ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ * - សន្ទស្សន៍នៃការបកប្រែ

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: សូរ៉ោះអាល់អះហ្សាប   អាយ៉ាត់:

ஸூரா அல்அஹ்ஸாப்

یٰۤاَیُّهَا النَّبِیُّ اتَّقِ اللّٰهَ وَلَا تُطِعِ الْكٰفِرِیْنَ وَالْمُنٰفِقِیْنَ ؕ— اِنَّ اللّٰهَ كَانَ عَلِیْمًا حَكِیْمًا ۟ۙ
நபியே! அல்லாஹ்வை அஞ்சுவீராக! நிராகரிப்பவர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் கீழ்ப்படியாதீர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாக மகா ஞானவானாக இருக்கிறான்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
وَّاتَّبِعْ مَا یُوْحٰۤی اِلَیْكَ مِنْ رَّبِّكَ ؕ— اِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرًا ۟ۙ
இன்னும், (நபியே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு வஹ்யி எது அறிவிக்கப்படுகிறதோ (அது குர்ஆனாக இருந்தாலும் சரி, அல்லது ஸுன்னாவாக இருந்தாலும் சரி) அதையே பின்பற்றுவீராக! நிச்சயமாக நீங்கள் செய்வதை அல்லாஹ் ஆழ்ந்தறிந்தவனாக இருக்கிறான்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
وَّتَوَكَّلْ عَلَی اللّٰهِ ؕ— وَكَفٰی بِاللّٰهِ وَكِیْلًا ۟
இன்னும், (நபியே!) அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை(த்து அவனையே சார்ந்திரு)ப்பீராக! பொறுப்பாளனாக அல்லாஹ்வே போதுமானவன்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
مَا جَعَلَ اللّٰهُ لِرَجُلٍ مِّنْ قَلْبَیْنِ فِیْ جَوْفِهٖ ۚ— وَمَا جَعَلَ اَزْوَاجَكُمُ الّٰٓـِٔیْ تُظٰهِرُوْنَ مِنْهُنَّ اُمَّهٰتِكُمْ ۚ— وَمَا جَعَلَ اَدْعِیَآءَكُمْ اَبْنَآءَكُمْ ؕ— ذٰلِكُمْ قَوْلُكُمْ بِاَفْوَاهِكُمْ ؕ— وَاللّٰهُ یَقُوْلُ الْحَقَّ وَهُوَ یَهْدِی السَّبِیْلَ ۟
அல்லாஹ் ஒரு மனிதனுக்கு அவனது உடலில் இரு உள்ளங்களை அமைக்கவில்லை. இன்னும், நீங்கள் ளிஹார் செய்த உங்கள் மனைவிகளை உங்கள் தாய்மார்களாக அவன் ஆக்கவில்லை. இன்னும், உங்கள் வளர்ப்பு பிள்ளைகளை உங்கள் சொந்த பிள்ளைகளாக அவன் ஆக்கவில்லை. அது உங்கள் வாய்களால் நீங்கள் கூறுவதாகும். அல்லாஹ் உண்மையை கூறுகிறான். அவன்தான் நல்ல பாதைக்கு வழிகாட்டுகிறான்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
اُدْعُوْهُمْ لِاٰبَآىِٕهِمْ هُوَ اَقْسَطُ عِنْدَ اللّٰهِ ۚ— فَاِنْ لَّمْ تَعْلَمُوْۤا اٰبَآءَهُمْ فَاِخْوَانُكُمْ فِی الدِّیْنِ وَمَوَالِیْكُمْ ؕ— وَلَیْسَ عَلَیْكُمْ جُنَاحٌ فِیْمَاۤ اَخْطَاْتُمْ بِهٖ وَلٰكِنْ مَّا تَعَمَّدَتْ قُلُوْبُكُمْ ؕ— وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟
அவர்களை அவர்களது தந்தைகளுடன் சேர்த்தே அழையுங்கள்! அதுதான் அல்லாஹ்விடம் மிக நீதமானதாகும். ஆக, நீங்கள் அவர்களின் தந்தைகளை அறியவில்லை என்றால் மார்க்கத்தில் அவர்கள் உங்கள் சகோதரர்கள் (ஆவார்கள் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தால். அப்படி இல்லை என்றால்) அவர்கள் உங்கள் உதவியாளர்கள் ஆவார்கள். நீங்கள் எதில் தவறு செய்தீர்களோ அதில் உங்கள் மீது குற்றம் இல்லை. என்றாலும், எ(ந்த பாவத்)தை உங்கள் உள்ளங்கள் வேண்டுமென்றே செய்ததோ அதுதான் குற்றம் ஆகும். அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக மகா கருணையாளனாக இருக்கிறான்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
اَلنَّبِیُّ اَوْلٰی بِالْمُؤْمِنِیْنَ مِنْ اَنْفُسِهِمْ وَاَزْوَاجُهٗۤ اُمَّهٰتُهُمْ ؕ— وَاُولُوا الْاَرْحَامِ بَعْضُهُمْ اَوْلٰی بِبَعْضٍ فِیْ كِتٰبِ اللّٰهِ مِنَ الْمُؤْمِنِیْنَ وَالْمُهٰجِرِیْنَ اِلَّاۤ اَنْ تَفْعَلُوْۤا اِلٰۤی اَوْلِیٰٓىِٕكُمْ مَّعْرُوْفًا ؕ— كَانَ ذٰلِكَ فِی الْكِتٰبِ مَسْطُوْرًا ۟
நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிர்களைவிட நபிதான் மிக உரிமையாளர் (மிக நெருக்கமானவர், மிக ஏற்றமானவர்) ஆவார். அவருடைய மனைவிமார்கள் அவர்களுக்கு தாய்மார்கள் ஆவார்கள். இரத்த பந்தங்கள் அல்லாஹ்வின் வேதத்தின் படி அவர்களில் சிலர் சிலருக்கு உரிமையுள்ளவர்கள் ஆவார்கள், (மற்ற) நம்பிக்கையாளர்களையும் முஹாஜிர்களையும் விட. எனினும், உங்கள் (வாரிசு அல்லாத) உங்கள் சொந்தங்களுக்கு நீங்கள் ஏதும் நன்மை செய்தால் தவிர. இது வேதத்தில் எழுதப்பட்டதாக இருக்கிறது.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
وَاِذْ اَخَذْنَا مِنَ النَّبِیّٖنَ مِیْثَاقَهُمْ وَمِنْكَ وَمِنْ نُّوْحٍ وَّاِبْرٰهِیْمَ وَمُوْسٰی وَعِیْسَی ابْنِ مَرْیَمَ ۪— وَاَخَذْنَا مِنْهُمْ مِّیْثَاقًا غَلِیْظًا ۟ۙ
எல்லா நபிமார்களிடமும் (அவர்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும், அவனுக்கு எதையும் இணைவைக்கக் கூடாது என்று) அவர்களின் வாக்குறுதியை வாங்கிய சமயத்தை நினைவு கூர்வீராக! இன்னும், (அதே வாக்குறுதியை) உம்மிடமும் நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமின் மகன் ஈஸாவிடமும் நாம் வாங்கினோம். இன்னும், அவர்களிடம் உறுதியான வாக்குறுதியை நாம் வாங்கினோம்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
لِّیَسْـَٔلَ الصّٰدِقِیْنَ عَنْ صِدْقِهِمْ ۚ— وَاَعَدَّ لِلْكٰفِرِیْنَ عَذَابًا اَلِیْمًا ۟۠
(அல்லாஹ் இந்த வாக்குறுதியை வாங்கியது) ஏனென்றால், உண்மையாளர்களை (-நபிமார்களை) அவர்களின் உண்மையைப் பற்றி (அவர்களின் சமுதாய மக்கள் அவர்களுக்கு என்ன பதில் கூறினார்கள், ஏற்றார்களா, நிராகரித்தார்களா என்று) விசாரிப்பதற்காக ஆகும். நிராகரிப்பாளர்களுக்கு வலிமிகுந்த தண்டனையை (அல்லாஹ்) ஏற்படுத்தி இருக்கிறான்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَیْكُمْ اِذْ جَآءَتْكُمْ جُنُوْدٌ فَاَرْسَلْنَا عَلَیْهِمْ رِیْحًا وَّجُنُوْدًا لَّمْ تَرَوْهَا ؕ— وَكَانَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرًا ۟ۚ
நம்பிக்கையாளர்களே! உங்கள் மீது அல்லாஹ் புரிந்த அருட்கொடையை நினைவு கூருங்கள். பல ராணுவங்கள் (உங்களை தாக்குவதற்கு) உங்களிடம் வந்தபோது அவர்களுக்கு எதிராக காற்றையும் பல ராணுவங்களையும் நாம் அனுப்பினோம். அவர்களை நீங்கள் பார்க்கவில்லை. அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
اِذْ جَآءُوْكُمْ مِّنْ فَوْقِكُمْ وَمِنْ اَسْفَلَ مِنْكُمْ وَاِذْ زَاغَتِ الْاَبْصَارُ وَبَلَغَتِ الْقُلُوْبُ الْحَنَاجِرَ وَتَظُنُّوْنَ بِاللّٰهِ الظُّنُوْنَا ۟ؕ
உங்களுக்கு மேல் புறத்திலிருந்தும் உங்களுக்கு கீழ்ப்புறத்திலிருந்தும் உங்களிடம் அவர்கள் வந்த சமயத்தில், இன்னும் பார்வைகள் சொருகி, உள்ளங்கள் தொண்டைகளுக்கு எட்டிய சமயத்தில் (உங்கள் செயல்களை அல்லாஹ் உற்று நோக்கியவனாக இருந்தான்). (நயவஞ்சகர்களே!) நீங்கள் அல்லாஹ்வைப் பற்றி பல (தப்பான) எண்ணங்களை எண்ணினீர்கள்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
هُنَالِكَ ابْتُلِیَ الْمُؤْمِنُوْنَ وَزُلْزِلُوْا زِلْزَالًا شَدِیْدًا ۟
அங்குதான் நம்பிக்கையாளர்கள் சோதிக்கப்பட்டார்கள். இன்னும், கடுமையாக அச்சுறுத்தப்பட்டார்கள்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
وَاِذْ یَقُوْلُ الْمُنٰفِقُوْنَ وَالَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ مَّا وَعَدَنَا اللّٰهُ وَرَسُوْلُهٗۤ اِلَّا غُرُوْرًا ۟
இன்னும், நயவஞ்சகர்களும் தங்கள் உள்ளங்களில் (சந்தேக) நோய் உள்ளவர்களும் “அல்லாஹ்வும் அவனது தூதரும் நமக்கு பொய்யை (ஏமாற்றம் தரக்கூடியதை)த் தவிர (உண்மையான வெற்றியை) வாக்களிக்கவில்லை” என்று கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
وَاِذْ قَالَتْ طَّآىِٕفَةٌ مِّنْهُمْ یٰۤاَهْلَ یَثْرِبَ لَا مُقَامَ لَكُمْ فَارْجِعُوْا ۚ— وَیَسْتَاْذِنُ فَرِیْقٌ مِّنْهُمُ النَّبِیَّ یَقُوْلُوْنَ اِنَّ بُیُوْتَنَا عَوْرَةٌ ۛؕ— وَمَا هِیَ بِعَوْرَةٍ ۛۚ— اِنْ یُّرِیْدُوْنَ اِلَّا فِرَارًا ۟
“யஸ்ரிப் வாசிகளே! உங்களுக்கு (இந்த போர் மைதானத்தில் தாக்குப்பிடித்து) தங்குவது அறவே முடியாது. ஆகவே, (உங்கள் இல்லங்களுக்கு) திரும்பி விடுங்கள்” என்று அவர்களில் ஒரு சாரார் கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். இன்னும், அவர்களில் ஒரு பிரிவினர் (போரில் கலந்துகொள்ளாமல் இருக்க) நபியிடம் அனுமதி கேட்கிறார்கள். “நிச்சயமாக எங்கள் இல்லங்கள் பாதுகாப்பு அற்றதாக இருக்கின்றன” என்று கூறுகிறார்கள். ஆனால், அவை பாதுகாப்பு அற்றதாக இல்லை. அவர்கள் (போர்க்களத்தை விட்டு) விரண்டோடுவதைத் தவிர (போர்க்களத்தில் நின்று உறுதியாக போர் செய்வதை) நாடவில்லை.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
وَلَوْ دُخِلَتْ عَلَیْهِمْ مِّنْ اَقْطَارِهَا ثُمَّ سُىِٕلُوا الْفِتْنَةَ لَاٰتَوْهَا وَمَا تَلَبَّثُوْا بِهَاۤ اِلَّا یَسِیْرًا ۟
(மதீனாவில் உள்ள) அவர்கள் (-முனாஃபிக்குகள்) மீது அதனுடைய சுற்றுப் புறங்களில் இருந்து (படைகள்) நுழைந்தால், பிறகு குழப்பம் விளைவிக்கும்படி (-நிராகரிப்பையும் இணைவைத்தலையும் செய்யும்படி) அவர்களிடம் கேட்கப்பட்டால் அவர்கள் அதை (உடனே) செய்திருப்பார்கள். (நிராகரிப்பாளர்களின் அழைப்புக்கு பதில் தர) அவர்கள் கொஞ்ச (நேர)மே தவிர தாமதித்திருக்க மாட்டார்கள்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
وَلَقَدْ كَانُوْا عَاهَدُوا اللّٰهَ مِنْ قَبْلُ لَا یُوَلُّوْنَ الْاَدْبَارَ ؕ— وَكَانَ عَهْدُ اللّٰهِ مَسْـُٔوْلًا ۟
திட்டவட்டமாக இதற்கு முன்னர், “அவர்கள் புறமுதுகிட்டு ஓடமாட்டார்கள்” என்று அவர்கள் அல்லாஹ்விடம் உடன்படிக்கை செய்திருந்தனர். அல்லாஹ்வின் (பெயர் கூறி இவர்கள் செய்த) ஒப்பந்தம் விசாரிக்கப்படுவதாக இருக்கிறது.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
قُلْ لَّنْ یَّنْفَعَكُمُ الْفِرَارُ اِنْ فَرَرْتُمْ مِّنَ الْمَوْتِ اَوِ الْقَتْلِ وَاِذًا لَّا تُمَتَّعُوْنَ اِلَّا قَلِیْلًا ۟
(நபியே!) கூறுவீராக! நீங்கள் மரணத்தைவிட்டு அல்லது கொல்லப்படுவதை விட்டு விரண்டோடினால் (நீங்கள்) விரண்டோடுவது உங்களுக்கு அறவே பலனளிக்காது. அப்போதும் (-அப்படி விரண்டோடினாலும்) கொஞ்ச (கால)மே தவிர (இவ்வுலகில் வாழ்வதற்கு) நீங்கள் சுகமளிக்கப்பட மாட்டீர்கள்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
قُلْ مَنْ ذَا الَّذِیْ یَعْصِمُكُمْ مِّنَ اللّٰهِ اِنْ اَرَادَ بِكُمْ سُوْٓءًا اَوْ اَرَادَ بِكُمْ رَحْمَةً ؕ— وَلَا یَجِدُوْنَ لَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ وَلِیًّا وَّلَا نَصِیْرًا ۟
(நபியே) கூறுவீராக! அல்லாஹ், உங்களுக்கு ஒரு தீங்கை நாடினால் அல்லாஹ்விடமிருந்து உங்களைப் பாதுகாப்பவர் யார்? அல்லது, அவன் உங்களுக்கு கருணை புரிய நாடினால் (அதை யாரால் தடுத்து நிறுத்த முடியும்?). அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு பொறுப்பாளரையோ உதவியாளரையோ அவர்கள் காணமாட்டார்கள்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
قَدْ یَعْلَمُ اللّٰهُ الْمُعَوِّقِیْنَ مِنْكُمْ وَالْقَآىِٕلِیْنَ لِاِخْوَانِهِمْ هَلُمَّ اِلَیْنَا ۚ— وَلَا یَاْتُوْنَ الْبَاْسَ اِلَّا قَلِیْلًا ۟ۙ
உங்களில் (நபியை விட்டு மக்களை) தடுப்பவர்களையும்; தங்கள் சகோதரர்களுக்கு, “எங்களிடம் வந்துவிடுங்கள் (நபியுடன் போருக்கு செல்லாதீர்கள்)” என்று சொல்பவர்களையும் அல்லாஹ் நன்கறிவான். அவர்கள் மிகக் குறைவாகவே தவிர போருக்கு வரமாட்டார்கள்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
اَشِحَّةً عَلَیْكُمْ ۖۚ— فَاِذَا جَآءَ الْخَوْفُ رَاَیْتَهُمْ یَنْظُرُوْنَ اِلَیْكَ تَدُوْرُ اَعْیُنُهُمْ كَالَّذِیْ یُغْشٰی عَلَیْهِ مِنَ الْمَوْتِ ۚ— فَاِذَا ذَهَبَ الْخَوْفُ سَلَقُوْكُمْ بِاَلْسِنَةٍ حِدَادٍ اَشِحَّةً عَلَی الْخَیْرِ ؕ— اُولٰٓىِٕكَ لَمْ یُؤْمِنُوْا فَاَحْبَطَ اللّٰهُ اَعْمَالَهُمْ ؕ— وَكَانَ ذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرًا ۟
அவர்கள் உங்கள் விஷயத்தில் (உங்களுக்கு உதவாமல்) மிகக் கருமிகளாக இருக்கிறார்கள். ஆக, (போர் பற்றிய) பயம் (அவர்களுக்கு) வந்தால், மரண (பய)த்தால் மயக்கம் அடைபவனைப் போல் அவர்களது கண்கள் சுழலக்கூடிய நிலையில், உம் பக்கம் அவர்கள் பார்ப்பவர்களாக அவர்களை நீர் காண்பீர். ஆக, (எதிரிகளைப் பற்றி) பயம் சென்றுவிட்டால் செல்வத்தின் மீது பேராசையுடையவர்களாக கூர்மையான நாவுகளினால் (அத்துமீறி) உங்களுக்கு தொந்தரவு தருகிறார்கள் (-உங்களை ஏசுகிறார்கள்). அவர்கள் (உண்மையில்) நம்பிக்கை கொள்ளவில்லை. ஆகவே, அவர்களின் அமல்களை அல்லாஹ் பாழ்ப்படுத்திவிட்டான். இது அல்லாஹ்விற்கு மிக எளிதாக இருக்கிறது.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
یَحْسَبُوْنَ الْاَحْزَابَ لَمْ یَذْهَبُوْا ۚ— وَاِنْ یَّاْتِ الْاَحْزَابُ یَوَدُّوْا لَوْ اَنَّهُمْ بَادُوْنَ فِی الْاَعْرَابِ یَسْاَلُوْنَ عَنْ اَنْۢبَآىِٕكُمْ ؕ— وَلَوْ كَانُوْا فِیْكُمْ مَّا قٰتَلُوْۤا اِلَّا قَلِیْلًا ۟۠
(நயவஞ்சகர்களான) அவர்கள் (முஸ்லிம்கள் மீது போர் தொடுத்து வந்த எதிரி) ராணுவங்கள் (முஸ்லிம்களை அழிக்காமல் தங்கள் ஊர்களுக்கு திரும்ப) செல்லமாட்டார்கள் என்று எண்ணுகிறார்கள். இன்னும், அந்த ராணுவங்கள் (மீண்டும் ஒருமுறை) வந்தால் நிச்சயமாக கிராமவாசிகளுடன் கிராமங்களில் அவர்கள் தங்கி இருந்திருக்க வேண்டுமே என்று ஆசைப்படுகிறார்கள். உங்க(ளுக்கு என்ன ஆனது என்று உங்க)ள் செய்திகளைப் பற்றி அவர்கள் விசாரிக்கிறார்கள். அவர்கள் உங்களுடன் (போருக்கு வந்து) இருந்தாலும் (எதிரிகளிடம்) மிகக் குறைவாகவே தவிர போர் புரிந்திருக்க மாட்டார்கள்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
لَقَدْ كَانَ لَكُمْ فِیْ رَسُوْلِ اللّٰهِ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ یَرْجُوا اللّٰهَ وَالْیَوْمَ الْاٰخِرَ وَذَكَرَ اللّٰهَ كَثِیْرًا ۟ؕ
அல்லாஹ்வின் தூதரில் உங்களுக்கு - அல்லாஹ்வையும் மறுமை நாளையும் பயந்தவராக இருப்பவருக்கு - திட்டவட்டமாக அழகிய முன்மாதிரி இருக்கிறது. இன்னும், அவர் அல்லாஹ்வை அதிகம் நினைவு கூர்பவராகவும் இருப்பார்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
وَلَمَّا رَاَ الْمُؤْمِنُوْنَ الْاَحْزَابَ ۙ— قَالُوْا هٰذَا مَا وَعَدَنَا اللّٰهُ وَرَسُوْلُهٗ وَصَدَقَ اللّٰهُ وَرَسُوْلُهٗ ؗ— وَمَا زَادَهُمْ اِلَّاۤ اِیْمَانًا وَّتَسْلِیْمًا ۟ؕ
இன்னும், நம்பிக்கையாளர்கள் (எதிரி) ராணுவங்களைப் பார்த்தபோது, “அல்லாஹ்வும் அவனது தூதரும் எங்களுக்கு வாக்களித்ததாகும் இது; அல்லாஹ்வும் அவனது தூதரும் உண்மை உரைத்தார்கள்” என்று கூறினார்கள். அ(ந்த எதிரி ராணுவங்களின் வருகையான)து, (அல்லாஹ்வின் மீது) நம்பிக்கையையும் (அல்லாஹ்வின் கட்டளைக்கு) கட்டுப்படுதலையும் தவிர அவர்களுக்கு அதிகப்படுத்தவில்லை.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
مِنَ الْمُؤْمِنِیْنَ رِجَالٌ صَدَقُوْا مَا عَاهَدُوا اللّٰهَ عَلَیْهِ ۚ— فَمِنْهُمْ مَّنْ قَضٰی نَحْبَهٗ وَمِنْهُمْ مَّنْ یَّنْتَظِرُ ۖؗ— وَمَا بَدَّلُوْا تَبْدِیْلًا ۟ۙ
அல்லாஹ்விடம் எதை ஒப்பந்தம் செய்தார்களோ அதை உண்மைப்படுத்திய ஆண்களும் நம்பிக்கையாளர்களில் இருக்கிறார்கள். (வீர மரணம் அடைய வேண்டும் என்ற) தனது நேர்ச்சையை நிறைவேற்றியவரும் அவர்களில் உண்டு. (வீர மரணத்தை) எதிர்பார்த்து இருப்பவரும் அவர்களில் உண்டு. அவர்கள் (தங்கள் ஒப்பந்தத்தை) மாற்றிவிடவில்லை.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
لِّیَجْزِیَ اللّٰهُ الصّٰدِقِیْنَ بِصِدْقِهِمْ وَیُعَذِّبَ الْمُنٰفِقِیْنَ اِنْ شَآءَ اَوْ یَتُوْبَ عَلَیْهِمْ ؕ— اِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِیْمًا ۟ۚ
இறுதியாக, அல்லாஹ் உண்மையாளர்களுக்கு அவர்களின் உண்மைக்கு நற்கூலி தருவான். இன்னும், நயவஞ்சகர்களை அவன் நாடினால் தண்டிப்பான். அல்லது, அவர்கள் திருந்தும்படி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, மகா கருணையாளனாக இருக்கிறான்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
وَرَدَّ اللّٰهُ الَّذِیْنَ كَفَرُوْا بِغَیْظِهِمْ لَمْ یَنَالُوْا خَیْرًا ؕ— وَكَفَی اللّٰهُ الْمُؤْمِنِیْنَ الْقِتَالَ ؕ— وَكَانَ اللّٰهُ قَوِیًّا عَزِیْزًا ۟ۚ
இன்னும், நிராகரிப்பாளர்களை அவர்களது கோபத்துடன் அல்லாஹ் திருப்பி விட்டான். அவர்கள் (இந்தப் போரினால்) எந்த நன்மையையும் அடையவில்லை. இன்னும், (நம்பிக்கையாளர்கள் கடுமையாக) சண்டை செய்(து அதிகமான இழப்புகள் அவர்களுக்கு ஏற்படு)வதை விட்டும் நம்பிக்கையாளர்களை அல்லாஹ் பாதுகாத்தான். அல்லாஹ் மகா வலிமைமிக்கவனாக, மிகைத்தவனாக இருக்கிறான்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
وَاَنْزَلَ الَّذِیْنَ ظَاهَرُوْهُمْ مِّنْ اَهْلِ الْكِتٰبِ مِنْ صَیَاصِیْهِمْ وَقَذَفَ فِیْ قُلُوْبِهِمُ الرُّعْبَ فَرِیْقًا تَقْتُلُوْنَ وَتَاْسِرُوْنَ فَرِیْقًا ۟ۚ
இன்னும், வேதக்காரர்களில் இருந்து அவர்களுக்கு (-நிராகரிப்பாளர்களுக்கு) உதவியவர்களை அவர்களின் கோட்டைகளில் இருந்து அல்லாஹ் இறக்கினான். இன்னும், அவர்களின் உள்ளங்களில் திகிலை போட்டான். (அவர்களில்) ஒரு பிரிவினரை நீங்கள் கொன்றீர்கள். இன்னும், ஒரு பிரிவினரை சிறைப் பிடித்தீர்கள்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
وَاَوْرَثَكُمْ اَرْضَهُمْ وَدِیَارَهُمْ وَاَمْوَالَهُمْ وَاَرْضًا لَّمْ تَطَـُٔوْهَا ؕ— وَكَانَ اللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرًا ۟۠
இன்னும், அவர்களின் பூமியையும் அவர்களின் இல்லங்களையும் அவர்களின் செல்வங்களையும் நீங்கள் (உங்கள் பாதங்களால்) மிதிக்காத ஒரு பூமியையும் (அல்லாஹ்) உங்களுக்கு சொந்தமாக்கி கொடுத்தான். அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கிறான்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
یٰۤاَیُّهَا النَّبِیُّ قُلْ لِّاَزْوَاجِكَ اِنْ كُنْتُنَّ تُرِدْنَ الْحَیٰوةَ الدُّنْیَا وَزِیْنَتَهَا فَتَعَالَیْنَ اُمَتِّعْكُنَّ وَاُسَرِّحْكُنَّ سَرَاحًا جَمِیْلًا ۟
நபியே! உமது மனைவிகளுக்கு சொல்வீராக! “உலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் நீங்கள் விரும்புகிறவர்களாக இருந்தால் வாருங்கள்! உங்களுக்கு செல்வம் தருகின்றேன்; அழகிய முறையில் உங்களை விட்டு விடுகின்றேன்.”
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
وَاِنْ كُنْتُنَّ تُرِدْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَالدَّارَ الْاٰخِرَةَ فَاِنَّ اللّٰهَ اَعَدَّ لِلْمُحْسِنٰتِ مِنْكُنَّ اَجْرًا عَظِیْمًا ۟
நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் (சொர்க்கமாகிய) மறுமை வீட்டையும் விரும்பக் கூடியவர்களாக இருந்தால் நிச்சயமாக அல்லாஹ் நல்லவர்களாகிய உங்களுக்கு மகத்தான கூலியை தயார்படுத்தி வைத்திருக்கிறான்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
یٰنِسَآءَ النَّبِیِّ مَنْ یَّاْتِ مِنْكُنَّ بِفَاحِشَةٍ مُّبَیِّنَةٍ یُّضٰعَفْ لَهَا الْعَذَابُ ضِعْفَیْنِ ؕ— وَكَانَ ذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرًا ۟
நபியின் மனைவிமார்களே! உங்களில் யார் தெளிவான மானக்கேடான செயலை செய்வாரோ அவருக்கு தண்டனை இரு மடங்காக ஆக்கப்படும். அ(வ்வாறு தண்டனை கொடுப்ப)து அல்லாஹ்விற்கு இலகுவானதாக இருக்கிறது.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
وَمَنْ یَّقْنُتْ مِنْكُنَّ لِلّٰهِ وَرَسُوْلِهٖ وَتَعْمَلْ صَالِحًا نُّؤْتِهَاۤ اَجْرَهَا مَرَّتَیْنِ ۙ— وَاَعْتَدْنَا لَهَا رِزْقًا كَرِیْمًا ۟
(நபியின் மனைவிகளே!) உங்களில் யார் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் பணிந்து (கீழ்ப்படிந்து) நடப்பாரோ, இன்னும் (மார்க்கம் கூறிய முறைப்படி) நன்மையை செய்வாரோ அவருக்கு அவரது கூலியை இருமுறை நாம் கொடுப்போம். இன்னும், அவருக்கு கண்ணியமான கூலியை (அவருக்காக) ஏற்படுத்தி வைத்திருக்கிறோம்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
یٰنِسَآءَ النَّبِیِّ لَسْتُنَّ كَاَحَدٍ مِّنَ النِّسَآءِ اِنِ اتَّقَیْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَیَطْمَعَ الَّذِیْ فِیْ قَلْبِهٖ مَرَضٌ وَّقُلْنَ قَوْلًا مَّعْرُوْفًا ۟ۚ
நபியின் மனைவிகளே! நீங்கள் (பொதுவான) பெண்களில் ஒருவரைப் போன்று இல்லை, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி (மார்க்கத்தை பின்பற்றி) நடந்தால் (தகுதியால் மிக மேலானவர்களாக இருப்பீர்கள்). ஆகவே, (அந்நிய ஆண்களுடன் குழைந்து) மென்மையாகப் பேசாதீர்கள். அப்படிப் பேசினால் தனது உள்ளத்தில் நோய் உள்ளவன் (உங்கள் மீது) தப்பான ஆசைப்படுவான். ஆகவே, சரியான (முறையான) பேச்சைப் பேசுங்கள்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
وَقَرْنَ فِیْ بُیُوْتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِیَّةِ الْاُوْلٰی وَاَقِمْنَ الصَّلٰوةَ وَاٰتِیْنَ الزَّكٰوةَ وَاَطِعْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ ؕ— اِنَّمَا یُرِیْدُ اللّٰهُ لِیُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ اَهْلَ الْبَیْتِ وَیُطَهِّرَكُمْ تَطْهِیْرًا ۟ۚ
இன்னும், உங்கள் இல்லங்களில் தங்கியிருங்கள். (அவசிய தேவை இன்றி வெளி இடங்களுக்கு செல்லாதீர்கள்.) முந்திய அறியாமைக் காலத்தில் அலங்காரங்களை வெளிப்படுத்தி(யவர்களாக வெளியே சுற்றி)யது போன்று நீங்கள் அலங்காரங்களை வெளிப்படுத்தாதீர்கள். (முகத்தை திறந்தவர்களாக வெளியே செல்லாதீர்கள்.) இன்னும், தொழுகையை நிலைநிறுத்துங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்! (நபியின்) வீட்டார்களே! அல்லாஹ் நாடுவதெல்லாம் உங்களை விட்டும் அசுத்தத்தை (பாவத்தை) போக்குவதற்கும் உங்களை முற்றிலும் சுத்தப்படுத்துவதற்கும்தான்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
وَاذْكُرْنَ مَا یُتْلٰی فِیْ بُیُوْتِكُنَّ مِنْ اٰیٰتِ اللّٰهِ وَالْحِكْمَةِ ؕ— اِنَّ اللّٰهَ كَانَ لَطِیْفًا خَبِیْرًا ۟۠
இன்னும், படிக்கப்பட வேண்டிய அல்லாஹ்வின் வேத வசனங்களையும் (நபியின் சுன்னாவாகிய) ஞானத்தையும் நீங்கள் உங்கள் இல்லங்களில் (படித்து) மனனம் செய்யுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் மிக கருணையாளனாக ஆழ்ந்தறிபவனாக இருக்கிறான்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
اِنَّ الْمُسْلِمِیْنَ وَالْمُسْلِمٰتِ وَالْمُؤْمِنِیْنَ وَالْمُؤْمِنٰتِ وَالْقٰنِتِیْنَ وَالْقٰنِتٰتِ وَالصّٰدِقِیْنَ وَالصّٰدِقٰتِ وَالصّٰبِرِیْنَ وَالصّٰبِرٰتِ وَالْخٰشِعِیْنَ وَالْخٰشِعٰتِ وَالْمُتَصَدِّقِیْنَ وَالْمُتَصَدِّقٰتِ وَالصَّآىِٕمِیْنَ وَالصّٰٓىِٕمٰتِ وَالْحٰفِظِیْنَ فُرُوْجَهُمْ وَالْحٰفِظٰتِ وَالذّٰكِرِیْنَ اللّٰهَ كَثِیْرًا وَّالذّٰكِرٰتِ ۙ— اَعَدَّ اللّٰهُ لَهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِیْمًا ۟
நிச்சயமாக முஸ்லிமான ஆண்கள், முஸ்லிமான பெண்கள், முஃமினான ஆண்கள், முஃமினான பெண்கள், (மார்க்க சட்டங்களுக்கு) கீழ்ப்படிந்து நடக்கும் ஆண்கள், கீழ்ப்படிந்து நடக்கும் பெண்கள், உண்மையான ஆண்கள், உண்மையான பெண்கள், பொறுமையான ஆண்கள், பொறுமையான பெண்கள், உள்ளச்சமுடைய ஆண்கள், உள்ளச்சமுடைய பெண்கள், தர்மம் செய்கிற ஆண்கள், தர்மம் செய்கிற பெண்கள், நோன்பாளியான ஆண்கள், நோன்பாளியான பெண்கள், தங்கள் மறைவிடங்களை பாதுகாக்கிற ஆண்கள், தங்கள் மறைவிடங்களை பாதுகாக்கிற பெண்கள், அல்லாஹ்வை அதிகம் நினைவு கூர்கின்ற ஆண்கள், நினைவு கூர்கின்ற பெண்கள் - இவர்களுக்கு மன்னிப்பையும் மகத்தான கூலியையும் அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கிறான்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَّلَا مُؤْمِنَةٍ اِذَا قَضَی اللّٰهُ وَرَسُوْلُهٗۤ اَمْرًا اَنْ یَّكُوْنَ لَهُمُ الْخِیَرَةُ مِنْ اَمْرِهِمْ ؕ— وَمَنْ یَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ ضَلَّ ضَلٰلًا مُّبِیْنًا ۟
நம்பிக்கை கொண்ட ஆணுக்கும் நம்பிக்கை கொண்ட பெண்ணுக்கும் தங்களது காரியத்தில் அவர்களுக்கு என்று ஒரு விருப்பம் இருப்பது ஆகுமானதல்ல, அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவுசெய்துவிட்டால். ஆக, யார் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் மாறுசெய்வாரோ அவர் திட்டமாக தெளிவாக வழிகெட்டுவிட்டார்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
وَاِذْ تَقُوْلُ لِلَّذِیْۤ اَنْعَمَ اللّٰهُ عَلَیْهِ وَاَنْعَمْتَ عَلَیْهِ اَمْسِكْ عَلَیْكَ زَوْجَكَ وَاتَّقِ اللّٰهَ وَتُخْفِیْ فِیْ نَفْسِكَ مَا اللّٰهُ مُبْدِیْهِ وَتَخْشَی النَّاسَ ۚ— وَاللّٰهُ اَحَقُّ اَنْ تَخْشٰىهُ ؕ— فَلَمَّا قَضٰی زَیْدٌ مِّنْهَا وَطَرًا زَوَّجْنٰكَهَا لِكَیْ لَا یَكُوْنَ عَلَی الْمُؤْمِنِیْنَ حَرَجٌ فِیْۤ اَزْوَاجِ اَدْعِیَآىِٕهِمْ اِذَا قَضَوْا مِنْهُنَّ وَطَرًا ؕ— وَكَانَ اَمْرُ اللّٰهِ مَفْعُوْلًا ۟
எவர் மீது அல்லாஹ் அருள் புரிந்தானோ; இன்னும், நீர் அருள் புரிந்தீரோ அவரை நோக்கி, “நீ உன் மனைவியை உன்னுடன் வைத்துக்கொள்! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்!” என்று நீர் கூறிய சமயத்தை நினைவு கூருவீராக! இன்னும், அல்லாஹ் எதை வெளிப்படுத்தக் கூடியவனாக இருக்கிறானோ அதை உமது உள்ளத்தில் நீர் மறைக்கிறீர். இன்னும், மக்களை பயப்படுகிறீர். அல்லாஹ்தான், நீர் அவனை பயப்படுவதற்கு மிகத் தகுதியானவன். ஸைது, அவளிடம் (திருமணத்) தேவையை முடித்து (அவளை விவாகரத்து செய்து) விட்டபோது அவளை உமக்கு நாம் மணமுடித்து வைத்தோம். இது ஏனெனில், நம்பிக்கையாளர்களுக்கு அவர்களது வளர்ப்பு பிள்ளைகளின் மனைவிகள் விஷயத்தில், அவர்களிடம் (-அந்த மனைவிகளிடம்) அவர்கள் (-அந்த வளர்ப்புப் பிள்ளைகள் திருமணத்) தேவையை முடித்து (விவாகரத்து செய்து) விட்டால் அப்போது (அப்பெண்களை வளர்ப்புப் பிள்ளைகளின் தந்தைகள் திருமணம் முடித்துக் கொள்வதில்) சிரமம் இருக்கக்கூடாது என்பதற்காக ஆகும். அல்லாஹ்வின் காரியம் (கண்டிப்பாக) நடக்கக்கூடியதாக இருக்கிறது.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
مَا كَانَ عَلَی النَّبِیِّ مِنْ حَرَجٍ فِیْمَا فَرَضَ اللّٰهُ لَهٗ ؕ— سُنَّةَ اللّٰهِ فِی الَّذِیْنَ خَلَوْا مِنْ قَبْلُ ؕ— وَكَانَ اَمْرُ اللّٰهِ قَدَرًا مَّقْدُوْرَا ۟ؗۙ
நபியின் மீது, அல்லாஹ் அவருக்கு கடமையாக்கியதை செய்வதில் அறவே குற்றம் இருக்கவில்லை. இதற்கு முன்னர் சென்றவர்களில் அல்லாஹ்வின் வழிமுறையை (நபியே! உமக்கும்) வழிமுறையாக ஆக்கப்பட்டது. அல்லாஹ்வின் கட்டளை நிறைவேற்றப்படுகிற தீர்ப்பாக இருக்கிறது.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
١لَّذِیْنَ یُبَلِّغُوْنَ رِسٰلٰتِ اللّٰهِ وَیَخْشَوْنَهٗ وَلَا یَخْشَوْنَ اَحَدًا اِلَّا اللّٰهَ ؕ— وَكَفٰی بِاللّٰهِ حَسِیْبًا ۟
அவர்கள் (-அந்தத் தூதர்கள்) அல்லாஹ்வின் தூதுச் செய்திகளை - சட்டங்களை எடுத்துச் சொல்வார்கள்; இன்னும் அவனை பயப்படுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர ஒருவரையும் பயப்படமாட்டார்கள். (அடியார்கள் அனைவரையும்) விசாரிப்பவனாக அல்லாஹ்வே போதுமானவன்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
مَا كَانَ مُحَمَّدٌ اَبَاۤ اَحَدٍ مِّنْ رِّجَالِكُمْ وَلٰكِنْ رَّسُوْلَ اللّٰهِ وَخَاتَمَ النَّبِیّٖنَ ؕ— وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمًا ۟۠
முஹம்மத் உங்கள் ஆண்களில் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. என்றாலும், அவர் அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார்களின் இறுதி முத்திரையாகவும் இருக்கிறார். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اذْكُرُوا اللّٰهَ ذِكْرًا كَثِیْرًا ۟ۙ
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை மிக அதிகம் நினைவு கூருங்கள்!
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
وَّسَبِّحُوْهُ بُكْرَةً وَّاَصِیْلًا ۟
இன்னும், அவனை காலையிலும் மாலையிலும் துதியுங்கள். (ஸுப்ஹு, இன்னும் அஸ்ர் தொழுகைகளை நிறைவேற்றுங்கள்.)
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
هُوَ الَّذِیْ یُصَلِّیْ عَلَیْكُمْ وَمَلٰٓىِٕكَتُهٗ لِیُخْرِجَكُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَی النُّوْرِ ؕ— وَكَانَ بِالْمُؤْمِنِیْنَ رَحِیْمًا ۟
அவன் இருள்களில் இருந்து வெளிச்சத்தின் பக்கம் உங்களை வெளியேற்றுவதற்காக உங்கள் மீது விசேஷமாக அருள் புரிகிறான். இன்னும், அவனது வானவர்கள் (உங்களுக்காக அல்லாஹ்விடம்) பிரார்த்திக்கிறார்கள். அவன் நம்பிக்கையாளர்கள் மீது மகா கருணையாளனாக இருக்கிறான்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
تَحِیَّتُهُمْ یَوْمَ یَلْقَوْنَهٗ سَلٰمٌ ۖۚ— وَّاَعَدَّ لَهُمْ اَجْرًا كَرِیْمًا ۟
அவர்கள் அவனை சந்திக்கிற நாளில் அவர்களது முகமன் ஸலாம் ஆகும். இன்னும், அவன் அவர்களுக்கு கண்ணியமான கூலியை ஏற்படுத்தி வைத்திருக்கிறான்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
یٰۤاَیُّهَا النَّبِیُّ اِنَّاۤ اَرْسَلْنٰكَ شَاهِدًا وَّمُبَشِّرًا وَّنَذِیْرًا ۟ۙ
நபியே! நிச்சயமாக நாம் உம்மை சாட்சியாளராகவும் நற்செய்தி கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிப்பவராகவும் அனுப்பினோம்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
وَّدَاعِیًا اِلَی اللّٰهِ بِاِذْنِهٖ وَسِرَاجًا مُّنِیْرًا ۟
இன்னும், அல்லாஹ்வின் பக்கம் அவனது அனுமதிகொண்டு அழைப்பவராகவும் பிரகாசிக்கின்ற விளக்காகவும் (நாம் உம்மை அனுப்பினோம்.)
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
وَبَشِّرِ الْمُؤْمِنِیْنَ بِاَنَّ لَهُمْ مِّنَ اللّٰهِ فَضْلًا كَبِیْرًا ۟
(நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக! “நிச்சயமாக அவர்களுக்கு அல்லாஹ்விடம் மிகப் பெரிய அருள் இருக்கிறது.”
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
وَلَا تُطِعِ الْكٰفِرِیْنَ وَالْمُنٰفِقِیْنَ وَدَعْ اَذٰىهُمْ وَتَوَكَّلْ عَلَی اللّٰهِ ؕ— وَكَفٰی بِاللّٰهِ وَكِیْلًا ۟
(நபியே!) நிராகரிப்பாளர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் கீழ்ப்படியாதீர்! அவர்களின் தொந்தரவை (கண்டு கொள்ளாமல்) விட்டுவிடுவீராக! இன்னும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை(த்து அவனை மட்டும் சார்ந்து இரு)ப்பீராக! பொறுப்பாளனாக அல்லாஹ்வே போதுமானவன்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا نَكَحْتُمُ الْمُؤْمِنٰتِ ثُمَّ طَلَّقْتُمُوْهُنَّ مِنْ قَبْلِ اَنْ تَمَسُّوْهُنَّ فَمَا لَكُمْ عَلَیْهِنَّ مِنْ عِدَّةٍ تَعْتَدُّوْنَهَا ۚ— فَمَتِّعُوْهُنَّ وَسَرِّحُوْهُنَّ سَرَاحًا جَمِیْلًا ۟
நம்பிக்கையாளர்களே! நம்பிக்கைகொண்ட பெண்களை நீங்கள் திருமணம் முடித்தால், பிறகு அவர்களுடன் நீங்கள் உறவு வைப்பதற்கு முன்னர் அவர்களை நீங்கள் விவாகரத்து செய்துவிட்டால் நீங்கள் கணக்கிட வேண்டிய இத்தா – தவணைக் காலம் ஏதும் உங்களுக்கு அவர்கள் மீது (கடமை) இல்லை. ஆக, (நீங்கள் விவாகரத்து செய்யும்போது) அவர்களுக்கு (உங்கள் வசதிக்கு ஏற்ப) செல்வத்தைக் கொடுங்கள்! இன்னும், அழகிய முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
یٰۤاَیُّهَا النَّبِیُّ اِنَّاۤ اَحْلَلْنَا لَكَ اَزْوَاجَكَ الّٰتِیْۤ اٰتَیْتَ اُجُوْرَهُنَّ وَمَا مَلَكَتْ یَمِیْنُكَ مِمَّاۤ اَفَآءَ اللّٰهُ عَلَیْكَ وَبَنٰتِ عَمِّكَ وَبَنٰتِ عَمّٰتِكَ وَبَنٰتِ خَالِكَ وَبَنٰتِ خٰلٰتِكَ الّٰتِیْ هَاجَرْنَ مَعَكَ ؗ— وَامْرَاَةً مُّؤْمِنَةً اِنْ وَّهَبَتْ نَفْسَهَا لِلنَّبِیِّ اِنْ اَرَادَ النَّبِیُّ اَنْ یَّسْتَنْكِحَهَا ۗ— خَالِصَةً لَّكَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِیْنَ ؕ— قَدْ عَلِمْنَا مَا فَرَضْنَا عَلَیْهِمْ فِیْۤ اَزْوَاجِهِمْ وَمَا مَلَكَتْ اَیْمَانُهُمْ لِكَیْلَا یَكُوْنَ عَلَیْكَ حَرَجٌ ؕ— وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟
நபியே! நீர் அவர்களுக்கு (மஹ்ர் என்ற) திருமணக் கொடைகளை கொடுத்(து மணமுடித்)த உமது மனைவிகளையும் அல்லாஹ் உமக்கு போரில் கொடுத்த அடிமைப் பெண்களில் உமது வலக்கரம் சொந்தமாக்கியவர்களையும் (-உமக்கு என்று வைத்துக்கொண்ட பெண்களையும்) உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்த உமது தந்தையின் உடன் பிறந்தவர்களின் மகள்களையும் உமது மாமியின் மகள்களையும் உமது தாய் மாமாவின் மகள்களையும் உமது தாயின் உடன்பிறந்த சகோதரிகளின் மகள்களையும் நிச்சயமாக நாம் உமக்கு (நீர் அவர்களை மணமுடிப்பதற்கு) ஆகுமாக்கினோம். இன்னும், ஒரு முஃமினான பெண், தன்னை நபிக்கு அன்பளிப்பு செய்தால், நபியும் அவளை மணமுடிக்க நாடினால் அந்த பெண்ணையும் உமக்கு ஆகுமாக்கினோம். இது (-மஹ்ர் இன்றி மணமுடிப்பது எல்லா) முஃமின்களுக்கும் அன்றி உமக்கு மட்டும் பிரத்தியோகமான சலுகையாகும். அவர்கள் மீது (-நம்பிக்கையாளர்கள் மீது) அவர்களின் மனைவிமார்கள் இன்னும் அவர்களது வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்கள் (-அடிமைப் பெண்கள்) விஷயத்தில் நாம் கடமையாக்கியதை திட்டமாக நாம் அறிவோம். (நபியே!) உமக்கு சிரமம் இருக்கக்கூடாது என்பதற்காக (நாம் மேற்கூறப்பட்ட பெண்களை மணமுடிப்பதையும் தன்னை அன்பளிப்புச் செய்யும் பெண்ணை மஹ்ரின்றி மணமுடிப்பதையும் உமக்கு ஆகுமாக்கினோம்). அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, பெரும் கருணையாளனாக இருக்கிறான்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
تُرْجِیْ مَنْ تَشَآءُ مِنْهُنَّ وَتُـْٔوِیْۤ اِلَیْكَ مَنْ تَشَآءُ ؕ— وَمَنِ ابْتَغَیْتَ مِمَّنْ عَزَلْتَ فَلَا جُنَاحَ عَلَیْكَ ؕ— ذٰلِكَ اَدْنٰۤی اَنْ تَقَرَّ اَعْیُنُهُنَّ وَلَا یَحْزَنَّ وَیَرْضَیْنَ بِمَاۤ اٰتَیْتَهُنَّ كُلُّهُنَّ ؕ— وَاللّٰهُ یَعْلَمُ مَا فِیْ قُلُوْبِكُمْ ؕ— وَكَانَ اللّٰهُ عَلِیْمًا حَلِیْمًا ۟
(நபியே!) அவர்களில் (-உமது மனைவிகளில்) நீர் நாடுபவரை தள்ளிவைப்பீராக! இன்னும், நீர் நாடுபவரை உம் பக்கம் சேர்த்துக்கொள்வீராக! நீர் நீக்கிவிட்டவர்களில் யாரை நீர் சேர்க்க விரும்பினீரோ அது உம்மீது குற்றம் இல்லை. இது அவர்களின் கண்கள் குளிர்ச்சி அடைவதற்கும் அவர்கள் கவலைப்படாமல் இருப்பதற்கும் நீர் அவர்களுக்கு கொடுத்ததைக்கொண்டு அவர்கள் எல்லோரும் திருப்தி அடைவதற்கும் நெருக்கமான(து இன்னும் சுலபமான)து ஆகும். அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிவான். அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா சகிப்பாளனாக இருக்கிறான்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
لَا یَحِلُّ لَكَ النِّسَآءُ مِنْ بَعْدُ وَلَاۤ اَنْ تَبَدَّلَ بِهِنَّ مِنْ اَزْوَاجٍ وَّلَوْ اَعْجَبَكَ حُسْنُهُنَّ اِلَّا مَا مَلَكَتْ یَمِیْنُكَ ؕ— وَكَانَ اللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ رَّقِیْبًا ۟۠
(இந்த அத்தியாயத்தின் ஐம்பதாவது வசனத்தில் கூறப்பட்ட பெண்களுக்கு) பின்னர் (வேறு) பெண்கள் உமக்கு ஆகுமாக மாட்டார்கள். இன்னும், இவர்களுக்கு பதிலாக (வேறு) பெண்களை நீர் மாற்றுவதும் (உமக்கு) ஆகுமானதல்ல, அவர்களின் அழகு உம்மைக் கவர்ந்தாலும் சரியே. உமது வலக்கரம் சொந்தமாக்கிய பெண்களைத் தவிர. (அந்த அடிமைப் பெண்கள் உமக்கு ஆகுமானவர்களே.) அல்லாஹ் எல்லாவற்றையும் கண்காணிப்பவனாக இருக்கிறான்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُیُوْتَ النَّبِیِّ اِلَّاۤ اَنْ یُّؤْذَنَ لَكُمْ اِلٰی طَعَامٍ غَیْرَ نٰظِرِیْنَ اِنٰىهُ وَلٰكِنْ اِذَا دُعِیْتُمْ فَادْخُلُوْا فَاِذَا طَعِمْتُمْ فَانْتَشِرُوْا وَلَا مُسْتَاْنِسِیْنَ لِحَدِیْثٍ ؕ— اِنَّ ذٰلِكُمْ كَانَ یُؤْذِی النَّبِیَّ فَیَسْتَحْیٖ مِنْكُمْ ؗ— وَاللّٰهُ لَا یَسْتَحْیٖ مِنَ الْحَقِّ ؕ— وَاِذَا سَاَلْتُمُوْهُنَّ مَتَاعًا فَسْـَٔلُوْهُنَّ مِنْ وَّرَآءِ حِجَابٍ ؕ— ذٰلِكُمْ اَطْهَرُ لِقُلُوْبِكُمْ وَقُلُوْبِهِنَّ ؕ— وَمَا كَانَ لَكُمْ اَنْ تُؤْذُوْا رَسُوْلَ اللّٰهِ وَلَاۤ اَنْ تَنْكِحُوْۤا اَزْوَاجَهٗ مِنْ بَعْدِهٖۤ اَبَدًا ؕ— اِنَّ ذٰلِكُمْ كَانَ عِنْدَ اللّٰهِ عَظِیْمًا ۟
நம்பிக்கையாளர்களே! ஓர் உணவின் பக்கம் உங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டால் தவிர நபியின் வீடுகளுக்குள் நுழையாதீர்கள். (அப்படி அழைக்கப்பட்டாலும் முன் கூட்டியே அங்கு சென்று) அது தயாராவதை எதிர்பார்க்காதவர்களாக இருக்க வேண்டும். என்றாலும், நீங்கள் (விருந்துக்கு) அழைக்கப்பட்டால் (வீட்டினுள்) நுழையுங்கள். நீங்கள் சாப்பிட்டுவிட்டால் (வீட்டிலிருந்து) பிரிந்து (சென்று) விடுங்கள். (உணவு உண்ட பின்னர்) பேச்சை புதிதாக ஆரம்பிக்காதவர்களாக இருக்க வேண்டும். நிச்சயமாக இது நபிக்கு தொந்தரவு தரக்கூடியதாக இருக்கும். அவர் உங்களிடம் (அதைக் கூற) வெட்கப்படுவார். அல்லாஹ் சத்தியத்திற்கு வெட்கப்படமாட்டான். நீங்கள் அவர்களிடம் (-நபியின் மனைவிகளிடம் ஏதேனும்) ஒரு பொருளைக் கேட்டால் திரைக்குப் பின்னால் இருந்து அவர்களிடம் கேளுங்கள். அதுதான் உங்கள் உள்ளங்களுக்கும் அவர்களின் உள்ளங்களுக்கும் மிகத் தூய்மையானதாகும். அல்லாஹ்வின் தூதருக்கு நீங்கள் தொந்தரவு தருவதும் அவருக்குப் பின்னர் அவருடைய மனைவிகளை நீங்கள் மணமுடிப்பதும் உங்களுக்கு எப்போதும் ஆகுமானதல்ல. நிச்சயமாக இவை அல்லாஹ்விடம் பெரிய பாவமாக இருக்கிறது.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
اِنْ تُبْدُوْا شَیْـًٔا اَوْ تُخْفُوْهُ فَاِنَّ اللّٰهَ كَانَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمًا ۟
நீங்கள் ஒரு விஷயத்தை வெளிப்படுத்தினால்; அல்லது, அதை மறைத்தால் நிச்சயமாக அல்லாஹ் எல்லா விஷயங்களையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
لَا جُنَاحَ عَلَیْهِنَّ فِیْۤ اٰبَآىِٕهِنَّ وَلَاۤ اَبْنَآىِٕهِنَّ وَلَاۤ اِخْوَانِهِنَّ وَلَاۤ اَبْنَآءِ اِخْوَانِهِنَّ وَلَاۤ اَبْنَآءِ اَخَوٰتِهِنَّ وَلَا نِسَآىِٕهِنَّ وَلَا مَا مَلَكَتْ اَیْمَانُهُنَّ ۚ— وَاتَّقِیْنَ اللّٰهَ ؕ— اِنَّ اللّٰهَ كَانَ عَلٰی كُلِّ شَیْءٍ شَهِیْدًا ۟
அவர்கள் மீது (நபியின் மனைவிகள் மீது, முஃமினான பெண்கள் மீது) தங்கள் தந்தைமார்கள், தங்கள் ஆண் பிள்ளைகள், தங்கள் சகோதரர்கள், தங்கள் சகோதரர்களின் ஆண் பிள்ளைகள், தங்கள் சகோதரிகளின் ஆண் பிள்ளைகள், தங்கள் (சமுதாயத்தைச் சேர்ந்த முஃமினான) பெண்கள், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்கள் விஷயத்தில் (-அவர்கள் முன் பர்தா அணியாமல் இருப்பதில்) குற்றம் இல்லை. (பெண்களே!) அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கு பார்த்தவனாக இருக்கிறான்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
اِنَّ اللّٰهَ وَمَلٰٓىِٕكَتَهٗ یُصَلُّوْنَ عَلَی النَّبِیِّ ؕ— یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَیْهِ وَسَلِّمُوْا تَسْلِیْمًا ۟
நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது மலக்குகளும் நபியை வாழ்த்துகிறார்கள். நம்பிக்கையாளர்களே! நீங்களும் அவரை வாழ்த்துங்கள்! இன்னும் ஸலாம் கூறுங்கள்!
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
اِنَّ الَّذِیْنَ یُؤْذُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ لَعَنَهُمُ اللّٰهُ فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ وَاَعَدَّ لَهُمْ عَذَابًا مُّهِیْنًا ۟
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் தொந்தரவு தருகிறார்களோ அவர்களை இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ் சபிக்கிறான். இன்னும், இழிவுபடுத்துகிற தண்டனையை அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
وَالَّذِیْنَ یُؤْذُوْنَ الْمُؤْمِنِیْنَ وَالْمُؤْمِنٰتِ بِغَیْرِ مَا اكْتَسَبُوْا فَقَدِ احْتَمَلُوْا بُهْتَانًا وَّاِثْمًا مُّبِیْنًا ۟۠
எவர்கள் முஃமினான ஆண்களுக்கும் முஃமினான பெண்களுக்கும் அவர்கள் செய்யாத ஒன்றைக் கொண்டு தொந்தரவு தருவார்களோ அவர்கள் அபாண்டமான பழியையும் தெளிவான பாவத்தையும் திட்டமாக (தங்கள் மேல்) சுமந்து கொண்டார்கள்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
یٰۤاَیُّهَا النَّبِیُّ قُلْ لِّاَزْوَاجِكَ وَبَنٰتِكَ وَنِسَآءِ الْمُؤْمِنِیْنَ یُدْنِیْنَ عَلَیْهِنَّ مِنْ جَلَابِیْبِهِنَّ ؕ— ذٰلِكَ اَدْنٰۤی اَنْ یُّعْرَفْنَ فَلَا یُؤْذَیْنَ ؕ— وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟
நபியே! உமது மனைவிமார்களுக்கும் உமது பெண் பிள்ளைகளுக்கும் முஃமின்களின் பெண்(பிள்ளை)களுக்கும் கூறுவீராக, அவர்கள் தங்கள் பர்தாக்களை தங்கள் மீது போர்த்திக்கொள்வார்கள்! இது அவர்கள் (கண்ணியமானவர்கள் என்று) அறியப்படுவதற்கு மிக சுலபமானதாகும். ஆகவே, அவர்கள் தொந்தரவு செய்யப்பட மாட்டார்கள். அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாக இருக்கிறான்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
لَىِٕنْ لَّمْ یَنْتَهِ الْمُنٰفِقُوْنَ وَالَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ وَّالْمُرْجِفُوْنَ فِی الْمَدِیْنَةِ لَنُغْرِیَنَّكَ بِهِمْ ثُمَّ لَا یُجَاوِرُوْنَكَ فِیْهَاۤ اِلَّا قَلِیْلًا ۟ۚۛ
நயவஞ்சகர்களும் தங்கள் உள்ளங்களில் நோய் (விபச்சார ஆசை) உள்ளவர்களும் மதீனாவில் கெட்ட காரியங்களில் ஈடுபடுபவர்களும் (தங்கள் கெட்ட செயல்களிலிருந்து) விலகவில்லை என்றால் அவர்கள் மீது (உம்மை சாட்டிவிட்டு அவர்களை நீர் தண்டிக்க) உம்மை தூண்டிவிடுவோம். பிறகு, அவர்கள் அதில் உம்முடன் குறைவாகவே தவிர வசிக்க மாட்டார்கள்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
مَّلْعُوْنِیْنَ ۛۚ— اَیْنَمَا ثُقِفُوْۤا اُخِذُوْا وَقُتِّلُوْا تَقْتِیْلًا ۟
அவர்கள் சபிக்கப்பட்டவர்கள். அவர்கள் எங்கு காணப்பட்டாலும் அவர்கள் சிறை பிடிக்கப்பட வேண்டும். இன்னும், முற்றிலும் கொல்லப்படவேண்டும்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
سُنَّةَ اللّٰهِ فِی الَّذِیْنَ خَلَوْا مِنْ قَبْلُ ۚ— وَلَنْ تَجِدَ لِسُنَّةِ اللّٰهِ تَبْدِیْلًا ۟
இதற்கு முன்னர் சென்றவர்களில் அல்லாஹ்வின் நடைமுறைதான் (இவர்கள் விஷயத்திலும்) பின்பற்றப்படும். அல்லாஹ்வின் நடைமுறையில் எவ்வித மாற்றத்தையும் அறவே நீர் காணமாட்டீர்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
یَسْـَٔلُكَ النَّاسُ عَنِ السَّاعَةِ ؕ— قُلْ اِنَّمَا عِلْمُهَا عِنْدَ اللّٰهِ ؕ— وَمَا یُدْرِیْكَ لَعَلَّ السَّاعَةَ تَكُوْنُ قَرِیْبًا ۟
மக்கள் உம்மிடம் மறுமையைப் பற்றி (அது எப்போது வரும் என்று) கேட்கிறார்கள். (நபியே!) கூறுவீராக! அதன் அறிவெல்லாம் அல்லாஹ்விடம்தான் இருக்கிறது. மறுமை சமீபமாக இருக்கக்கூடும் என்பது உமக்குத் தெரியுமா?
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
اِنَّ اللّٰهَ لَعَنَ الْكٰفِرِیْنَ وَاَعَدَّ لَهُمْ سَعِیْرًا ۟ۙ
நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களை (இவ்வுலகில்) சபித்தான். இன்னும், கொழுந்து விட்டெரியும் நரகத்தை அவர்களுக்கு (மறுமையில்) ஏற்படுத்தினான்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ۚ— لَا یَجِدُوْنَ وَلِیًّا وَّلَا نَصِیْرًا ۟ۚ
அவர்கள் அதில் எப்போதும் நிரந்தரமாக தங்கிவிடுவார்கள். (தங்களை பாதுகாக்கும்) பொறுப்பாளரையோ உதவியாளரையோ காணமாட்டார்கள்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
یَوْمَ تُقَلَّبُ وُجُوْهُهُمْ فِی النَّارِ یَقُوْلُوْنَ یٰلَیْتَنَاۤ اَطَعْنَا اللّٰهَ وَاَطَعْنَا الرَّسُوْلَا ۟
அவர்களது முகங்கள் நெருப்பில் புரட்டப்படுகின்ற நாளில் அவர்கள் கூறுவார்கள்: “அல்லாஹ்விற்கு நாங்கள் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே! இன்னும் (அவனது) ரஸூலுக்கு நாங்கள் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே!”
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
وَقَالُوْا رَبَّنَاۤ اِنَّاۤ اَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَآءَنَا فَاَضَلُّوْنَا السَّبِیْلَا ۟
இன்னும், அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும் எங்கள் பெரியவர்களுக்கும் கீழ்ப்படிந்தோம். ஆக, அவர்கள் எங்களை வழிகெடுத்துவிட்டனர்.”
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
رَبَّنَاۤ اٰتِهِمْ ضِعْفَیْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِیْرًا ۟۠
“எங்கள் இறைவா! இருமடங்கு தண்டனையை அவர்களுக்குக் கொடு! இன்னும், அவர்களை பெரிய சாபத்தால் சபிப்பாயாக!”
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَكُوْنُوْا كَالَّذِیْنَ اٰذَوْا مُوْسٰی فَبَرَّاَهُ اللّٰهُ مِمَّا قَالُوْا ؕ— وَكَانَ عِنْدَ اللّٰهِ وَجِیْهًا ۟
நம்பிக்கையாளர்களே! மூஸாவிற்கு தொந்தரவு தந்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்கள் கூறியதிலிருந்து (-அந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து) அல்லாஹ் அவரை நிரபராதியாக்கினான். அவர் அல்லாஹ்விடம் மிக மதிப்பிற்குரியவராக இருந்தார்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَقُوْلُوْا قَوْلًا سَدِیْدًا ۟ۙ
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும், நேர்மையான பேச்சைப் பேசுங்கள்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
یُّصْلِحْ لَكُمْ اَعْمَالَكُمْ وَیَغْفِرْ لَكُمْ ذُنُوْبَكُمْ ؕ— وَمَنْ یُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ فَازَ فَوْزًا عَظِیْمًا ۟
(அல்லாஹ்) உங்கள் அமல்களை உங்களுக்கு சீர்படுத்துவான். இன்னும், உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் யார் கீழ்ப்படிவாரோ திட்டமாக அவர் மகத்தான வெற்றி பெறுவார்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
اِنَّا عَرَضْنَا الْاَمَانَةَ عَلَی السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَالْجِبَالِ فَاَبَیْنَ اَنْ یَّحْمِلْنَهَا وَاَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا الْاِنْسَانُ ؕ— اِنَّهٗ كَانَ ظَلُوْمًا جَهُوْلًا ۟ۙ
நிச்சயமாக நாம் அமானிதத்தை (-மார்க்க சட்டங்களை) வானங்கள், பூமி(கள்), இன்னும் மலைகள் மீது சமர்ப்பித்தோம். அவை அதை சுமப்பதற்கு மறுத்துவிட்டன. இன்னும் அவை அதனால் பயந்தன. ஆனால், மனிதன் அதை சுமந்து கொண்டான். நிச்சயமாக அவன் அநியாயக்காரனாக அறியாதவனாக இருக்கிறான்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
لِّیُعَذِّبَ اللّٰهُ الْمُنٰفِقِیْنَ وَالْمُنٰفِقٰتِ وَالْمُشْرِكِیْنَ وَالْمُشْرِكٰتِ وَیَتُوْبَ اللّٰهُ عَلَی الْمُؤْمِنِیْنَ وَالْمُؤْمِنٰتِ ؕ— وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟۠
நயவஞ்சகமுடைய ஆண்களையும், நயவஞ்சகமுடைய பெண்களையும், இணைவைக்கின்ற ஆண்களையும், இணைவைக்கின்ற பெண்களையும் அல்லாஹ் தண்டனை செய்வதற்காகவும், நம்பிக்கை கொண்ட ஆண்களையும் நம்பிக்கை கொண்ட பெண்களையும் அல்லாஹ் மன்னிப்பதற்காகவும் (அல்லாஹ் தனது கட்டளைகளை மக்களுக்குக் கொடுத்து சோதிக்கிறான்).
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
 
ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: សូរ៉ោះអាល់អះហ្សាប
សន្ទស្សន៍នៃជំពូក លេខ​ទំព័រ
 
ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ - សន្ទស្សន៍នៃការបកប្រែ

ការបកប្រែអត្ថន័យគម្ពីរគួរអានជាភាសាតាមិលដោយលោកអូម៉ើ ស្ហើរុីហ្វ ពិន អាប់ឌុស្សាឡាម

បិទ