ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

លេខ​ទំព័រ:close

external-link copy
19 : 35

وَمَا یَسْتَوِی الْاَعْمٰی وَالْبَصِیْرُ ۟ۙ

குருடரும் பார்வையுடையவரும் சமமாக மாட்டார். info
التفاسير: |

external-link copy
20 : 35

وَلَا الظُّلُمٰتُ وَلَا النُّوْرُ ۟ۙ

இருள்களும் வெளிச்சமும் (சமமாகாது.) info
التفاسير: |

external-link copy
21 : 35

وَلَا الظِّلُّ وَلَا الْحَرُوْرُ ۟ۚ

நிழலும் வெயிலும் (சமமாகாது.) info
التفاسير: |

external-link copy
22 : 35

وَمَا یَسْتَوِی الْاَحْیَآءُ وَلَا الْاَمْوَاتُ ؕ— اِنَّ اللّٰهَ یُسْمِعُ مَنْ یَّشَآءُ ۚ— وَمَاۤ اَنْتَ بِمُسْمِعٍ مَّنْ فِی الْقُبُوْرِ ۟

உயிருள்ளவர்களும் இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுபவரை செவியுற வைப்பான். மண்ணறையில் உள்ளவர்களை செவியுற வைப்பவராக நீர் இல்லை. info
التفاسير: |

external-link copy
23 : 35

اِنْ اَنْتَ اِلَّا نَذِیْرٌ ۟

நீர் இல்லை அச்சமூட்டி எச்சரிப்பவராகவே தவிர. info
التفاسير: |

external-link copy
24 : 35

اِنَّاۤ اَرْسَلْنٰكَ بِالْحَقِّ بَشِیْرًا وَّنَذِیْرًا ؕ— وَاِنْ مِّنْ اُمَّةٍ اِلَّا خَلَا فِیْهَا نَذِیْرٌ ۟

நிச்சயமாக நாம் உம்மை நற்செய்தி கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிப்பவராகவும் சத்தியத்தைக் கொண்டு அனுப்பினோம். எந்த ஒரு சமுதாயமும் இல்லை அவர்களில் அச்சமூட்டி எச்சரிப்பவர் சென்றிருந்தே தவிர. info
التفاسير: |

external-link copy
25 : 35

وَاِنْ یُّكَذِّبُوْكَ فَقَدْ كَذَّبَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ۚ— جَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ وَبِالزُّبُرِ وَبِالْكِتٰبِ الْمُنِیْرِ ۟

இவர்கள் உம்மை பொய்ப்பித்தால், திட்டமாக இவர்களுக்கு முன்னுள்ளவர்களும் (தங்களுக்கு அனுப்பப்பட்டத் தூதர்களை) பொய்ப்பித்துள்ளனர். அவர்களுடையத் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் இன்னும் பிரகாசமான வேதங்களையும் கொண்டு வந்தனர். info
التفاسير: |

external-link copy
26 : 35

ثُمَّ اَخَذْتُ الَّذِیْنَ كَفَرُوْا فَكَیْفَ كَانَ نَكِیْرِ ۟۠

பிறகு, நிராகரித்தவர்களை நான் தண்டித்தேன். ஆக, (அவர்களுக்கு) நான் ஏற்படுத்திய மாற்றம் (-எனது தண்டனை) எப்படி இருந்தது? info
التفاسير: |

external-link copy
27 : 35

اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً ۚ— فَاَخْرَجْنَا بِهٖ ثَمَرٰتٍ مُّخْتَلِفًا اَلْوَانُهَا ؕ— وَمِنَ الْجِبَالِ جُدَدٌ بِیْضٌ وَّحُمْرٌ مُّخْتَلِفٌ اَلْوَانُهَا وَغَرَابِیْبُ سُوْدٌ ۟

(நபியே!) நீர் பார்க்கவில்லையா: நிச்சயமாக அல்லாஹ் மேகத்தில் இருந்து மழையை இறக்கினான். அதன் மூலம் பலதரப்பட்ட நிறங்களை உடைய கனிகளை நாம் உற்பத்தி செய்தோம். இன்னும், மலைகளில் வெண்மையான, சிவப்பான, இன்னும், கடும் கருப்பான பாதைகள் உடையவை உள்ளன. அவற்றின் நிறங்கள் பலதரப்பட்டவையாக உள்ளன. info
التفاسير: |

external-link copy
28 : 35

وَمِنَ النَّاسِ وَالدَّوَآبِّ وَالْاَنْعَامِ مُخْتَلِفٌ اَلْوَانُهٗ كَذٰلِكَ ؕ— اِنَّمَا یَخْشَی اللّٰهَ مِنْ عِبَادِهِ الْعُلَمٰٓؤُا ؕ— اِنَّ اللّٰهَ عَزِیْزٌ غَفُوْرٌ ۟

மக்களிலும், ஊர்வன விலங்குகளிலும், (-பூமியின் மேல் செல்லக் கூடிய பொதுவான மிருகங்களிலும், ஆடு மாடு ஒட்டகம் குதிரை போன்ற) கால்நடைகளிலும் இவ்வாறே (அவற்றின்) நிறங்கள் மாறுபட்டவை உள்ளன. அல்லாஹ்வை அவனது அடியார்களில் அஞ்சுபவர்கள் எல்லாம் அறிஞர்கள்தான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மகா மன்னிப்பாளன் ஆவான். info
التفاسير: |

external-link copy
29 : 35

اِنَّ الَّذِیْنَ یَتْلُوْنَ كِتٰبَ اللّٰهِ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاَنْفَقُوْا مِمَّا رَزَقْنٰهُمْ سِرًّا وَّعَلَانِیَةً یَّرْجُوْنَ تِجَارَةً لَّنْ تَبُوْرَ ۟ۙ

நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ, இன்னும் தொழுகையை நிலைநிறுத்தி, நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து இரகசியமாகவும் வெளிப்படையாகவும் தர்மம் செய்தார்களோ அவர்கள் அறவே அழிந்து போகாத வியாபாரத்தை ஆசைப்படுகிறார்கள். info
التفاسير: |

external-link copy
30 : 35

لِیُوَفِّیَهُمْ اُجُوْرَهُمْ وَیَزِیْدَهُمْ مِّنْ فَضْلِهٖ ؕ— اِنَّهٗ غَفُوْرٌ شَكُوْرٌ ۟

(அல்லாஹ்) அவர்களுக்கு அவர்களின் கூலிகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கும் தனது அருளில் இருந்து மேலும் அவன் அவர்களுக்கு அதிகப்படுத்துவதற்கும் (அவர்கள் அந்த நல்லமல்களைச் செய்தார்கள்). நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளன், நன்றியுடையவன் ஆவான். info
التفاسير: |