். அல்லது, கணவன் முழு மஹ்ரையும் கொடுக்கலாம்.) ஆயினும், (ஆண்களாகிய) நீங்கள் மன்னி(த்து முழு மஹ்ரையும் கொடு)ப்பது இறை அச்சத்திற்கு மிக நெருக்கமா(ன செயலா)கும். உங்களுக்கு மத்தியில் (ஒருவர் மற்றவருக்கு) உதவுவதை மறக்காதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்குபவன் ஆவான். info
التفاسير: |