Check out the new design

ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ * - សន្ទស្សន៍នៃការបកប្រែ

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: លុកម៉ាន   អាយ៉ាត់:
اَلَمْ تَرَوْا اَنَّ اللّٰهَ سَخَّرَ لَكُمْ مَّا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ وَاَسْبَغَ عَلَیْكُمْ نِعَمَهٗ ظَاهِرَةً وَّبَاطِنَةً ؕ— وَمِنَ النَّاسِ مَنْ یُّجَادِلُ فِی اللّٰهِ بِغَیْرِ عِلْمٍ وَّلَا هُدًی وَّلَا كِتٰبٍ مُّنِیْرٍ ۟
நீங்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றையும் உங்களுக்கு வசப்படுத்தினான். இன்னும், உங்கள் மீது தனது அருட்கொடைகளை வெளிப்படையாகவும் மறைவாகவும் நிறைவாக்கினான். அல்லாஹ்வின் விஷயத்தில் கல்வி இன்றியும் நேர்வழி இன்றியும் பிரகாசமான வேதமின்றியும் தர்க்கம் செய்பவர்கள் மக்களில் இருக்கிறார்கள்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
وَاِذَا قِیْلَ لَهُمُ اتَّبِعُوْا مَاۤ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا بَلْ نَتَّبِعُ مَا وَجَدْنَا عَلَیْهِ اٰبَآءَنَا ؕ— اَوَلَوْ كَانَ الشَّیْطٰنُ یَدْعُوْهُمْ اِلٰی عَذَابِ السَّعِیْرِ ۟
இன்னும், அல்லாஹ் இறக்கியதை பின்பற்றுங்கள் என்று அவர்களுக்கு கூறப்பட்டால், மாறாக, எங்கள் மூதாதைகளை நாங்கள் எதன் மீது கண்டோமோ அதையே நாங்கள் பின்பற்றுவோம் என்று கூறுகிறார்கள். கொழுந்து விட்டெரியும் நரக தண்டனையின் பக்கம் ஷைத்தான் அவர்களை அழைப்பவனாக இருந்தாலுமா (இவர்கள் ஷைத்தானின் வழிகாட்டலைப் பின்பற்றுவார்கள்)?
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
وَمَنْ یُّسْلِمْ وَجْهَهٗۤ اِلَی اللّٰهِ وَهُوَ مُحْسِنٌ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقٰی ؕ— وَاِلَی اللّٰهِ عَاقِبَةُ الْاُمُوْرِ ۟
இன்னும், எவர் தனது முகத்தை அல்லாஹ்விற்கு முன் - அவரோ நல்லறம் புரிபவராக இருக்கும் நிலையில் – பணிய வைப்பாரோ திட்டமாக அவர் மிக உறுதியான வளையத்தை பற்றிப் பிடித்தார். அல்லாஹ்வின் பக்கம்தான் எல்லா காரியங்களின் முடிவு இருக்கிறது.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
وَمَنْ كَفَرَ فَلَا یَحْزُنْكَ كُفْرُهٗ ؕ— اِلَیْنَا مَرْجِعُهُمْ فَنُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوْا ؕ— اِنَّ اللّٰهَ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟
இன்னும், எவர் நிராகரிப்பாரோ அவருடைய நிராகரிப்பு உம்மை கவலைப்படுத்த வேண்டாம். நம் பக்கம்தான் அ(த்தகைய)வர்களின் மீளுமிடம் இருக்கிறது. ஆக, அவர்கள் செய்தவற்றை அவர்களுக்கு நாம் அறிவிப்போம். நிச்சயமாக அல்லாஹ் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன் ஆவான்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
نُمَتِّعُهُمْ قَلِیْلًا ثُمَّ نَضْطَرُّهُمْ اِلٰی عَذَابٍ غَلِیْظٍ ۟
அவர்களுக்கு நாம் கொஞ்ச (கால)ம் சுகமளிப்போம். பிறகு, நாம் கடுமையான முரட்டு தண்டனையின் பக்கம் அவர்களை நிர்ப்பந்தமாக கொண்டு வருவோம்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
وَلَىِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ لَیَقُوْلُنَّ اللّٰهُ ؕ— قُلِ الْحَمْدُ لِلّٰهِ ؕ— بَلْ اَكْثَرُهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
யார் வானங்களையும் பூமியையும் படைத்தான் என்று அவர்களிடம் நீர் கேட்டால், அல்லாஹ்தான் (படைத்தான்) என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள். “எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே!” என்று கூறுவீராக! மாறாக, அவர்களில் அதிகமானோர் (படைத்தவனாகிய அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்பதை) அறிய மாட்டார்கள்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— اِنَّ اللّٰهَ هُوَ الْغَنِیُّ الْحَمِیْدُ ۟
வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்விற்கே சொந்தமானவை. நிச்சயமாக அல்லாஹ்தான் முற்றிலும் நிறைவானவன் (-தேவையற்றவன்), மிகுந்த புகழாளன்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
وَلَوْ اَنَّمَا فِی الْاَرْضِ مِنْ شَجَرَةٍ اَقْلَامٌ وَّالْبَحْرُ یَمُدُّهٗ مِنْ بَعْدِهٖ سَبْعَةُ اَبْحُرٍ مَّا نَفِدَتْ كَلِمٰتُ اللّٰهِ ؕ— اِنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟
நிச்சயமாக பூமியில் உள்ள மரங்கள் எல்லாம் எழுது கோல்களாக இருந்து, இன்னும் கடல் - (மையாக மாறி) அதற்குப் பின்னர் ஏழு கடல்களும் அதற்கு மையாக மாறினால், (பின்னர் அல்லாஹ்வின் ஞானங்கள் எழுதப்பட்டால், எழுதுகோல்கள் தேய்ந்துவிடும், கடல் நீரெல்லாம் தீர்ந்துவிடும். ஆனால்,) அல்லாஹ்வின் ஞானங்கள் தீர்ந்துவிடாது. நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
مَا خَلْقُكُمْ وَلَا بَعْثُكُمْ اِلَّا كَنَفْسٍ وَّاحِدَةٍ ؕ— اِنَّ اللّٰهَ سَمِیْعٌ بَصِیْرٌ ۟
உங்களை படைப்பதும் (நீங்கள் மரணித்த பின்னர்) உங்களை (உயிருடன்) எழுப்புவதும் ஒரே ஓர் ஆன்மாவைப் (படைப்பதைப்) போன்றே தவிர (எனக்கு சிரமமான காரியம்) இல்லை. நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன்; உற்று நோக்குபவன் ஆவான்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
 
ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: លុកម៉ាន
សន្ទស្សន៍នៃជំពូក លេខ​ទំព័រ
 
ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ - សន្ទស្សន៍នៃការបកប្រែ

ដោយលោកអូម៉ើ ស្ហើរុីហ្វ ពិន អាប់ឌុស្សាឡាម

បិទ