Check out the new design

ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ * - សន្ទស្សន៍នៃការបកប្រែ

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាលមូជើទើឡះ   អាយ៉ាត់:
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ یَعْلَمُ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ— مَا یَكُوْنُ مِنْ نَّجْوٰی ثَلٰثَةٍ اِلَّا هُوَ رَابِعُهُمْ وَلَا خَمْسَةٍ اِلَّا هُوَ سَادِسُهُمْ وَلَاۤ اَدْنٰی مِنْ ذٰلِكَ وَلَاۤ اَكْثَرَ اِلَّا هُوَ مَعَهُمْ اَیْنَ مَا كَانُوْا ۚ— ثُمَّ یُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوْا یَوْمَ الْقِیٰمَةِ ؕ— اِنَّ اللّٰهَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟
(நபியே!) நீர் அறியவில்லையா? “நிச்சயமாக அல்லாஹ் வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றையும் நன்கறிவான்: என்று. மூன்று நபர்களின் உரையாடல் இருக்காது, அவன் அவர்களில் நான்காமவனாக இருந்தே தவிர. இன்னும், ஐந்து நபர்களின் உரையாடல் இருக்காது, அவன் அவர்களில் ஆறாவதாக இருந்தே தவிர. இன்னும், அதை விட குறைவாகவோ அதிகமாகவோ இருக்க மாட்டார்கள், அவன் அவர்களுடன் இருந்தே தவிர, அவர்கள் எங்கிருந்தாலும் சரியே! பிறகு, அவன் அவர்களுக்கு அவர்கள் செய்தவற்றை மறுமை நாளில் அறிவிப்பான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் ஆவான்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ نُهُوْا عَنِ النَّجْوٰی ثُمَّ یَعُوْدُوْنَ لِمَا نُهُوْا عَنْهُ وَیَتَنٰجَوْنَ بِالْاِثْمِ وَالْعُدْوَانِ وَمَعْصِیَتِ الرَّسُوْلِ ؗ— وَاِذَا جَآءُوْكَ حَیَّوْكَ بِمَا لَمْ یُحَیِّكَ بِهِ اللّٰهُ ۙ— وَیَقُوْلُوْنَ فِیْۤ اَنْفُسِهِمْ لَوْلَا یُعَذِّبُنَا اللّٰهُ بِمَا نَقُوْلُ ؕ— حَسْبُهُمْ جَهَنَّمُ ۚ— یَصْلَوْنَهَا ۚ— فَبِئْسَ الْمَصِیْرُ ۟
கூடிப் பேசுவதை விட்டும் தடுக்கப்பட்டவர்களை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? (தடுக்கப்பட்ட) பிறகும், அவர்கள் எதிலிருந்து தடுக்கப்பட்டார்களோ அதற்கே அவர்கள் திரும்புகிறார்கள். இன்னும் அவர்கள் பாவத்தையும் எல்லை மீறுவதையும் தூதருக்கு மாறுசெய்வதையும் கூடிப் பேசுகிறார்கள். அவர்கள் உம்மிடம் வந்தால் அல்லாஹ் உமக்கு எதை முகமனாகக் கூறவில்லையோ அதை முகமனாகக் கூறுகிறார்கள். தங்கள் மனதிற்குள், “நாம் சொல்வதைக் கொண்டு அல்லாஹ் நம்மை தண்டனை செய்யாமல் இருக்க வேண்டுமே!” என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு நரகமே போதும். அதில் அவர்கள் எரிந்து பொசுங்குவார்கள். ஆக, மீளுமிடங்களில் அது மிகக் கெட்டதாகும்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا تَنَاجَیْتُمْ فَلَا تَتَنَاجَوْا بِالْاِثْمِ وَالْعُدْوَانِ وَمَعْصِیَتِ الرَّسُوْلِ وَتَنَاجَوْا بِالْبِرِّ وَالتَّقْوٰی ؕ— وَاتَّقُوا اللّٰهَ الَّذِیْۤ اِلَیْهِ تُحْشَرُوْنَ ۟
நம்பிக்கையாளர்களே! நீங்கள் கூடிப்பேசினால் பாவ(மான காரிய)த்தையும் (மார்க்க சட்டங்களை) மீறுவதையும் தூதருக்கு மாறுசெய்வதையும் கூடிப்பேசாதீர்கள். இன்னும், நன்மையான விஷயத்தையும் இறையச்சம் மிகுந்த விஷயத்தையும் கூடிப் பேசுங்கள்! இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அவனிடம்தான் நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
اِنَّمَا النَّجْوٰی مِنَ الشَّیْطٰنِ لِیَحْزُنَ الَّذِیْنَ اٰمَنُوْا وَلَیْسَ بِضَآرِّهِمْ شَیْـًٔا اِلَّا بِاِذْنِ اللّٰهِ ؕ— وَعَلَی اللّٰهِ فَلْیَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ۟
(சந்தேகத்திற்கிடமாக) கூடிப்பேசுவது ஷைத்தான் புறத்திலிருந்து (உங்களுக்கு) தூண்டப்படுகிறது, (ஏனெனில்,) நம்பிக்கை கொண்டவர்களை கவலைப்படுத்துவதற்காக. ஆனால், அது அவர்களுக்கு அறவே தீங்கு செய்வதாக இல்லை, அல்லாஹ்வின் அனுமதி இல்லாமல். இன்னும், நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வை(த்து அவனை மட்டுமே சார்ந்து இரு)க்கவும்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا قِیْلَ لَكُمْ تَفَسَّحُوْا فِی الْمَجٰلِسِ فَافْسَحُوْا یَفْسَحِ اللّٰهُ لَكُمْ ۚ— وَاِذَا قِیْلَ انْشُزُوْا فَانْشُزُوْا یَرْفَعِ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا مِنْكُمْ ۙ— وَالَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ دَرَجٰتٍ ؕ— وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟
நம்பிக்கையாளர்களே! (உங்கள் சபைகளுக்குள் நுழைந்த உங்கள் சகோதரர்களுக்காக) “சபைகளில் (கொஞ்சம்) இடம் கொடுங்கள்!” என்று உங்களுக்கு கூறப்பட்டால் நீங்கள் இடம் கொடுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு (இடத்தில்) விசாலத்தை ஏற்படுத்துவான். இன்னும், (சபைகளில் இருந்து) நீங்கள் புறப்படுங்கள் என்று கூறப்பட்டால் நீங்கள் புறப்பட்டு விடுங்கள்! உங்களில் நம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ் உயர்த்துவான். இன்னும் கல்வி கொடுக்கப்பட்டவர்களை பல தகுதிகள் அவன் உயர்த்துவான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிபவன் ஆவான்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
 
ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាលមូជើទើឡះ
សន្ទស្សន៍នៃជំពូក លេខ​ទំព័រ
 
ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ - សន្ទស្សន៍នៃការបកប្រែ

ដោយលោកអូម៉ើ ស្ហើរុីហ្វ ពិន អាប់ឌុស្សាឡាម

បិទ