Check out the new design

ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ * - សន្ទស្សន៍នៃការបកប្រែ

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាល់អាក់រ៉ហ្វ   អាយ៉ាត់:
اُبَلِّغُكُمْ رِسٰلٰتِ رَبِّیْ وَاَنَا لَكُمْ نَاصِحٌ اَمِیْنٌ ۟
“என் இறைவனின் தூது செய்திகளை உங்களுக்கு எடுத்துரைக்கிறேன். நான் உங்களுக்கு நல்லுபதேசம் செய்பவன், நம்பிக்கைக்குரியவன் ஆவேன்.”
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
اَوَعَجِبْتُمْ اَنْ جَآءَكُمْ ذِكْرٌ مِّنْ رَّبِّكُمْ عَلٰی رَجُلٍ مِّنْكُمْ لِیُنْذِرَكُمْ ؕ— وَاذْكُرُوْۤا اِذْ جَعَلَكُمْ خُلَفَآءَ مِنْ بَعْدِ قَوْمِ نُوْحٍ وَّزَادَكُمْ فِی الْخَلْقِ بَصْۜطَةً ۚ— فَاذْكُرُوْۤا اٰلَآءَ اللّٰهِ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟
“உங்களை எச்சரிப்பதற்காக உங்களில் ஒரு மனிதர் மீது உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நல்லுபதேசம் வந்ததைப் பற்றி நீங்கள் வியப்படைகிறீர்களா? நூஹுடைய சமுதாயத்திற்கு பின்னர் அவன் உங்களை (இந்த பூமியின்) பிரதிநிதிகளாக்கி வைத்து, படைப்பில் உங்களுக்கு விரிவை (ஆற்றலை, வசதியை) அதிகப்படுத்திய சமயத்தை நினைவு கூருங்கள். நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வின் அருட்கொடைகளை நினைவு கூருங்கள்!”
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
قَالُوْۤا اَجِئْتَنَا لِنَعْبُدَ اللّٰهَ وَحْدَهٗ وَنَذَرَ مَا كَانَ یَعْبُدُ اٰبَآؤُنَا ۚ— فَاْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
(அதற்கு) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் ஒருவனை மட்டும் நாங்கள் வணங்குவதற்காகவும் எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை நாங்கள் விட்டுவிடுவதற்காகவும் நீர் எங்களிடம் வந்தீரா? ஆக, நீர் உண்மையாளர்களில் இருந்தால் நீர் எங்களை எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வருவீராக.”
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
قَالَ قَدْ وَقَعَ عَلَیْكُمْ مِّنْ رَّبِّكُمْ رِجْسٌ وَّغَضَبٌ ؕ— اَتُجَادِلُوْنَنِیْ فِیْۤ اَسْمَآءٍ سَمَّیْتُمُوْهَاۤ اَنْتُمْ وَاٰبَآؤُكُمْ مَّا نَزَّلَ اللّٰهُ بِهَا مِنْ سُلْطٰنٍ ؕ— فَانْتَظِرُوْۤا اِنِّیْ مَعَكُمْ مِّنَ الْمُنْتَظِرِیْنَ ۟
(ஹூது) கூறினார்: “உங்கள் இறைவனிடமிருந்து தண்டனையும் கோபமும் உங்கள் மீது நிகழ்ந்து விட்டது. நீங்களும் உங்கள் மூதாதைகளும் வைத்த (சிலைகளின்) பெயர்களில் என்னுடன் தர்க்கிக்கிறீர்களா? அதற்கு ஓர் ஆதாரத்தையும் அல்லாஹ் இறக்கவில்லை(யே)! ஆகவே, எதிர்பாருங்கள்; நிச்சயமாக, நான் உங்களுடன் எதிர்பார்ப்பவர்களில் இருக்கிறேன்.”
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
فَاَنْجَیْنٰهُ وَالَّذِیْنَ مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا وَقَطَعْنَا دَابِرَ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَمَا كَانُوْا مُؤْمِنِیْنَ ۟۠
ஆக, அவரையும் அவருடன் இருந்தவர்களையும் நமது கருணையினால் பாதுகாத்தோம். நம் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களின் வேரை அறுத்தோம் (அடியோடு அவர்களை அழித்தோம்). அவர்கள் நம்பிக்கையாளர்களாக இருக்கவில்லை.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
وَاِلٰی ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًا ۘ— قَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ— قَدْ جَآءَتْكُمْ بَیِّنَةٌ مِّنْ رَّبِّكُمْ ؕ— هٰذِهٖ نَاقَةُ اللّٰهِ لَكُمْ اٰیَةً فَذَرُوْهَا تَاْكُلْ فِیْۤ اَرْضِ اللّٰهِ وَلَا تَمَسُّوْهَا بِسُوْٓءٍ فَیَاْخُذَكُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
இன்னும் ‘ஸமூது’ (சமுதாயத்தினரு)க்கு அவர்களுடைய சகோதரர் ‘ஸாலிஹ்’ ஐ (நபியாக அனுப்பி வைத்தோம்). அவர் கூறினார்: “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள். அவன் அன்றி (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் யாரும் உங்களுக்கில்லை. உங்கள் இறைவனிடம் இருந்து ஓர் அத்தாட்சி உங்களிடம் திட்டமாக வந்துவிட்டது. இது உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக (வந்த) அல்லாஹ்வுடைய ஒட்டகமாகும். ஆகவே, அதை (தொந்தரவு செய்யாமல்) விட்டுவிடுங்கள், அல்லாஹ்வுடைய பூமியில் அது (சுற்றித்திரிந்து) மேயும். அதற்கு அறவே தீங்கு செய்யாதீர்கள். (அவ்வாறு செய்தால்) துன்புறுத்தும் தண்டனை உங்களை வந்தடையும்.”
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
 
ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាល់អាក់រ៉ហ្វ
សន្ទស្សន៍នៃជំពូក លេខ​ទំព័រ
 
ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ - សន្ទស្សន៍នៃការបកប្រែ

ដោយលោកអូម៉ើ ស្ហើរុីហ្វ ពិន អាប់ឌុស្សាឡាម

បិទ