ការបកប្រែអត្ថន័យគួរអាន - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

លេខ​ទំព័រ:close

external-link copy
34 : 14

وَاٰتٰىكُمْ مِّنْ كُلِّ مَا سَاَلْتُمُوْهُ ؕ— وَاِنْ تَعُدُّوْا نِعْمَتَ اللّٰهِ لَا تُحْصُوْهَا ؕ— اِنَّ الْاِنْسَانَ لَظَلُوْمٌ كَفَّارٌ ۟۠

நீங்கள் அவனிடம் கேட்டதிலிருந் தெல்லாம் உங்களுக்கு (தன் அருளை) தந்தவன். அல்லாஹ்வின் அருளை நீங்கள் கணக்கிட்டால் அதை நீங்கள் எண்ண முடியாது! நிச்சயமாக (நம்பிக்கை கொள்ளாத) மனிதன் மகா அநியாயக்காரன், மிக நன்றி கெட்டவன் ஆவான். info
التفاسير:

external-link copy
35 : 14

وَاِذْ قَالَ اِبْرٰهِیْمُ رَبِّ اجْعَلْ هٰذَا الْبَلَدَ اٰمِنًا وَّاجْنُبْنِیْ وَبَنِیَّ اَنْ نَّعْبُدَ الْاَصْنَامَ ۟ؕ

இப்ராஹீம் கூறியபோது, என் இறைவா! இவ்வூரை அபயமளிப்பதாக ஆக்கு! என்னையும் என் பிள்ளைகளையும் நாங்கள் சிலைகளை வணங்குவதை விட்டு தூரமாக்கு! info
التفاسير:

external-link copy
36 : 14

رَبِّ اِنَّهُنَّ اَضْلَلْنَ كَثِیْرًا مِّنَ النَّاسِ ۚ— فَمَنْ تَبِعَنِیْ فَاِنَّهٗ مِنِّیْ ۚ— وَمَنْ عَصَانِیْ فَاِنَّكَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟

என் இறைவா! நிச்சயமாக இவை மக்களில் பலரை வழி கெடுத்தன. ஆகவே, எவர் என்னைப் பின்பற்றினாரோ நிச்சயமாக அவர் என்னை சேர்ந்தவர்; எவர் எனக்கு மாறு செய்தாரோ... நிச்சயமாக நீ மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்; info
التفاسير:

external-link copy
37 : 14

رَبَّنَاۤ اِنِّیْۤ اَسْكَنْتُ مِنْ ذُرِّیَّتِیْ بِوَادٍ غَیْرِ ذِیْ زَرْعٍ عِنْدَ بَیْتِكَ الْمُحَرَّمِ ۙ— رَبَّنَا لِیُقِیْمُوا الصَّلٰوةَ فَاجْعَلْ اَفْىِٕدَةً مِّنَ النَّاسِ تَهْوِیْۤ اِلَیْهِمْ وَارْزُقْهُمْ مِّنَ الثَّمَرٰتِ لَعَلَّهُمْ یَشْكُرُوْنَ ۟

எங்கள் இறைவா! நிச்சயமாக நான் என் சந்ததிகளில் சிலரை புனிதமாக்கப்பட்ட உன் வீட்டின் அருகில், விவசாயமற்ற ஒரு பள்ளத்தாக்கில் அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவதற்காக வசிக்க வைத்தேன் எங்கள் இறைவா! ஆகவே, மக்களிலிருந்து (சிலருடைய) உள்ளங்களை அவர்கள் பக்கம் ஆசைப்படக்கூடியதாக ஆக்கு! அவர்கள் (உனக்கு) நன்றி செலுத்துவதற்காக கனிகளிலிருந்து அவர்களுக்கு உணவளி! info
التفاسير:

external-link copy
38 : 14

رَبَّنَاۤ اِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِیْ وَمَا نُعْلِنُ ؕ— وَمَا یَخْفٰی عَلَی اللّٰهِ مِنْ شَیْءٍ فِی الْاَرْضِ وَلَا فِی السَّمَآءِ ۟

எங்கள் இறைவா! நாங்கள் மறைப்பதையும், நாங்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக நீ அறிவாய். பூமியில், வானத்தில் எதுவும் அல்லாஹ்விற்கு மறையாது. info
التفاسير:

external-link copy
39 : 14

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ وَهَبَ لِیْ عَلَی الْكِبَرِ اِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ ؕ— اِنَّ رَبِّیْ لَسَمِیْعُ الدُّعَآءِ ۟

வயோதிகத்தில் எனக்கு இஸ்மாயீலையும் இஸ்ஹாக்கையும் வழங்கிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்; நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையை நன்கு செவியுறுபவன் ஆவான். info
التفاسير:

external-link copy
40 : 14

رَبِّ اجْعَلْنِیْ مُقِیْمَ الصَّلٰوةِ وَمِنْ ذُرِّیَّتِیْ ۖۗ— رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ ۟

என் இறைவா! என்னை தொழுகையை நிலைநிறுத்துபவனாக ஆக்கு! இன்னும் என் சந்ததிகளிலிருந்தும் (தொழுகையை நிலைநிறுத்துபவர்களை ஆக்கு!). எங்கள் இறைவா! இன்னும் என் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்! info
التفاسير:

external-link copy
41 : 14

رَبَّنَا اغْفِرْ لِیْ وَلِوَالِدَیَّ وَلِلْمُؤْمِنِیْنَ یَوْمَ یَقُوْمُ الْحِسَابُ ۟۠

எங்கள் இறைவா! எனக்கும், என் தாய் தந்தைக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் விசாரணை நிறைவேறுகிற நாளில் மன்னிப்பளி!” (என்று பிரார்த்தித்தார்). info
التفاسير:

external-link copy
42 : 14

وَلَا تَحْسَبَنَّ اللّٰهَ غَافِلًا عَمَّا یَعْمَلُ الظّٰلِمُوْنَ ؕ۬— اِنَّمَا یُؤَخِّرُهُمْ لِیَوْمٍ تَشْخَصُ فِیْهِ الْاَبْصَارُ ۟ۙ

(நபியே!) அக்கிரமக்காரர்கள் செய்வதைப் பற்றி கவனிக்காதவனாக அல்லாஹ்வை எண்ணி விடாதீர்! அவன் அவர்களை பிற்படுத்துவதெல்லாம், பார்வைகள் அதில் கூர்ந்து விழித்திடும் ஒரு நாளுக்காகத்தான். info
التفاسير: