លេខ​ទំព័រ:close

external-link copy
119 : 16

ثُمَّ اِنَّ رَبَّكَ لِلَّذِیْنَ عَمِلُوا السُّوْٓءَ بِجَهَالَةٍ ثُمَّ تَابُوْا مِنْ بَعْدِ ذٰلِكَ وَاَصْلَحُوْۤا اِنَّ رَبَّكَ مِنْ بَعْدِهَا لَغَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠

பிறகு, நிச்சயமாக உம் இறைவன், எவர்கள் அறியாமையின் காரணமாக கெட்டதைச் செய்து, அதற்கு பின்னர் அதிலிருந்து விலகி திருந்தி மன்னிப்புக்கேட்டு, (தங்களை) சீர்படுத்தினார்களோ அவர்களுக்கு நிச்சயமாக உம் இறைவன் அ(வர்கள் திருந்திய)தற்குப் பின்பு (அவர்களை மன்னித்து கருணை காட்டும்) மகா மன்னிப்பாளன், மிகக் கருணையாளன் ஆவான். info
التفاسير: |

external-link copy
120 : 16

اِنَّ اِبْرٰهِیْمَ كَانَ اُمَّةً قَانِتًا لِّلّٰهِ حَنِیْفًا ؕ— وَلَمْ یَكُ مِنَ الْمُشْرِكِیْنَ ۟ۙ

நிச்சயமாக இப்ராஹீம் நன்மையை போதிப்பவராக, அல்லாஹ்வுக்கு மிக பணிந்தவராக கொள்கை உறுதியுடையவராக இருந்தார். இணைவைப்பவர்களில் (ஒருவராக) அவர் இருக்கவில்லை. info
التفاسير: |

external-link copy
121 : 16

شَاكِرًا لِّاَنْعُمِهٖ ؕ— اِجْتَبٰىهُ وَهَدٰىهُ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟

அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராக (இருந்தார்). (அல்லாஹ்) அவரைத் தேர்ந்தெடுத்தான், நேரான பாதையில் அவரை நேர்வழி செலுத்தினான். info
التفاسير: |

external-link copy
122 : 16

وَاٰتَیْنٰهُ فِی الدُّنْیَا حَسَنَةً ؕ— وَاِنَّهٗ فِی الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِیْنَ ۟ؕ

இவ்வுலகில் அவருக்கு உயர்வைக் கொடுத்தோம். நிச்சயமாக அவர் மறுமையில் நல்லவர்களில் உள்ளவர் ஆவார். info
التفاسير: |

external-link copy
123 : 16

ثُمَّ اَوْحَیْنَاۤ اِلَیْكَ اَنِ اتَّبِعْ مِلَّةَ اِبْرٰهِیْمَ حَنِیْفًا ؕ— وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِیْنَ ۟

பிறகு, (நபியே!) நீர் கொள்கை உறுதியுடையவராக இருக்கின்ற நிலையில் இப்ராஹீமின் மார்க்கத்தை பின்பற்றுவீராக! என்று உமக்கு வஹ்யி அறிவித்தோம். அவர் இணைவைப்பவர்களில் இருக்கவில்லை. (ஹனீஃப்: உண்மை முஸ்லிம், கொள்கை உறுதியுடையவர், அல்லாஹ்வை மட்டும் வணங்கக்கூடியவர், அறவே இணை வைக்காதவர்.) info
التفاسير: |

external-link copy
124 : 16

اِنَّمَا جُعِلَ السَّبْتُ عَلَی الَّذِیْنَ اخْتَلَفُوْا فِیْهِ ؕ— وَاِنَّ رَبَّكَ لَیَحْكُمُ بَیْنَهُمْ یَوْمَ الْقِیٰمَةِ فِیْمَا كَانُوْا فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟

சனிக்கிழமையை(க் கண்ணியப்படுத்துவது கடமையாக) ஆக்கப்பட்டதெல்லாம், அதில் முரண்பட்டவர்கள் மீதுதான். நிச்சயமாக உம் இறைவன் மறுமை நாளில் அவர்களுக்கிடையில், அவர்கள் முரண்பட்டுக் கொண்டிருந்தவற்றில் தீர்ப்பளிப்பான். info
التفاسير: |

external-link copy
125 : 16

اُدْعُ اِلٰی سَبِیْلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُمْ بِالَّتِیْ هِیَ اَحْسَنُ ؕ— اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِیْلِهٖ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِیْنَ ۟

(நபியே!) ஞானம் இன்னும் அழகிய உபதேசத்தைக் கொண்டு உம் இறைவனுடைய பாதையின் பக்கம் (மக்களை) அழைப்பீராக! மிக அழகிய முறையில் அவர்களிடம் தர்க்கிப்பீராக! நிச்சயமாக உம் இறைவன்தான் அவனுடைய பாதையிலிருந்து வழி தவறியவரை மிக அறிந்தவன் ஆவான். இன்னும் அவன் நேர்வழி செல்வோரையும் மிக அறிந்தவன் ஆவான். info
التفاسير: |

external-link copy
126 : 16

وَاِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوْا بِمِثْلِ مَا عُوْقِبْتُمْ بِهٖ ؕ— وَلَىِٕنْ صَبَرْتُمْ لَهُوَ خَیْرٌ لِّلصّٰبِرِیْنَ ۟

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தண்டித்தால் நீங்கள் தண்டிக்கப்பட்டது போன்றே தண்டியுங்கள். நீங்கள் பொறுத்தால் அதுதான் பொறுமையாளர்களுக்கு மிக நல்லது! info
التفاسير: |

external-link copy
127 : 16

وَاصْبِرْ وَمَا صَبْرُكَ اِلَّا بِاللّٰهِ وَلَا تَحْزَنْ عَلَیْهِمْ وَلَا تَكُ فِیْ ضَیْقٍ مِّمَّا یَمْكُرُوْنَ ۟

(நபியே!) பொறுப்பீராக. அல்லாஹ்வைக் கொண்டே தவிர உம் பொறுமை இல்லை. அவர்கள் மீது கவலைப்படாதீர்; அவர்கள் சூழ்ச்சி செய்வதைப் பற்றி நெருக்கடியில் (நீர்) ஆகாதீர். info
التفاسير: |

external-link copy
128 : 16

اِنَّ اللّٰهَ مَعَ الَّذِیْنَ اتَّقَوْا وَّالَّذِیْنَ هُمْ مُّحْسِنُوْنَ ۟۠

நிச்சயமாக அல்லாஹ் (தன்னை) அஞ்சுபவர்களுடனும், நல்லறம் புரிபவர்களுடனும் இருக்கிறான். info
التفاسير: |

அந்நஹ்ல்